‘ஏப்.30 – சென்னை மாநாடு தோழர்களே திரளுவீர்!’
‘ஏப்.30 – சென்னை மாநாடு தோழர்களே திரளுவீர்!’ ஏப்.30 – சென்னை மாவட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்துக்கு அடித்தளமாகச் செயல்பட்டு ‘எதிரிகள் – துரோகிகளால்’ வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட களப்பணியாளர் பத்ரிநாராயணன் நினைவு நாள். பத்ரியின் நினைவு நாளில் சென்னையில் மண்டல மாநாட்டையும், திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது. ‘நிலம் பாழ் – நீர் மறுப்பு – ‘நீட்’ திணிப்பு – தன்மான தன்னுரிமை மீட்பு மாநாடு’ என்று காலத்தின் தேவைக்கேற்ற தலைப்போடு மாநாடு நடக்கிறது. மாநாட்டை விளக்கி நகரம் முழுதும் சுவரெழுத்துகளை தோழர்கள் எழுதி வருகிறார்கள். மாநாட்டின் நோக்கம் காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு இழைத்த அநீதிகளை விளக்கி இது வரை 50,000 துண்டறிக்கைகளை மாநகர் முழுதும் தோழர்கள் பகுதி பகுதியாகச் சென்று மக்களிடம் வழங்கி, நிதி திரட்டி வருகிறார்கள். கழகச் செயல் வீரர்கள் ஒவ்வொரு நாளும் கழகக் கொடி துண்டறிக்கைகளுடன் புறப்பட்டு,...