கருநாடகத்தில் பார்ப்பனத் திமிர்
கருநாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணா மடத்துக்கு மணிப்பாலைச் சார்ந்த வனிதா ஷெட்டி என்ற பெண் உதவிப் பேராசிரியர் கடந்த ஏப்.15ஆம் தேதி சென்றிருக் கிறார். அப்போது மடத்தில் இலவச உணவு பரிமாறப்பட்டது. பந்தியில் அமரச் சென்ற பேராசிரியரை சிலர் தடுத்து நிறுத்தி மேல் தளத்துக்குப் போய்ச் சாப்பிட கட்டளையிட் டுள்ளனர். கீழ்தளத்தில் நடக்கும் பந்தியில் ‘பிராமணர்கள்’ மட்டுமே அனுமதிக்கப்படு வார்கள் என்று கூறியவுடன், வனிதா ஷெட்டி அவமானப் பட்டு சாப்பிடாமலேயே வெளியேறி விட்டார். இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர். உடுப்பி மடத்தின்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். ‘பிராமணர்-பிராமணரல்லாதார்’ என்ற பாகு பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இதற்கான நேரம் நெருங்கி விட்டது என்று “கருநாடக சோமு சவுதார்தா வேதிகா சங்கம்” என்ற அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மைகள் அம்பலமான நிலையில் உடுப்பி கிருஷ்ணா கோயில் மடாதிபதி ‘வல்லப தீர்த்த சாமிஜி’ என்ற பார்ப்பனர், ஏனைய ஏழு மடாதிபதிகளுடன் கலந்து பேசி இப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று இறங்கி வந்திருக்கிறார்.
கடவுளுக்கு சக்தி இல்லை என்பது அர்ச்சகர்களுக்கு புரியும்
கர்ப்பகிரகத்துக்குள் ஒவ்வொரு நாளும் ‘கடவுள்கள்’ அருகே நின்று வேத மந்திரம் ஓதி பூஜை சடங்குகளை செய்யும் ‘அர்ச்சகர்’களுக்கு கடவுளுக்கு எந்த சக்தியும் இல்லை என்பது நன்றாகவே தெரியும். சான்றாக அண்மையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. காஞ்சிபுரம் ‘ஏகாம்பரேசுவர்’ கோயிலில் சோமாஸ்கந்தன் மற்றும் ஏலவார்குழலி சாமி சிலைகள் சேத மடைந்துவிட்டதாகக் கூறி, புதிய அய்ம்பொன் சிலைகள் செய்வதற்காக பக்தர்களிடமிருந்து
8.7 கிலோ தங்கம் (ரூ.2.82 கோடி மதிப்பு) நன் கொடையாகப் பெறப்பட்டது. ஆனால், தங்கத்தைப் புதிய சிலைகளுக்குப் பயன்படுத் தாமல் மோசடி செய்யப்பட்டது கண்டறியப் பட்டது. இதற்கு மூளையாக செயல்பட்டவர் ‘பிராமண’ புரோகிதரான ராஜப்பா குருக்கள் (வயது 84). இந்தக் கோயிலில் எந்த மாற்றங்கள் செய்ய வேண்டுமானாலும், இந்த பார்ப்பன புரோகிதர் மட்டுமே ஆலோசனை கூறுவார். கோயிலை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். புதிய சிலைகள் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறியவரும் இவர்தான். சில அறநிலையத் துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யப் பட்டனர். ஆனால் ‘பிராமணர்’ ராஜப்பா மட்டும் கனடாவுக்கு தப்பி ஓடி விட்டார். ‘பிராமணர்’ கடல் தாண்டக் கூடாது என்பது சாஸ்திரம். தேவைப்பட்டால் ‘அவாள்’ மீறிக் கொள்வார்கள். தலைமறைவாகி விட்ட அர்ச்சகர் இந்தியாவுக்கு திரும்பினால் உடனே பிடித்து ஒப்படைக்குமாறு குடியேற்ற அதிகாரி களுக்கு முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது. கடந்த ஜூன் 22ஆம் தேதி மும்பை விமான நிலையம் வந்திறங்கிய பார்ப்பன அர்ச்சகர் கைது செய்யப்பட்டார். திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட இந்த ‘மோசடி’ அர்ச்சகருக்கு அடுத்த இரு நாள்களிலேயே பிணை கிடைத்து விட்டது. அரசு தரப்பிலும் அவரை பிணையில் விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ‘சாமி’ சிலைகளுக்கு சக்தி ஏதும் இல்லை என்பது அர்ச்சகர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் பல கோடி மோசடி செய்வதோடு தண்டனையிலிருந்தும் தப்பித்து விடுகிறார்கள். ‘சூத்திர’ பூசாரி ஒருவர் இதே திருட்டை செய்திருந்தால் இத்தகைய சலுகைகள் கிடைக்குமா? இரண்டே நாளில் பிணை கிடைத் திருக்குமா? மட்டுமல்ல; ஏடுகளும் இந்தச் செய்தியை பெரிதுபடுத்தி வெளியிடாமல் அடக்கி வாசித்தன. சில ஏடுகள் செய்திகளை வெளியிடவே இல்லை.
வேத மதமும் கத்தோலிக்க கிறிஸ்தவமும்
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுதிக்க மறுக்கிறது பார்ப்பன வேத மதம். பாகுபாடுகள் கூடாது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தாலும் தீர்ப்பை மதிக்க முடியாது என்று கேரளாவில் பா.ஜ.க. வினர் மட்டுமல்ல; காங்கிரசாரும் சேர்ந்து கொண்டு போர்க் கொடி தூக்கினர். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண்களை அனுமதிப்பதில் உறுதியாக இருந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வும் காங்கிரசும் இதையே தேர்தல் பிரச்சாரமாக முன் வைத்தன. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு. “உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று பல இலட்சம் பெண்களைத் திரட்டி, ‘மதில் சுவர்’ நடத்திய அடுத்த நாளே இரண்டு பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்தனர். இந்தப் பெண்கள் நுழைவுதான் தேர்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது. எதிர்க் கட்சிகள் இதை மய்யமாக்கிப் பிரச்சாரம் செய்தன” என்று கட்சி முடிவுக்கு வந்துள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வமான ஏடான ‘தேசாபிமானி’ இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
வேத பார்ப்பன மதம் இந்த நூற்றாண்டிலும் மதம் – பழக்க வழக்கம் என்ற பெயரால் ‘சூத்திரர்’ மற்றும் ‘பெண்’களைப் பாகுபடுத்தி அவமதிக்கிறது. அதே நேரத்தில் கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் காலத்துக்கேற்ப மாறுதலுக்கு தயாராகி வருகிறது. கடந்த ஜூன் 15ஆம் தேதி, கத்தோலிக்க தலைமையிடமான வாடிகனி லிருந்து போப் ஓர் ஆவணத்தை வெளியிட் டுள்ளார். கத்தோலிக்க பாதிரியார்கள் திருமண மாகாதவர்களாக இருக்க வேண்டும் என்ற சம்பிரதாயத்தை மாற்றி நல்ல ஒழுக்கமுள்ள திருமணமானவர்களை பாதிரியார் களாக நியமிக்க முடிவு செய்திருக்கிறது. அதேபோல் ‘சர்ச்சு’களை நிர்வகிக்கும் நிருவாக சபையிலும் பெண்களை நியமிக்கவும் முடிவு செய்துள்ளதாக அந்த ஆவணம் கூறுகிறது. அமேசான் போன்ற பகுதிகளில் திருமணமாகாத கத்தோலிக்கர்கள் பாதிரியாராக பணி செய்வதற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வாடிகன் இந்த மாற்றத்துக்கு முன் வந்துள்ளதாக ‘வாடிகன்’ வெளியிட்ட ஆவணம் கூறுகிறது. திருமணமானவர்கள் மூத்தவர்களாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை. ட
பெரியார் முழக்கம் 04072019 இதழ்