‘கதுவா’ கொடூரம்: அய்.நா. பொதுச்செயலாளர் கண்டனம்
கதுவா, பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக முன் வந்திருப்பதற்குக் காரணம், பிரச்சினை அய்.நா. மன்றம் வரை எதிரொலித்தது தான்.
“கதுவாவில் 8 வயது சிறுமி, 8 பேர் கொண்ட கும்பலால் பாலுறவு வன்முறைக்கு உள்ளாகிய சம்பவம் கொடூரமானது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி, நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது” என்று அய்.நா.வின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் கூறி யுள்ளார். கதுவா கொடூரம் இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகிவிட்டது.
அய்.நா. பொதுச் செயலாளர் தெரிவித்த இந்த கருத்து குறித்து, அவரது அதிகாரபூர்வ பேச்சாளர் டுஜாரிக்கிடம் செய்தியாளர் கேட்டனர். குற்றவாளிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அய்.நா.வின் பொதுச் செயலாளர் கண்டனத்துக்குப் பிறகுதான் பா.ஜ.க. இறங்கி வந்து அமைச்சர்களை பதவி விலகச் செய்திருக்கிறது.
பெரியார் முழக்கம் 19042018 இதழ்