பார்ப்பன ஆதிக்கத்தில் புதிய நாடாளுமன்றம்

17ஆவது நாடாளுமன்றத்தில் பார்ப்பன உயர்ஜாதியைச் சார்ந்தவர்கள் 232பேர். மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கு மேல் உள்ள பிற்படுத்தப்பட்டோரில் 120 பேர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

அரசியல் சட்டப்படி பட்டியல் இன / பழங்குடிப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால் பட்டியல் இனப் பிரிவில் 86 உறுப்பினர்களும் பழங்குடிப் பிரிவில் 52 பேரும் இடம் பெற்றுள்ளனர். மத அடிப்படையில் மைனாரிட்டிகள் 52 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற 38 இடங்களில் வெற்றி பெற்றவர்களில்

30 பேர் பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட் டவர், தாழ்த்தப்பட்டவர்

7 பேர், பார்ப்பனர் ஒருவர் (கோவை நாடாளுமன்ற உறுப்பினர்).

ஆனால் மற்ற மற்ற மாநிலங்களின் நிலை என்ன? மொத்தம் 542 உறுப்பினர்களில் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்ஜாதியினரின் எண்ணிக்கை 232, பிற்படுத்தப்பட்டவர் 120, தாழ்த்தப்பட்டவர் 86, மலைவாழ்மக்கள் 52 பேர், சிறுபான்மையினர் 52 பேர்.

தெலுங்கானாவை எடுத்துக்கொண்டால் மொத்தம் 17 பேர்களில் பார்ப்பனர்

7 பேர், பிற்படுத்தப்பட்டவர் 3 பேர், தாழ்த்தப்பட்டவர் 5 பேர், டில்லியில் 5 பேர் பார்ப்பனர், ஒருவர் பிற்படுத்தப்பட்டவர், மற்றவர் தாழ்த்தப்பட்டவர்.

ஒட்டு மொத்தமாக சொல்லப்போனால் பிஜேபி சார்பில் 105 பார்ப்பனர்களும், காங்கிரசு சார்பில் 12 பார்ப்பனர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தப் புள்ளி விவரங்கள் கூறுவது என்ன?

பாரதீய ஜனதா என்றாலே பார்ப்பன ஜனதா என்பது தெளிவாகவில்லையா? 100க்கு 3 சதவீதத்தினருக்கு எப்படி 105 இடங்கள்.

சித்தாந்த ரீதியான போராட்டம் என்பது தமிழ்நாட்டில் தான் நடந்திருக்கிறது – மற்ற மாநிலங்களில் அது நடைபெறாததற்குக் காரணம் தமிழ்நாட்டைப் போல் தந்தை பெரியார் கண்ட இயக்கம் இல்லாதது தான்.

பிஜேபி ஆட்சி என்பது சமுகநீதிக்கு எதிரான ஆட்சியே!

பெரியார் முழக்கம் 06062019 இதழ்

You may also like...