பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நிலமோசடி : ரூ. 300 கோடியை சுருட்டிய ‘ஆன்மிகவாதி’ ராம்தேவ்!

சாமியார் ராம்தேவ், ‘பதஞ்சலி’ என்ற தனது நிறு வனத்தின் மூலம் தரமற்ற பொருட்களை வியாபாரம் செய்து, நாட்டின் முக்கியமான பெருங் கோடீஸ்வரர்களில் ஒருவராக மாறியிருக்கிறார். குறிப்பாக, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, அவரது ‘பதஞ்சலி’ நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற் றுள்ளது. கடந்த 2016-17ஆம் ஆண்டில் மட்டும் ‘பதஞ்சலி’ பொருட்கள் மூலம் சாமியார் ராம்தேவ் ரூ. 9 ஆயிரம் கோடியை வாரிக் குவித்துள்ளார். இந்நிலை யில், நிலமோசடி மூலம் ரூ. 300 கோடி அளவிற்கு, மக்கள் பணத்தை, ராம்தேவ் விழுங்கி யிருப்பது தெரிய வந்துள்ளது. 2013இல் பாஜக ஆட்சிக்கு வரும் முன்புவரை, ஒரு ஆண்டு முழு வதுமே 1000 கோடிக்குத்தான் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் வர்த்தகம் செய்து வந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் மட்டும் 950 கோடி ரூபாய் அளவிற்கு அந்த நிறுவனம் இலாபம் கண்டது. மொத்தமாக அந்த வருட இறுதியில் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாயாக அது உயர்ந்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பதஞ்சலி நிறுவனம் மிகவும் மோசமான நிலையில் தான் இருந்துள்ளது. தன்னிடமிருந்து நிலங்களை எல்லாம் விற்கும் அளவிற்கு அந்த நிறுவனம் போனது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, படுவேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலத்தை விற்றது என்றால், மோடி ஆட்சியில் மாநிலம் தோறும் நிலங்களை வாங்கி குவித் துள்ளது. குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டுள்ளது. நில ஏலங்களில் பங்கேற்ற பதஞ்சலி நிறுவனத்திற்கு, நிர்ணயிக்கப் பட்ட ஏலத் தொகை பின்னர் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மொத்தமாக 300 கோடி வரை, மக்களின் வரிப்பணம் பதஞ்சலி நிறுவனத்திற்கு சூறை விடப்பட்டுள்ளது. மார்க்கெட் விலையைவிட 77 சதவிகிதம் குறைவாக, 2000 ஏக்கர் நிலம் வரை சாமியார் ராம்தேவ் வாங்கி இருக்கிறார். அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில்தான் பல நூறு ஏக்கர் நிலங்களை ராம்தேவ் வளைத்துள்ளார்.

ராம்தேவ் – மாநில பாஜக அரசுகள் இணைந்து நடத்திய இந்த முறைகேடுகளை, ராய்ட்டர்ஸ் என்று ஆங்கில ஊடகம் அம்பலப்படுத்தி யுள்ளது. பதஞ்சலி நிறுவனத் திற்கு, பாஜக ஆளும் மாநிலங் களில் எப்படி எல்லாம் உதவி அளிக்கப்பட்டு உள்ளது என்று கண்டுபிடித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

பெரியார் முழக்கம் 19042018 இதழ்

You may also like...