ஜாதி சங்கங்களுக்கு தடை போடுக: மலேசியாவில் தமிழர் தனமான இயக்கம் பிரதமரிடம் மனு

மலேசியாவில் இயங்கும் ஜாதி சங்கங் களின் பதிவை நீக்கம் செய்ய வேண்டும் என்று மலேசிய தமிழர் தன்மான இயக்கம், மலேசிய பிரதமரிடம் நேரில் மனு அளித்துள்ளது. இது குறித்து அமைப்பு சார்பில் செயலாளர் விந்தைக் குமரன் விடுத்துள்ள அறிக்கை:

தமிழர்கள் சாதியெனும் கொடிய உணர்வால் பிரிந்து கிடக்கிறோம். சாதி அடையாளத்தை வெளிப்படையாக சொல்வதற்கு வெட்கப்படும் இந்த காலத்தில்…. சாதியின் பெயரால் சங்கங்கள் அமைத்து செயல்படுவோரும் உண்டு. இது தமிழர்களை மேலும் பிரிப்பது மட்டுமல்லாது இழிவுப்படுத்தும் செயலே… சாதியற்ற தமிழராக ஒற்றுமை நிறைந்த இனமாக நாம் வாழ வேண்டும். அரசு வழியாக சாதியை ஒழிப்பதற்கு… இந்நாட்டில் இயங்குகின்ற சாதி சங்கங்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என மனு ஒன்று மலேசிய நாட்டுப் பிரதமரிடம் அளிக்கப்பட்டது. மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் முன்னெடுப்பில், தமிழர் ஒற்றுமை பேணும் இயக்கங்களின் ஒத்துழைப்புடன் இந்த மனு அளிக்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 20062019 இதழ்

You may also like...