கருநாடகத்தில் பார்ப்பனத் திமிர்
கருநாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணா மடத்துக்கு மணிப்பாலைச் சார்ந்த வனிதா ஷெட்டி என்ற பெண் உதவிப் பேராசிரியர் கடந்த ஏப்.15ஆம் தேதி சென்றிருக் கிறார். அப்போது மடத்தில் இலவச உணவு பரிமாறப்பட்டது. பந்தியில் அமரச் சென்ற பேராசிரியரை சிலர் தடுத்து நிறுத்தி மேல் தளத்துக்குப் போய்ச் சாப்பிட கட்டளையிட் டுள்ளனர். கீழ்தளத்தில் நடக்கும் பந்தியில் ‘பிராமணர்கள்’ மட்டுமே அனுமதிக்கப்படு வார்கள் என்று கூறியவுடன், வனிதா ஷெட்டி அவமானப் பட்டு சாப்பிடாமலேயே வெளியேறி விட்டார். இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர். உடுப்பி மடத்தின்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். ‘பிராமணர்-பிராமணரல்லாதார்’ என்ற பாகு பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இதற்கான நேரம் நெருங்கி விட்டது என்று “கருநாடக சோமு சவுதார்தா வேதிகா சங்கம்” என்ற அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மைகள் அம்பலமான நிலையில் உடுப்பி கிருஷ்ணா கோயில் மடாதிபதி ‘வல்லப தீர்த்த சாமிஜி’ என்ற பார்ப்பனர்,...