‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 10ஆம் கருத்தரங்கம்
‘நிமிர்வோம்’ மாத இதழின் பத்தாவது வாசகர் வட்ட சந்திப்பு 18.05.2019 அன்று சனிக்கிழமை, சென்னை மந்தைவெளி, செயின்ட் மேரிஸ் சாலை யில் அமைந்துள்ள அப்துல் கலாம் மண்டபத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கியது. நிகழ்விற்கு ந. தமிழரசன் தலைமை வகித்தார். இந் நிகழ்வில், மயிலை மனோகர் ‘பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். ‘பெரியாரின் கல்விச் சிந்தனைகள்’ குறித்து பெரியார் யுவராஜ் உரையாற்றினார். ‘இந்தியாவில் ஜாதிகள்’ என்ற புத்தகம் குறித்து துரையும், ‘நாடார் வரலாறு கருப்பா? காவியா?’ என்ற புத்தகம் குறித்து எட்வின் பிரபாகரனும் உரையாற்றினர். ‘இட ஒதுக்கீட்டின் இன்றைய நிலை’ குறித்து திவிக தலைமைக் குழு உறுப்பினர் கு.அன்பு தனசேகர் கருத்துரையாற்றினார். மேலும், சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த, திராவிட இயக்கச் சிந்தனையாளர் எழுத்தாளர் டான் அசோக், ‘இன்றைய இளைஞர்கள் திராவிட இயக்கம் குறித்து ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். இறுதியாக பிரவீன்குமார் நன்றியுரையாற்ற, நிகழ்வு இரவு பத்து மணிக்கு நிறைவடைந்தது. நிகழ்வை, சென்னை மயிலாப்பூர் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
பெரியார் முழக்கம் 13062019 இதழ்