Category: குடி அரசு 1934

அருஞ்சொல்  பொருள்

அருஞ்சொல்  பொருள்

  அசூயை                          பொறாமை,  அவதூறு அத்தியந்தம்                               மிகவும் அந்தர்                               தலைகீழாய்  பாயும்  செயல் ஆத்மீகம்                       தன்வினை  பற்றி  வரும்  துன்பம் ஆஸ்பதம்                     இடம்,  பற்றுக்கோடு இத்யாதி                         இவை  போன்ற உதார  குணம்                            பெருங்கொடைத்  தன்மை உபமாக                           இரண்டாவதாக உற்பவித்தல்                             தோன்றுதல்,  பிறப்பித்தல் ஒரு  அம்மன் காசு  அளவு                  புதுக்கோட்டை  அரசர்கால  நாணய  வகை 320  அம்மன்  காசு = 1  ரூபாய் கண்டனை                    மறுப்பு கல்லுக்கும்                 இரத்தினத்துக்கும் காயம்                               உடல் குண்டுணி                     கலகமூட்டுகை சம்சயம்                          அய்யம்,  சந்தேகம் சரீராப்பியாசம்                         உடற்பயிற்சி சவுத்தல்                        விலைபடாமலிருத்தல் சாய்கால்                        செல்வாக்கு சாவோலை                 இழவோலை  (சாவை  அறிவிக்கும்  மடல்) சுங்கான்                          கப்பல்  திருப்பும்  கருவி தர்பித்தல்                     நிலைபெறச்  செய்தல்,  பிரதிட்டை  செய்தல்,  பயிற்சி  கொடுத்தல். திருஷ்டாந்தம்                         எடுத்துக்காட்டு தியங்க                            கலங்க திரேகப்பிரயாசை                  உடலுழைப்பு துரபிமானம்                                வீண்செருக்கு,  வெறுப்பு தூஷணம்                      பழிப்பு நாதனற்று                    தலைவர்  இல்லாமல் நிர்த்தாரணம்                             நிலையிடுகை,  அழிதல்,  சிதைதல் பச்சகானாக்கள்                        கூத்தாட்டுச்  சிறார்கள் பஞ்சேந்திரியம்                       மெய், ...

எழுத்தில்  சீர்திருத்தம்

எழுத்தில்  சீர்திருத்தம்

  தமிழ்பாஷை  எழுத்துக்கள்  வெகு  காலமாகவே  எவ்வித  மாறுதலும்  இல்லாமல்  இருந்து  வருகின்றன. உலகில்  உள்ள  பாஷைகள்  பெரிதும்  சப்தம்  ,  குறி,  வடிவம்,  எழுத்துக்கள்  குறைப்பு,  அவசியமான  எழுத்துக்கள்  சேர்ப்பு  ஆகிய  காரியங்களால்  மாறுதல்  அடைந்து  கொண்டே  வருகின்றன. கால  வர்த்தமானங்களுக்கு  ஏற்ப  பாஷைகளும்,  சப்தங்களும்,  உச்சரிப்புகளும்,  வடிவங்களும்  மாறுவது  இயல்பே  யாகும். வார்த்தைகள்  கருத்தை  வெளியிடுவதற்கு  ஏற்பட்டவைகள்  என்பது  போலவே  எழுத்துக்கள்  சப்தத்தை  உணர்த்த    ஏற்பட்டவைகளேயாகும். ஆனால்  நம்  பண்டிதர்களுக்கு  தாராளமாய்  அறிவைச்  செலுத்த  இடமில்லாமல்  மதம்  பழக்க  வழக்கம்   ஆகியவைகள்  குறுக்கிட்டு  விட்டதால்  எழுத்துக்களுக்கும்,  அதன்  கோடுகளுக்கும்,  வடிவங்களுக்கும்  தத்துவார்த்தம்  கற்பிக்க வேண்டிய  அவசிய மேற்பட்டு  எழுத்துக்களையே  தெய்வமாகவும்  தெய்வ  வடிவமாகவும்  கருத வேண்டிய  நிலை  நம்  நாட்டில்  ஏற்பட்டு  விட்டது. தற்காலம்  எத்தனையோ  புதிய  வார்த்தைகள்  வந்து  நமது  தமிழ்  பாஷையில்  புகுந்து  கொண்டன.  அவைகளை  இனி  விலக்க முடியவே  முடியாது.  விலக்குவதும்  புத்திசாலித்தனமாகாது.  அப்பேர்ப்பட்ட ...

தோழர்  சிவலிங்கம்  மரணம்

தோழர்  சிவலிங்கம்  மரணம்

  நமது நண்பரும்,  சுயமரியாதை  இயக்க  பிரமுகருமான  ஜலகண்டாபுரம்  தோழர்  சி.கு.சிவலிங்கம்  அவர்கள்   221234ந்  தேதி  தமது  58  வது  வயதில்  காலஞ்  சென்றாரென்ற  செய்தி  கேட்டதும்  திடுக்கிட்டுப் போனோம். தோழர்  சிவலிங்கம்  அவர்கள்  வயது  சென்றவராயிருந்தாலும்  அங்குள்ள  சுயமரியாதை  தோழர்கட்கு  ஊக்கமளித்து  சுயமரியாதை  பிரசாரம்  செய்து  வந்தார். இவர்  ஜலகண்டாபுரம்  யூனியன்  போர்டிற்கு  ஆறாண்டு  தலைவராகவிருந்து  பல  அரிய  வேலைகள் செய்து  வந்தார்.  இப்படிப்பட்ட  பெரியார்  காலஞ்  சென்றதற்கு  வருந்துவதுடன்  நமது  அனுதாபத்தை  அவரது  குடும்பத்தாருக்கும்  அவருடைய  நண்பர்கட்கும்  தெரிவித்துக் கொள்ளுகிறோம். பகுத்தறிவு  இரங்கல் செய்தி  30.12.1934

குடி  அரசு

குடி  அரசு

அடுத்த  வாரம்  அதாவது  ஜனவரி  மாதம்  6 ந் தேதி  வெளியாகும்  பத்திரிகை   “குடி  அரசு’  என்னும்  பேரால்  (அது  நின்று  போன  9வது மாலை 22வது  மலரிலிருந்து 23வது  மலராக) வெளியிடலாம்  என்று  கருதி  இருக்கிறோம்.  அதற்கு  வேண்டிய  ஏற்பாடுகள் அவசரமாய்  நடைபெறுகின்றன. தபால் அதிகாரிகள் அனுமதி அவசரமாய்  எதிர்பார்க்கப்படுகிறது. பகுத்தறிவு  அறிவிப்பு  30.12.1934

பார்ப்பன  விஷமம்

பார்ப்பன  விஷமம்

  ஜஸ்டிஸ்  கட்சி மீது மக்களுக்கு  நம்பிக்கை  இல்லையா? இந்திய  சட்டசபைத் தேர்தலில்  பார்ப்பனர்கள் காங்கிரஸ்,  காந்தி  என்கின்ற  பேர்களால்  செய்யப்பட்ட  ஏமாற்றுப் பிரசாரத்தின்  பயனாயும்,  இந்திய  சட்டசபை  ஸ்தானத்தைப்  பற்றி   ஜஸ்டிஸ்  கக்ஷியார்  தக்கபடி  கவலைப்படாத  காரணத்தாலும்  பார்ப்பனர்கள்  தாங்கள்  வெற்றி  பெற்று விட்டோம்   என்கின்ற ஆணவத்தால்  தலைகால்  தெரியாமல்  குதிக்கிறார்கள். தோழர்  சத்தியமூர்த்தி  ஐயர்  அவர்கள் மேடையில்  வாயைத் திறந்தால் யாரையும்  அவன்,இவன், அயோக்கியன் என்று இழி தன்மையாய்ப்  பேசுவதும், ஹோம்  மெம்பரை  ராஜீனாமா  செய்ய  செய்ய வேண்டு மென்றும்,  லாமெம்பரை  ராஜீனாமாச்  செய்யச்  செய்ய  வேண்டுமென்றும்  கவர்னரை  உத்திரவு  போடச்  சொல்லுவதும், சட்டசபைகளைக்  கலைக்க வேண்டுமென்பதும் தோழர்  ராஜகோபாலாச்சாரி கவர்னராகவும்,  தான்  சீப் செகரட்டரியாகவும்  (பிரதானக்   காரியதரிசியாகவும்)  வரப் போகிறோம்  என்பதுமான தலை  கிருகிருத்த  பேச்சுகளாகவே  பேசி  வருகிறார். இதற்கும் சில பார்ப்பனக்  கூலிகள்  பின்  பாட்டு  பாடுவதும் கை தாளம்  போடுவதுமான  மானங்கெட்ட  செய்கைகளுக்கு  உட்பட்டு ...

சுயமரியாதை  மகாநாடுகள்

சுயமரியாதை  மகாநாடுகள்

  சுயமரியாதை  மகாநாடுகள்  தமிழ்நாட்டில்  ஜில்லாக்கள்,  தாலூக்காகள்  தோறும்  வாரம் தவறாமல்  அடுத்துஅடுத்து நடந்து வந்தது  நேயர்கள்  அறிந்ததாகும். தோழர் ஈ.வெ. ராமசாமி  ராஜத் துவேஷக் குற்றத்திற்காக  சிறைசென்ற  பின்  சுயமரியாதை  சங்க  நிர்வாகக் கமிட்டியார்  கூடி மகாநாடுகள்  கூட்டக்கூடாது  என்று கண்டிப்பான  உத்திரவு  போட்டதான  தீர்மானம்  நிறைவேற்றியதையே  காரணமாய் வைத்து,  5, 6  மாத காலமாக  மகாநாடுகளே  எங்கும் நடக்காமல்  போய்விட்டது  என்பது  ஒரு காரணமாய்  இருந்தாலும்  அந்தத் தீர்மானம்  திருச்சி நிர்வாக  சபைக்  கூட்டத்தில்  ஓரளவு  தளர்த்தப்பட்டு  இருந்தும்  வேறு  பல காரணங்களால் தீர்மானம் தளர்த்தப்பட்டதை  வெளியிடாமலும்,  பல இடங்களில்  இருந்து மகாநாடு  நடத்தவேண்டும்  என்று முயற்சித்த  முயற்சிகளையும்  உற்சாகப் படுத்தாமல்  இருந்து வந்திருக்கிறது.  அதாவது  சுமார் நான்கு   மாதங்களுக்கு  முன்  பகுத்தறிவு   3வது  மலரின்  தலையங்கமொன்றில்  “”நாம்  எப்படி நடந்து  கொள்ள  வேண்டும்”  என்கின்ற  தலைப்பு கொண்ட  தலையங்கத்தில்  “”சமீபத்தில்  நடைபெறப் போகும்  ஜஸ்டிஸ்  கட்சி  மகாநாடும், ...

ஜஸ்டிஸ் கட்சியும் பார்ப்பனப்  பத்திரிகைகளும்

ஜஸ்டிஸ் கட்சியும் பார்ப்பனப் பத்திரிகைகளும்

  விருதுநகரில்  தலைவர்கள்  மகாநாடு ஜஸ்டிஸ்  கட்சி  இந்திய  சட்ட சபைத்  தேர்தலில்  தோல்விஅடைந்து  விட்டது. அதற்குக் காரணம்  இருவகைப்படும். ஒன்று  ஜஸ்டிஸ்  கட்சிக்கு  எல்லா இந்திய அரசியல்  கிளர்ச்சியில்  விசேஷ  கவனம் செலுத்த  அவசியமில்லை.  அது  செலுத்தவும் முடியாது.  ஏனெனில்  ஜஸ்டிஸ் கட்சிக்கு  எல்லா  இந்திய  ஸ்தாபனம் என்பதாக ஒரு ஸ்தாபனம்   இல்லை என்பதோடு  ஜஸ்டிஸ்  கட்சி  ஏற்படுத்தப் பட்டதற்குக் காரணமே  தென் இந்திய  பார்ப்பனர்களின் கொடுமையைத்  தாங்க மாட்டாமல்  அதிலிருந்து தப்பி  ஒருவாறு  விடுதலை  பெற  வேண்டிய அவசியமேயாகும். ஆனால்  அதன்  எதிரிகளாகிய  பார்ப்பனர்கள்  அக்கட்சியை  ஒழிக்க  அரசியல்  போர்வையை  போத்திக்  கொண்டு  அதற்குள் இருந்து எதிர்த்து  வந்ததால்,  ஜஸ்டிஸ்  கட்சியும்  தனது லட்சியத்திற்கு  அரசியல் சம்மந்தமும்  வைத்துக்  கொள்ள  வேண்டியதாயிற்று  என்றாலும்  பார்ப்பனர்களுடைய  அரசியல் வேஷம்  எல்லா இந்தியாவைப்  பொருத்ததாகவும்,  ஜஸ்டிஸ்  கட்சியாருடைய அரசியல் சம்பந்தம் சென்னை மாகாணத்தை மாத்திரம் பொருத்ததாகவும் இருந்ததால் அரசியலில்   பார்ப்பனர்களோடு  சரியாய்ப் ...

விருதுநகரில் காலித்தனம்

விருதுநகரில் காலித்தனம்

  காங்கிரஸ்  பிரமுகர்கள்  விருதுநகர்  சென்றிருந்த சமயம்  ஊர்வலத்தில்  செருப்பு  வீசி  எறியப்பட்டதாகவும்,  பொதுக்  கூட்டத்தில்  கற்கள்  வீசி  எறியப்பட்டதாகவும் தமிழ்நாடு,  ஜஸ்டிஸ்  முதலிய பத்திரிக்கைகளில்  காணப்பட்டது. இது உண்மையாய்  இருக்குமானால்  அதை ஒரு பக்காகாலித்தனம்  என்றும், இதற்கு ஆதரவாய்  இருந்த விருதுநகர்  தோழர்களுக்கு  இது  ஒரு  பெரிய  அவமானகரமான  காரியமென்றும் வலிமையாய்க்  கூறுகிறோம். நம் நாட்டு அரசியல்  வாழ்க்கை  என்பது எவ்வளவு  கேவல மானதாக  இருந்தாலும்  அது  பெரிதும்  வகுப்பு  போராட்டத்தன்மையை  உட்கருத்தாய்க்  கொண்டு  வெளிப்படையான  போட்டி  முறையில்  நடந்து வருகின்றது  என்பதை  எவரும்  மறுக்க  முடியாது. இந்நிலையில்  இருபுறமும்  போட்டியில்  கலந்து கொள்ள  எவருக்கும்  உரிமை இருக்கின்றது  என்பதை  நாம் மறுக்க வரவில்லை. அப்போட்டிகளில்  பல  சூட்சிகள்,  பொய்,  புரட்டுகள்  உபகருவிகளாய்  பயன்படுத்தப்பட்டு  வருவதும்  சகஜமான  காரியமாய் இருந்து  வருகிறது.  கால நிலையில்  இவைகள் எல்லாம்  அனுமதிக்கத்தக்கதாக  இருந்து வந்தாலும்  காலித்தனங்கள்  என்பவைகளைக்  கண்டிக்காமல்  இருக்க முடியவில்லை.  கூட்டத்தில் ...

திருச்சி  நகரத்தின்  பெருமை

திருச்சி  நகரத்தின்  பெருமை

  திருச்சிக்காரர்கள்  தாங்களே  ஜஸ்டிஸ்  கட்சிக்காரர்கள்  என்று  ஜம்பம்  அடித்துக் கொள்வதோடு  ஜஸ்டிஸ்  கட்சிக்கு  தாங்களே  கோட்டை  காவலர்கள்  என்றும்  பெருமை பேசிக் கொண்டு  அடிக்கடி  அக்கட்சியின் மீது  அதிகாரம்  செய்யும் விஷயத்திலும்  சிறிதும்  பின்வாங்குவதில்லை  என்பதோடு  எல்லோருக்கும்  முன்னணியில்  வந்தும்  நின்று கொள்ளுவார்கள். ஆனால்  காரியத்திலோ  என்றால்  லொட்டையையே தான்  காண  முடிகின்றது. நாம்  இப்படிச் சொல்வதற்குக்  கூட  கோபித்துக் கொண்டு  நமக்கும்  புத்தி  சொல்ல  வந்துவிடுவார்கள்.  அதனால்  உள்ள நிலைமையை  மறைத்துவிடமுடியாது. புதிய  சீர்திருத்தம்  ஏற்பட்ட காலம் முதல்  ஒரு  ஆசாமியையாவது  திருச்சி  தொகுதியானது  இந்திய சட்டசபைக்கு  நிறுத்தியதும் கிடையாது,  அனுப்பியதும் கிடையாது  என்ற  பெருமை  திருச்சிக்கு  உண்டு  என்று  சொல்வதற்கு  யாரும் கோபித்துக்  கொள்ள மாட்டார்கள். அது மாத்திரமல்லாமல்  இந்த  10  வருஷ  காலமாய் சென்னை  சட்டசபைக்கு  கூட ஜஸ்டிஸ்  கட்சியின்  பேரால்  ஒருவரையாவது  அனுப்ப  அவர்களுக்கு  முடியவில்லை  என்று  சொல்வதற்கும்  கோபித்துக் கொள்ளமாட்டார்கள்  என்றே நினைக்கிறோம். ...

ஆசிரியர்கள்  மகாநாடு

ஆசிரியர்கள்  மகாநாடு

  பிள்ளைகளைப்பற்றிய  கவலை  இல்லை எங்கு  பார்த்தாலும்  ஆசிரியர்கள்  மகாநாடுகள்  கூட்டப்படுவதும்,  ஆசிரியர்களின்  சம்பளங்கள் போதாது  என்று  தீர்மானங்கள்  நிறைவேற்றப்படுவதும்,  மந்திரிகள் முதலிய  பெரிய  சம்பளக்காரர்களும்,  செல்வவான்களும்  ஆசிரியர்களை  வாழ்த்தி  ஆசீர்வதிப்பதுமாகவே  இருந்து  வருகின்றதே  ஒழிய, பிள்ளைகள்  சம்பளம்   கொடுக்கச் சக்தி இல்லாமல்  பள்ளிக்குப் போக  முடியாமல்  கல்விப் பட்டினியாய்  இருந்து  தற்குறிகளாகி  100க்கு  92  பேர்  எழுத்து  வாசனை  அற்ற குருடர்களாக  இருந்து இந்திய நாட்டை  “”அலங்கரித்து”க்  கொண்டிருக்கின்றார்களே  என்ற கவலை  ஒருவரிடத்திலாவது  இருந்ததாகவோ,  இதற்காக  ஒரு  மகாநாடாவது  கூட்டப்பட்டதாகவோ,  ஒரு  மந்திரியாவது,  ஒரு  பிரபுவாவது,  ஒரு  ஆச்சாரிய  ஸ்வாமிகளாவது  கவலைப்பட்டதாகவோ  தெரியவேயில்லை.  இந்தக் காலம்  செல்வவான்கள்  காலமானதால்  பணம் சம்பாதிப்பதைப்  பற்றியே  உலக நிகழ்ச்சிகள்  நடைபெறுவதும்,  செலவிடவேண்டியவர்கள்  கஷ்டத்தைப் பற்றி  கவலைப்படாமல்  இருக்கவும்  ஆன காரியம்  நடக்கின்றது. இதற்காக  யார்  என்ன  செய்யக்கூடும்? “”எல்லாம்  பகவான்  செயல்”  அல்லவா? பகுத்தறிவு  செய்தி விளக்கம்  23.12.1934

ராமராஜ்யம்  திரும்பி  வருகிறது 

ராமராஜ்யம்  திரும்பி  வருகிறது 

  பலாத்கார  உடன்கட்டை வடநாட்டில்  தாமோ  என்ற  தாலூகாவைச்  சேர்ந்த  நோஹ்டோ  என்ற கிராமத்தில்  ஒரு புருஷன்  காயலாவாக  இருந்து  இறந்து போனார்.  அவரது  மனைவியை  உடன்கட்டை  ஏறும்படி  அவரின் உறவினர்கள் கட்டாயப்படுத்தி  நெறுப்புக்குள்  பிடித்து  தள்ளிவிட்டார்களாம்.  மனைவி தப்பி  ஓட  எவ்வளவோ  முயற்சித்தும்  பயன்  இல்லாமல்  சாம்பலாகிவிட்டதாக  அசோசியேட்  பிரஸ்  கூறுகிறது. இந்து மதத்தின்  பெருமையும்,  ராமராஜியத்தின்  அருமையும்  சுயராஜியத்துக்கு  எவ்வளவு  தகுதி  உடையது  என்பதை  இந்தியர்கள்  உணர்வார்களாக. பகுத்தறிவு  செய்தி விமர்சனம்  23.12.1934

கான் அப்துல்  கபூர்கான்

கான் அப்துல்  கபூர்கான்

  எல்லைப்புறக் காந்தி  என்று பட்டம் சூட்டப்பட்ட  தோழர் அப்துல்கபூர்கான்  அவர்கள்  ராஜத்துவேஷ  குற்றத்துக்காக   இரண்டு வருஷம்  தண்டிக்கப்பட்டுவிட்டார். தான்  செய்த காரியத்துக்காகவோ,  பேசிய  பேச்சுக்காகவோ  வருத்தம்  தெரிவிப்பதன் மூலம் மன்னிப்புக் கேட்டும் அரசாங்கம் மனமிரங்காமல் இரண்டு வருஷம் தண்டித்துவிட்டது. வெள்ளை அறிக்கையையும், பார்லிமெண்டு கூட்டுக் கமிட்டி அறிக்கையையும்  நிராகரிக்கிறது  என்கின்ற  காங்கிரஸ்  திட்டத்தில்  அரசாங்கத்தை மன்னிப்புக் கேட்டுக் கொள்வது  என்பதும்  ஒரு பிரிவு  போல் காணப்படுகின்றது.  ஐயோ  பாவம்  காங்கிரசே!   நீ  இன்னமும்  என்ன கதிக்கு  ஆளாகப்  போகின்றனையோ!! உனது  வீரமே  வீரம்!!! பகுத்தறிவு  துணைத் தலையங்கம்  23.12.1934

ஜஸ்டிஸ்  கட்சி

ஜஸ்டிஸ்  கட்சி

ஜஸ்டிஸ்  கட்சியைப் பற்றி  பார்ப்பனர்கள் குறை  கூறி வருவதையும்,  அதை  “”வெட்டி  500  கஜ  ஆழத்தில்  புதைத்துவிட  வேண்டு”மென்று  தோழர்கள்  சத்தியமூர்த்தி,  ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள்  சொல்லுவதையும் நமது பார்ப்பனரல்லாத  மூடப் பாமர  ஜனங்கள்  நம்பிவிடுகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல்  பார்ப்பனரல்லாதாரிலேயே படித்த  பகுத்தறிவுள்ள  மக்கள் என்பவர்களும்  கூட  அப்பார்ப்பனர்களுடன்  கூடிக் கொண்டு  குலத்துரோகிகளாய்  நடித்து  வருவதைப் பார்த்து  வருகிறோம். பார்ப்பனரல்லாதார்  இயக்கம்  ஏற்பட்டு சுமார்  15  வருஷ  காலமே ஆயிருந்தாலும்  கூட  அது  ஏற்பட்ட  பிறகு  இந்த நாட்டுக்கு  100க்கு  97  பேர்களாய்  உள்ள  பார்ப்பனரல்லாதார்  சமூகத்துக்கும்,  சிறப்பாக  தாழ்த்தப்பட்ட  சமூகத்துக்கும்  எவ்வளவு  பயன் அளித்து  வந்திருக்கின்றது  என்பதை உணர்ந்தால் பார்ப்பனர்களின் சூழ்ச்சியும், அவர்களுக்கு உதவி செய்யும் மூடர்களுடையவும்  கூலிகளுடையவும், குலத்துரோகிகளுடையவும்  யோக்கியதையும்  சிறிதாவது விளங்காமல் போகாது. இதற்குச்  சமீபத்தில் நடந்த ஒரு  விஷயத்தை  சின்ன  உதாரணமாகக்  காட்ட   ஆசைப்படுகின்றோம். அதாவது  இவ்வருஷம்  போலீஸ்  சப்இன்ஸ்பெக்டர்  உத்தியோகத்துக்கு  87  பேர்கள்  சர்க்காருக்கு  தேவை ...

தற்கால  அரசியல்  நிலைமை

தற்கால  அரசியல்  நிலைமை

  தொழிலாள  சோதரர்களின்  ÷க்ஷமத்திற்கு  இவ்வூரில்  மாதம்  ஒரு முறை  பூர்ண  ஓய்வு  ஏற்படுத்தி  இருப்பது  போற்றத்தக்கதாகும்.  இவ்விழாவைக்  கண்டு  நான்  பெரிதும்  சந்தோஷம்  கொண்டேன்.  அவர்களுடைய  நாளில்  அவர்களைப்  பற்றியே  பேச  நான்  விரும்பி  வந்தேன்.  ஆனால்  இங்கு  வந்த  பின்னர்  விருதுநகர்  வாசிகள்  “தற்கால  அரசியல்  நிலைமை’  ஜஸ்டிஸ்  கட்சி  ஆகியவைகளைப்  பற்றியும்  எடுத்துக்  கூறும்படி  கேட்பதால்  அதைக்கூற  வேண்டியவனாய்  இருக்கிறேன்.  இந்த  சமயத்தில்  இவைகள்  எவ்வளவு  முக்கியமானவைகளாக  இருக்கின்றதோ,  அவ்வளவு  குழப்பமான  விஷயங்களாகவும்  இருக்கின்றன. “அரசியல்  என்பது  மக்களை  ஏமாற்றும்  இழிவான  சூட்சி’ அரசியலின்  பெயரால்  இன்று  உலகில்  எங்கும்  திருட்டு,  புரட்டு,  கொள்ளை,  கொலை,  பாமர  மக்களை  ஏமாற்றுதல்  முதலாகிய  இழிகாரியங்கள்  எல்லாம்  நடக்கின்றன.  கலகங்கள்  கூட  சிலவிடங்களில்  நடக்கின்றன.  எப்படி  என்றால்  அரசியல்  சம்பந்தமான  பிரசார  கூட்டங்களில்  கலகம்  ஏற்பட்டு  விடுகின்றது.  மதத்தின்  பெயரால்  þ  திருட்டு,  புரட்டு  சகலமும்  நடந்த  காலத்தில்  மக்கள் ...

மோதிரம்  மாற்றுவது  மூடநம்பிக்கை

மோதிரம்  மாற்றுவது  மூடநம்பிக்கை

  லண்டன்  நகரத்தில்  சமீபத்தில்  நடந்த  இரண்டொரு  கல்யாணங்களில்  மணமகன்  மோதிரம்  மாற்றிக்  கொள்வது  கூட  மூடநம்பிக்கையில்  சேர்ந்தது  என்று  கருதி  மணவினையின்  போது  மணமகன்  மோதிரம்  மாற்றிக்  கொள்ள  சம்மதிக்க  மாட்டேன்  என்று  சொல்லி  விட்டாராம். “”நாங்கள்  ஒருவரை  ஒருவர்  வாழ்க்கைத்  துணைவர்களாக  ஏற்றுக்  கொண்டோம்  என்று  சொல்லி  இருவரும்  கையொப்பமிட்டு  பிறகு  மோதிரம்  மாற்றிக்  கொள்வது  எதற்காக”  என்று  மணமக்கள்  கல்யாணப்  பதிவு  ரிஜிஸ்டராரை  கேட்டார்கள்.  அதன்  மேல்  கல்யாணப்பதிவு  ரிஜிஸ்டராரும்  பாதிரியும்  ஒன்றும்  பேசாமல்  கல்யாணத்தை  பதிந்து  கொண்டார்களாம்.  இந்த  விஷயம்  சென்ற  வாரத்திய  கிராணிக்கல்  வாரப்பத்திரிகையில்  காணப்படுவதுடன்  தம்பதிகளின்  உருவப்  படங்களும்  அதில்  பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.  நமது  நாட்டில்  நடத்தும்  சுயமரியாதைத்  திருமணங்களில்  தாலி  கட்டவில்லையே  என்று  அழுவாரும்,  விளக்குப்  பற்ற  வைக்கவில்லையே  என்று அழுவாரும்,  சாணி  உருண்டை  பிடித்து  வைத்து  தேங்காய்  பழம்  உடைக்கவில்லையே  என்று  அழுவாரும்,  பார்ப்பான்  காலில்  விழுந்து  அம்மிக்கல்லில்  முட்டிக்  கொள்ளவில்லையே ...

நிர்வாக  சபையை  ஏன்  கூட்டவில்லை

நிர்வாக  சபையை  ஏன்  கூட்டவில்லை

  தோழர்  குமாரராஜா  அவர்கள்  மீது  ஜஸ்டிஸ்  கட்சிக்காரர்கள்  கவுன்சில்  பார்ட்டி  மீட்டிங்கில்  கொண்டுவரப்பட்ட  நம்பிக்கை  இல்லாத்  தீர்மான  விஷயமாய்  “”முதலில்  நிர்வாக  சபைக்  கூட்டம்  கூட்டி  அதில்  ஒரு  முடிவு  செய்து  கொண்டு  பின்பு  கவுன்சில்  பார்ட்டி  கூட்டம்  கூட்டலாம்”  என்று  அநேக  தந்திகளும்,  கடிதங்களும்  அனுப்பப்பட்டன.  அவைகள்  எதையும்  கவனிக்காமல்  கவுன்சில்  பார்ட்டியில்  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானம்  கொண்டு  வரப்பட்டு  விட்டது”  என்பதாகச்  சிலர்  குறை  கூறுகிறார்கள்.  இதற்கு  சமாதானம்  சொல்ல  கட்சி  கடமைப்பட்டிருக்கிறது. அச்சமாதானம்  என்னவென்றால்  ஜஸ்டிஸ்  கட்சி  நிருவாக  சபைக்கு  அக்கிராசனர்  குமாரராஜா  முத்தய்ய  செட்டியார்  அவர்கள்  அல்ல  என்பதையும்  கவுன்சில்  பார்ட்டி  (சட்டசபைக்  கட்சி  கொரடா)  அறிவிப்புதான்  சேர்மென்  என்பதையும்  ஞாபகப்படுத்திக்  கொள்ள  வேண்டுமாய்  கோருகிறோம். ஏனெனில்  தோழர்  குமாரராஜா  அவர்கள்  கவுன்சில்  பார்ட்டி  கொரடா  என்கின்ற  முறையில்  தான்  நிர்வாக  சபைக்கு  தலைமை  வகிக்கின்றார்.  ஆதலால்  நிர்வாக  சபையில்  தோழர்  முத்தைய  செட்டியார் ...

ஜஸ்டிஸ்  கட்சி  தலைவர்களுக்கு  ஒரே  வார்த்தை

ஜஸ்டிஸ்  கட்சி  தலைவர்களுக்கு  ஒரே  வார்த்தை

  ஜஸ்டிஸ்  கட்சி  இந்திய  சட்டசபை  தேர்தல்  அடைந்த  தோல்வியால்  “”குதிரை  கீழே  தள்ளியது  மல்லாமல்  குளியும்  பரித்தது”  என்று  சொல்லும்  பழமொழி  போல்  தோல்வி  அடைந்ததோடு  கட்சிக்கே  ஆட்டம்  வரும்  நிலைமையையும்  ஏற்படுத்திக்  கொண்டது. அதாவது  கட்சிக்கு  உள்ளுக்குள்ளாகவே  மகத்தான  எதிர்ப்பு  ஏற்பட்டு  விட்டது.  தக்கதொரு  பணக்காரரை  கட்சியில்  இருந்து  விரட்டிவிட்டதால்  பணக்காரர்களை  நம்பி  வாழும்  தொண்டர்களையும்  கட்சியில்  இருந்து  விரட்டிவிட்டதாகத்தான்  அருத்தம். “”கொள்கை”  “”கொள்கை”  என்று  மாத்திரம்  கூப்பாடு  போடுவது  பயனற்ற  பேச்சாகும்.  பணமும்,  பிரசாரமும்,  தந்திரமும்  உள்ளவர்கள்  தான்  வெற்றி  பெருவார்களே  தவிர  வெறும்  கொள்கைகளே  வெற்றி  யளித்து  விடாது. ஆகவே  இனி  நடக்கப்போகும்  காரியத்துக்கு  நல்லதொரு  கொள்கையும்,  அதற்குத்  தகுந்த  பணமும்,  பிரசாரமும்  இல்லாமல்  ராஜா  சர்  அண்ணாமலையாரையும்  குமாரராஜாவையும்  விரட்டியடித்து  விட்ட  பெருமையை  நினைத்து  மகிழ்ந்து  கொண்டே  இருப்போமானால்  அழிப்பாரில்லாமல்  கட்சி  அழிந்து  போகும்  என்பது  உறுதி. இன்று  சென்னை  சட்டசபைத்  தேர்தலுக்கு  காங்கிரஸ்காரர்களுடன் ...

பொப்பிலியும்    செட்டிநாடும்

பொப்பிலியும்    செட்டிநாடும்

  செட்டிநாட்டு  கோடீஸ்வரரும்,  பரம்பரை  ராஜா  பட்டம்  பெற்றவரும்,  தர்மப்பிரபுவுமான  ராஜா  சர்.  அண்ணாமலை  செட்டியாரின்  குமாரர்  சென்னை  கார்ப்பரேஷன்  மேயர்  குமாரராஜா  என்றழைக்கப்படும்  முத்தையா  செட்டியார்  அவர்கள்  மீது  ஜஸ்டிஸ்  கட்சியார்  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  நிறைவேற்றத்  துணிந்து  அவரிடம்  அதாவது  முத்தையா  செட்டியார்  அவர்களிடம்  சென்னை  சட்டசபைக்  கொரடா  பதவியையும்,  ஜஸ்டிஸ்  கட்சியின்  நிர்வாக  சபையின்  தலைவர்  பதவியையும்  ராஜிநாமா  பெற்றுவிட்டார்கள். இந்தக்  காரியமானது  இந்தியாவின்  சரித்திரத்திலேயே    ஏன்  உலக  சரித்திரத்திலேயே புதுமையானதும், இதற்கு முன் எவரும் செய்யத்  துணியாததும், பார்த்திராததும்,  கேட்டிராததுமான  காரியமென்றே  சொல்ல  வேண்டும். செட்டிநாட்டுப்  பிரபுவுக்கு  அதிகாரம்,  பதவி,  பட்டம்,  பணம்,  செல்வாக்கு  ஆகியவை  எல்லாம்  நிறைந்து  இருந்தும்  கட்சி  முறை,  கொள்கை  முறை,  சிநேக  முறை  என்பவைகள்  அல்லாமல்  தனிப்பட்ட  முறையிலும்,  செல்வ  முறையிலும்,  பின்பற்றுவோர்  முறையிலும்  ஏராளமான  பலமும்,  சாய்காலும்  இருந்தும்  ஒன்றும்  பயன்படாமல்  கோழிக்குஞ்சை  ராஜாளி  தூக்கிக்  கொண்டு  போவதுபோல்  ஒரு ...

ஆந்திரர்    தமிழர்  என்று  பிரிக்கப்பார்ப்பது

ஆந்திரர்    தமிழர்  என்று  பிரிக்கப்பார்ப்பது

  ஜஸ்டிஸ்  கட்சியிலிருந்து  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானத்தின்  காரணமாய்  வெளியேறி  விட்ட  தோழர்  குமாரராஜா  அவர்களுக்காக  குமாரராஜா  அவர்களை  ஆதரிக்க  ஆசைப்பட்டவர்களோ  அல்லது  அவரிடம்  கூலிபெற்றவர்களோ  ஜஸ்டிஸ்  கட்சியைத்  தாக்க  இதுசமயம்  தங்களுக்கு  வேறு  எவ்வித  கதியும்  இல்லாமல்  நிற்கதியாயிருப்பதை  முன்னிட்டு  மிக  இழிவான  மார்க்கத்தைக்  கைக்கொள்ளத்  துணிந்து  விட்டார்கள்.  “”பசி  வந்திடப்  பத்தும்  பறந்துபோம்”  என்கின்ற  பழமொழிப்படி  ஏதாவது  ஒரு  விஷயத்தில்  பசி  ஏற்பட்டு  விட்டால்  மானம்,  குலம்,  கல்வி,  அறிவு  ஆகியவைகளை  அவர்களில்  பலர்  வந்த  விலைக்கு  விற்று  விட்டு  மிக  இழிவான  காரியங்களில்  சிலர்  இறங்கி  விட்டதானது  மிகவும்  வெறுக்கத்தக்கதும்,  பரிதாபப்படத்  தக்கதுமான  விஷயமாக  ஆகிவிட்டது. தோழர்  குமாரராஜா  அவர்கள்  மீது  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டு  வருவதற்கு  ஆதாரமான  பிரஸ்தாப  விஷயம்  தோழர்  ஆர்.கே.ஷண்முகம்  அவர்களுடைய  இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  செட்டிநாடு  ராஜா  சர்.அண்ணாமலையார்  அவர்களும்,  அவர்களது  குமாரரான  முத்தையா  அவர்களும்  நம்பிக்கைக்  குறைவாய்  நடந்து கொண்டார்கள் ...

சென்னை  சட்டசபை  உப  தேர்தல்

சென்னை  சட்டசபை  உப  தேர்தல்

  சென்னை  சட்ட  சபைக்கு  சாமி  வெங்கடாசலம்  செட்டியார்  அவர்களால்  காலி  செய்த  ஸ்தானமானது  பூர்த்தி  செய்யப்படுவதற்கு  காங்கிரசுக்காரர்கள்  தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  அவர்கள்  வெற்றியைப்  பார்த்த  பிறகு  அதற்கும்  பார்ப்பனர்களாகவே  பார்த்து  நிருத்த  முயற்சித்து  வருகிறார்கள்.  தோழர்  லக்ஷிமிபதி  அம்மாள்  அவர்கள்  பெயர்  பிரஸ்தாபிக்கப்பட்டது.  பிறகு  தோழர்  டி. பிரகாசம்  பந்துலு  அவர்கள்  பெயர்  பிரஸ்தாபிக்கப்படுகிறது.  அவர்கள்  பெயர்  ஓட்டர்  லிஸ்டில்  காணப்படவில்லை  என்றும்  சொல்லிக்  கொள்ளப்படுகிறது  என்றாலும்  மறுபடியும்  ஒரு  அரைப்பார்ப்பனரையாவது  அந்த  ஸ்தானத்துக்கு  போட  பார்க்கின்றார்களே  ஒழிய  தோழர்  கத்தே  ரங்கய்ய  நாயுடு  அவர்கள்  காங்கிரசுக்காக  என்று  எவ்வளவோ  உழைத்து  வந்தும்  அவர்  பார்ப்பனரல்லாதாராய்  இருப்பதால்  அவர்  பெயரை  பிரஸ்தாபிப்பாரையே  காணோம்.  அவர்  எந்தக்  காரணத்தினால்  பிடித்தமில்லை  ஆனாலும்  வேறு  ஒரு  பார்ப்பனரல்லாதாரையாவது  போடலாம். ஆகவே  இந்த  சந்தர்ப்பத்திலேயே  எவ்வளவு  பார்ப்பனர்களை  புகுத்திக்  கொள்ள  முடியுமோ  அவ்வளவு  பெயர்களையும்  புகுத்திக்  கொள்ள  முடிவு  செய்து  தோழர்  டாக்டர் ...

வேஷம்  விளங்கி  விட்டது

வேஷம்  விளங்கி  விட்டது

  “”வெள்ளை  அறிக்கையை  பஹிஷ்காரம்  செய்கின்றோம்.”  “”வைசிராய்  வந்தவுடன்  வெளியில்  எழுந்து  வந்து  விடுகின்றோம்.”  என்றெல்லாம்  கூறி  ஓட்டு  வாங்கி  சட்டசபைக்குச்  சென்று  இருக்கும்  நமது  காங்கிரஸ்  வீரர்கள்  இப்போது  மெள்ள  மெள்ள  தங்கள்  திரையை  நீக்கிக்  கொண்டு  வெளியில்  வர  ஆரம்பித்து  விட்டார்கள். அதாவது  வெள்ளை  அறிக்கையின்  பயனாய்  கிடைக்கக்  கூடிய  பதவிகளையும்,  உத்தியோகங்களையும்,  சம்பளங்களையும்  கைப்பற்ற  வேண்டுமென்றும்,  அந்தப்படி  செய்யாவிட்டால்  பிற்போக்காளர்கள்  (காங்கிரஸ்காரர்கள்  அல்லாதார்கள்)  அதை  அனுபவித்து  விடுவார்களென்றும்  சொல்லி  இப்போதே  பழய  பாடம்  படிக்க  ஆரம்பித்து  விட்டார்கள். முன்பு  ஒரு தடவையும்  கூட  இந்தப்படியே  அதாவது  காங்கிரஸ்காரர்கள்  சட்டசபைக்குச்  சென்றால்  மந்திரி  வேலையை  ஒப்புக்கொள்ளக்கூடாது  என்றும்,  மந்திரிகளை  ஆதரிக்கக்  கூடாதென்றும்  செய்திருந்த  காங்கிரஸ்  தீர்மானத்துக்கு  விரோதமாய்  மந்திரி  உத்தியோகம்  பெற  ஆசைப்பட்டு  அது  சௌகரியப்படாமல்  போகவே  தங்கள்  இஷ்டப்படி  மந்திரிகளை  ஆதரிக்கத்  தொடங்கி  மந்திரிகளின்  கையாள்களாகவும்  இருந்து  வந்தார்கள். அதை  மற்ற  மாகாண  காங்கிரஸ்வாதிகள்  கண்டித்து  சமாதானம் ...

தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்

தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்

  “”யாருக்காவது  பயித்தியம்  பிடிக்கச்  செய்ய  வேண்டுமானால்  அவருடைய  யோக்கியதைக்கு  மீறிய  பவுசு  வரும்படி  செய்து  விட்டால்  போதும்”  என்று  ஒரு  பழமொழி  உண்டு. அதுபோல்  தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  அவர்களுக்கு  அவர்  யோக்கியதைக்கு  மீறின  (அதாவது  8பங்கு  10பங்கு  அதிகமான)  பவுசு  ஏற்பட்டவுடன்  இப்போது  அவர்  பைத்தியக்கார  ஆஸ்பத்திரியில்  வைக்கப்பட  வேண்டிய  அளவுக்கு  வந்து  விட்டார்.  தலைகால்  தெரியாமல்  தாண்டவமாடுகிறார். இந்திய  சட்டசபைக்கு  சத்தியமூர்த்தி  அய்யர்  அவர்கள்  மெம்பராய்  விட்டார்  என்று  சொல்லப்பட்டவுடன்  அவர்  பேச  வாயைத்  திறந்ததும்  சென்னை  கவர்னர்  பிரபுவுக்கு  ஒரு  உத்திரவு  போட்டார். அதாவது  “”இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  காங்கிரஸ்காரர்கள்  வெற்றி  பெற்று  விட்டதால்  கவர்னர்  மாகாண  சட்டசபையை  கலைத்து  மந்திரிகளை  வீட்டுக்கு  ஓட்டி  விடவேண்டும்”  என்று  சொல்லி  விட்டார். இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  காங்கிரஸ்காரர்  ஜெயித்ததற்கும்,  மாகாண  சட்டசபைக்கும்,  என்ன  சம்மந்தம்  என்பது  தோழர்  சத்தியமூர்த்திக்கு  சுய  அறிவு  இருந்தால்  புரியாமல்  இருக்குமா  என்று ...

ஒரு  தோழரின்  கடிதத்திற்கு   ஈ.வெ.ராமசாமி  பதில்

ஒரு  தோழரின்  கடிதத்திற்கு  ஈ.வெ.ராமசாமி  பதில்

    தோழரின்  கடிதம் @ “”அன்புடைய  ஈ.வெ.ராமசாமி  நாயக்கர் அவர்கட்கு  ÷க்ஷமம். ÷க்ஷமத்துக்கு எழுதுங்கள்.  வெகு  நாளாகக்  கடிதப் போக்கு வரத்தில்லை.  நானும்  உங்களுக்குச்  சில  விஷயங்கள்  பற்றிக்  கடிதம்  எழுத வேண்டும்  என  எண்ணியெண்ணி முடியாது  போயிற்று. நான்  சொல்ல  விரும்பும்  விஷயம்  சிலவுண்டு.  உங்கள் இயக்கம்  உயர்வானது. அவ்வியக்கம்  பலப்பட்டு  எல்லா  வகுப்பாருடைய உதவியும்  பெறவேண்டுமானால்  நீங்கள் தற்காலம்  அனுஷ்டித்து  வரும்  முறை  சரியல்லவென்பது  எனது  உண்மையான  எண்ணம். உங்கள் இயக்கத்தில்  எனக்கு ஆர்வமுண்டு. 10, 15  வருஷ காலமாக  இவ்வியக்கத்தின்  கொள்கை  காரணமாய் நான்  இந்தியாவில்  நடைபெறும்   ஒரு  இயக்கத்திலும்  நேர்முகமாய்க் கலந்து கொள்ளாது  இருந்து வந்திருக்கிறேன்.  ஏனெனில்  ஒவ்வொரு இயக்கத்திலும், சிற்சில  நல்ல அம்சங்களிருக்கின்றன;  பல  கெட்ட அம்சங்களும்  உண்டு. சமதர்மக்  கொள்கையை  ருஷ்யாவில்  கொண்டாடும் முறையில்  இந்தியாவில்  புகுத்துவது  முடியாது. அவர்களது பழைய கொள்கைகளையே  மாற்றிக்  கொண்டு வருகிறார்கள். நீங்கள் செய்துவரும்  பிரசாரத்தில்...

ஜஸ்டிஸ்  கட்சியின்  புனருத்தாரணம்

ஜஸ்டிஸ்  கட்சியின்  புனருத்தாரணம்

  ஜஸ்டிஸ்  கட்சியில்  சட்டசபை  நடவடிக்கைகளைப்  பொருத்தவரை  கவனிப்பதற்கு  என்று  கவுன்சில்  பார்ட்டி  என்பதாக  ஒரு  பிரிவு  இருந்து  வரும்  விஷயம் யாவரும்  அறிந்ததாகும்.  அந்தப்  பிரிவுக்கு  முக்கிய  கொரடாவாக  அதாவது  சட்டசபையைப்  பொருத்தவரையில்  மெம்பர்கள்  எப்படி நடந்து கொள்ள வேண்டும்  என்பதைக்  கட்சி  சார்பாய் தெரிவிப்பதற்காக  தெரிந்தெடுக்கப்பட்டவரை  கொரடா  என்று  சொல்லுவது.  அந்த  ஸ்தானத்தில்  தோழர்  குமாரராஜா  முத்தய்யா  அவர்கள் இருந்து  வருகிறார். சமீபத்தில்  இந்திய  சட்டசபைக்கு  நடந்த தேர்தல்கள்  விஷயமாய்  தோழர்  ஷண்முகம்  அவர்களுக்கும்  தோழர்  ராமசாமி  முதலியார் அவர்களுக்கும் ஏற்பட்ட தோல்விக்கு  முக்கிய  காரணம்,  தோழர்  குமாரராஜா  முத்தய்யா செட்டியார்  அவர்கள்  சரியானபடி  நடந்து கொள்ளாததே  என்ற  ஒரு  அபிப்பிராயம்  கட்சிப்  பிரமுகர்களுக்குள்  ஏற்பட்டுவிட்டது. மேற்படி  தோல்விகளானது  தமிழ்  நாட்டில்  ஜஸ்டிஸ்  கட்சியின்  நிலைமையை  பாதிக்கக் கூடியதாய்  போய்விட்டதால்,  அந்த  வருத்தத்தை  உத்தேசித்தும் மேலால்  இந்தப்படி நேராமல்  இருக்க வேண்டும்  என்பதை  உத்தேசித்தும்  சில  முன் ஜாக்கிரதையான ...

முடிந்து  போன  விஷயமாம்

முடிந்து  போன  விஷயமாம்

  கும்பகோணத்தில்  தேர்தல் கொண்டாட்டம்  கொண்டாட  வந்த  தோழர்  ராஜகோபாலாச்சாரியார்  அவர்களை  கூட்டத்தில்  ஒரு  கேள்வி  கேட்டார்கள். அதாவது  “”இந்திய  சட்டசபை  மெம்பர்  ஆகிவிட்டதற்காக  இவ்வளவு  பிரமாதமான  வெற்றிக் கொண்டாட்டம்  கொண்டாடு கின்றீர்களே!  நீங்கள்  எல்லோரும்  அங்கு  போய்  என்ன  செய்யப் போகிறீர்கள்?”  என்று  கேட்டார்கள்.  அதற்க  ராஜகோபாலாச்சாரியார்  ஒரே  வார்த்தையில்  பதில்  சொல்லி  விட்டார். அதாவது  “”இது  முடிந்து போன  விஷயம்.  எப்படியோ ஒரு  விதத்தில் நாங்கள்  ஜெயித்து  விட்டோமாகையால்  முடிந்து  போன  விஷயத்துக்கு  இனி  கேள்வி  கேட்கவோ  பதிலளிக்கவோ இடமில்லை”  என்று  சொல்லிவிட்டாராம்.  எந்த  விதத்திலோ  காரியம்  கைகூடின  பிறகு  வெற்றி பெற்றவர்கள் சொல்ல  வேண்டிய  பதில்  இதுதான்.  அவர்களது  தைரியத்தைக்  கண்டு  நாம்   அதிசயிக்காமல்  இருக்க முடியவில்லை. பகுத்தறிவு  செய்தி விளக்கக் குறிப்பு  02.12.1934

பொது  தொகுதியின்  யோக்கியதை

பொது  தொகுதியின்  யோக்கியதை

  இந்திய  சட்டசபைப்  பொதுத்  தொகுதியின்  பொது ஓட்டர்  தொகுதியில்  ஒரு  கிருஸ்தவர்  வெற்றி பெற்றுவிட்டதற்காகப்  பார்ப்பனர்கள்  வகுப்புவாரி  ஓட்டர்  தொகுதி  இனி வேண்டியதில்லை  என்றும்,  பொதுத்  தொகுதியே  போதும்  என்றும்,  அதிலும்  கிருஸ்தவர்களுக்கு  என்று  ஸ்தானம்  ஒதுக்கி  வைக்கக்கூட  வேண்டியதில்லை  என்றும்  இப்போது  முன்னிலும்  அதிகமாக  கூப்பாடு  போடுகிறார்கள். ஆனால்  எப்படிப்பட்ட  கிருஸ்தவர்  வெற்றி  பெற்றிருக்கிறார்கள்   என்றால்  அவர்கள்  சமூக  முடிவுக்கு  விரோதமான  கருத்துடைய  கிருஸ்தவர்தான்   பொதுத்தொகுதியில்  வெற்றி  பெற்றிருக்கிறாரே  தவிர,  கிருஸ்தவ  சமூக  நலனுக்கு  ஏற்பட்ட  கருத்தை  நிலைநிறுத்தப்  பாடுபடும்  கிருஸ்தவர்  வெற்றி  பெறவில்லை  என்றுதான் சொல்ல வேண்டும். வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவம்  வேண்டாம்  என்பதும், வெள்ளை  அறிக்கையை  பகிஷ்கரிக்க வேண்டும்  என்பதும்,  காங்கிரசினுடன்  கூட்டுறவு  கொள்ளவேண்டும்  என்பதும்,  காங்கிரசு  கிருஸ்தவ  சமூகத்துக்கும்  பிரதிநிதித்துவம்  உடையது  என்பதும்,  பெரும்பான்மையான  அல்லது  100 க்கு  99 பேர்களான  கிருஸ்தவர் களுடைய  எண்ணமா?  அவர்களுடைய  சமூக  சங்கத்தினுடைய  முடிவா?  என்பதை  உணர்ந்து  பார்த்தால் ...

தரகர்கள்  ஒழிப்பு

தரகர்கள்  ஒழிப்பு

  தரகர்கள்  என்பது  பெரும்பாலும்  வியாபாரிகள்  என்பதையே  குறிக்கும். வியாபாரிகள்  என்பவர்கள்  அனேகமாக  சரக்குகளை   உற்பத்தி  செய்யும்  விவசாயக்காரர்கள்,  தொழிலாளர்கள்  ஆகியவர்களுக்கும்  அச் சரக்குகளை  வாங்கி  உபயோகிக்கும்  பொது ஜனங்கள்  என்பவர்களுக்கும்  இடையில்  இருந்து  கொண்டு  குறைந்த  விலைக்கு  வாங்கி   அதிக  விலைக்கு  விற்று  லாபம்  சம்பாதிப்பவர்களே  ஆவார்கள். பணம்  சம்பாதித்து  முதலாளிகளாக  ஆவது  என்பதற்கு அல்லாமல்  வேறு  எந்தக்  காரியத்திற்கும்  இந்தக்கூட்டத்தார்கள்  உலகிற்கு  தேவையே  இல்லை. இவர்களாலேயே  தான்  வெள்ளாமை  செய்யும்  விவசாயியும்,  சாமான்கள் செய்யும்  தொழிலாளியும்  என்றென்றைக்கும்  ஏழைகளாயும்  தரித்திரர்களாகவும்  இருக்க வேண்டி இருக்கிறது.  ஆனால்  இந்த  இரு  தரத்தாருமே  தான் உலகம்   நடைபெறுவதற்கு  ஆதாரமாய் இருந்து  வருகின்றார்கள்.  அப்படி  இருந்தும்  இவர்களது  குறைந்த  அளவு  தேவைகளையோ,  நலனையோ கூட  கவனிக்க உலகில்  எந்த மதமும்,  எந்த  அரசாங்கமும்  நாளது  வரை  கவலை  எடுத்துக்  கொண்டதே   இல்லை. மனிதன்  எப்பொழுது இயற்கைக்கு  விரோதமாக  வாழ்க்கை  நடத்த  நினைத்தானோ  அல்லது ...

இதை நீங்கள் தயவு செய்து கவனியுங்கள்  எதற்காக  தெரியுமா?

இதை நீங்கள் தயவு செய்து கவனியுங்கள் எதற்காக  தெரியுமா?

  நீங்கள்  ஒவ்வொருவரும்  எப்படியாவது  கஷ்டப்பட்டு  இரண்டு  அல்லது  ஒரு  சந்தாதாரரையாவது  சேர்த்து  8  அணாவாவது  அட்வான்ஸ்  வாங்கி  விலாசத்துடன்  நமக்கு  அனுப்பிக் கொடுங்கள். ஏன்? பகுத்தறிவு  ஒரு  தனி  மனிதனுடைய  சுயநலத்துக்கோ  ஒரு  தனி  வகுப்பாருடைய  நன்மைக்கோ  நடைபெறுவதல்ல. ஆனால்  இன்று  ஆதிக்கத்திலிருக்கும்  வகுப்பாருடைய  விஷமமும்  சூழ்ச்சியும்  நிறைந்த  எவ்வளவோ  எதிர்ப்புகளையும்  தொல்லைகளையும்  சமாளித்துக் கொண்டு  இழிவுபடுத்தப்பட்ட  மக்களுக்காகவும்,  ஏழ்மைப்படுத்தப் பட்ட  மக்களுக்காகவும்  பின்தள்ளப்பட்ட   மக்களுக்காகவும்  நடை பெறுகின்றது. இந்த  வருஷத்தில்   மாத்திரம்  3  தடவை பத்திரிகை  நிறுத்தப்பட்டு  விட்டதாலும்  2, 3  தடவை  ஜாமீன்  கட்டும்படி  உத்திரவு  செய்யப்பட்டதாலும்,  பத்திரிகை  விஷயமாய்  3  கேசுகள் ஏற்பட்டு  அபராதங்களும்  தண்டனைகளும்  விதிக்கப்பட்டதாலும்,  கேசுகளை  எதிர்வழக்காடியதாலும்  5000  ரூபாய்க்கு  மேற்பட்ட   நஷ்டங்களேற் பட்டதோடு  பத்திரிகை  சந்தா  எண்ணிக்கையும்  குறையத்  தலைப்பட்டு விட்டது.  ஏஜண்டுகள்  பெரும்பாலோர்  அதாவது  இயக்கத்தின்  மேல்  உள்ள  ஆர்வத்தினால்  இயக்கத்தில்  உள்ளவர்களால்  இயக்க  நன்மைக்காகப்  பாடுபட்டவர்கள்  என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் ...

வகுப்புவாதிகளே   வெற்றியடைந்தார்கள்

வகுப்புவாதிகளே  வெற்றியடைந்தார்கள்

  சென்னை  மாகாணத்தில்  நடந்த இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  வெற்றி பெற்ற  வீரர்கள்  “”வகுப்பு  வாதம்  தோற்றுவிட்டது”  என்றும்  “”வகுப்பு  வாதத்தை ஜனங்கள்  விரும்பவில்லை”  என்றும் பேசி  மக்களை  மனதார  ஏய்க்கின்றார்கள்.  ஆனால்  உண்மையில் பார்க்கப்  போனால்  கடுகளவு  அறிவுள்ள  எவனும்  வகுப்பு வாதம்  வெற்றி  பெற்றுவிட்டது  என்று  தான்  சொல்ல  வேண்டும். இன்று  இந்த  நாட்டில்  உள்ள ஜஸ்டிஸ்  கட்சி  ஆகட்டும்  அல்லது  சுயமரியாதைக்  கட்சி  யாகட்டும்  உண்மையில் வகுப்பு  வித்தியாசங்கள்,  வகுப்பு  உயர்வு  தாழ்வுகள்,  வகுப்புப்  பிரிவுகள்  ஆகியவை  ஒழிய  வேண்டுமென்று  பாடுபடுகின்றனவா  அல்லது  இருக்கவேண்டுமென்று  பாடுபடுகின்றனவா  என்று  கேழ்க்கின்றோம்.  யாரைக்  கேழ்க்கின்றோம்  என்றால்  ஜஸ்டிஸ்  கட்சியும்,  சுயமரியாதைக்  கட்சியும்  வகுப்புவாதக்  கட்சி  என்று  யார்  யார்  சொல்லுகின்றார்களோ அவர்கள்  ஒவ்வொருவரையுமே  கேழ்க்கின்றோம். தோழர்  ராஜகோபாலாச்சாரியார்  அவர்கள்  ஆகட்டும்,  தோழர்  சத்தியமூர்த்தி அய்யர்  அவர்கள்தானாகட்டும்  உண்மையில் இந்தியாவில்  மக்களிடையில்  ஜாதியின் பேராலோ,  சமையத்தின் பேராலோ,  உள்வகுப்பின்  பேராலோ  எவ்வித ...

வருணாச்சிரமமும்  சுயமரியாதையும்

வருணாச்சிரமமும்  சுயமரியாதையும்

  இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  வருணாச்சிரமக்காரர்களைச்  சுயமரியாதைக்காரர்கள்  ஆதரித்ததாகவும்  அதனால்  சுயமரியாதைக் காரர்களுக்கு  யாதொரு  கொள்கையும்  இல்லை  என்றும்  சில  பத்திரிக்கைகள்  எழுதி  வருகின்றன. அது  மாத்திரமல்லாமல்  சில  தோழர்களும்  அந்தப்படியே  பேசி  வருகின்றார்கள். இதற்கு  நம்மை  சமாதானம்  சொல்ல வேண்டுமென்று  இரண்டொரு  நண்பர்கள்  எழுதியும்  இருக்கிறார்கள். சுயமரியாதைக்காரர்கள்  அந்தப்படி  செய்தார்களா  இல்லையா  என்பது  ஒரு  புறமிருந்தாலும்,  எலக்ஷன்  பிரச்சினை  இன்னதென்றும்  ஒவ்வொருவரும்  என்ன  பிரச்சினையின்  மீது  பிரசாரம் செய்தார்கள்  என்றும்  தெரிந்து கொண்டால்  பிறகு  யார்  யார்   யாருடன்  சேர்ந்து வேலை  செய்ய வேண்டியதென்பதையும்  யார்  யார்  யாருக்கு  உதவி செய்ய வேண்டியது  நியாயம்  என்பதையும்  ஒருவாறு  முடிவு  செய்து  கொள்ளலாம். காங்கிரசுக்காரருடைய  பிரச்சினையெல்லாம்  ஜஸ்டிஸ்  கட்சியை  எப்படியாவது   ஒழித்துவிட  வேண்டும்  என்பதும்,  அரசியலில்  பார்ப்பனரல்லாதார்  பெற்றிருக்கும்  வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவத்தை  அழித்துவிட வேண்டும் என்பதும்,  மற்றும்  பல  துறைகளில்  பார்ப்பனரல்லாதார்   அடைந்திருக்கும்  சிறிது  முன்னேற்றத்தையும்  கெடுத்து  சகல  துறைகளிலும்  பார்ப்பனர்களே ...

“”வகுப்பு  வாதம்  கூடாது  ஆனால்  100க்கு  50 நமக்கே  வேண்டும்”

“”வகுப்பு  வாதம்  கூடாது ஆனால்  100க்கு  50 நமக்கே  வேண்டும்”

  சென்னை  மாகாண  சார்பாய்  இந்திய  சட்டசபை  பொதுத்  தொகுதிக்கு  10 ஸ்தானங்களுக்கும்  தேர்தல்  நடந்துவிட்டது.  அவற்றின்  முடிவு. சென்னை  நகரத்திற்கு தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  (பார்ப்பனர்) தஞ்சை  திருச்சிக்கு தோழர்  ஈணூ.ராஜ  அய்யங்கார்  (பார்ப்பனர்) கிருஷ்ணா  கோதாவரி தோழர் நாகேஸ்வரராவ் பந்துலு (பார்ப்பனர்) சித்தூர் தோழர்  யம்.அனந்தசயன  அய்யங்கார்  (பார்ப்பனர்) கஞ்சம்  விசாகபட்டணம் தோழர்  வி.வி.கிரி  பந்துலு  (பார்ப்பனர்) குண்டூர்  நெல்லூர் தோழர்  யன்.ஜீ.ரங்கா  (தெரியாது) மலையாளம் தோழர்  சாமுவேல்  ஆரன்  (கிருஸ்தவர்) கோவை,  சேலம்,  வடஆற்காடு தோழர்   டி.எஸ்.அவனாசிலிங்கம் செட்டியார்   (பார்ப்பனரல்லாதார்) செங்கல்பட்டு தென் ஆற்காடு தோழர் சி.என்.முத்துரங்க முதலியார்  (பார்ப்பனரல்லாதார்) மதுரை  ராமநாதபுரம் தோழர் பி.எஸ்.குமாரசாமி ராஜா ( பார்ப்பனரல்லாதார்) ஆகவே  மேற்படி  பத்து  ஸ்தானங்களில் 5  பார்ப்பனர்களும், 1 கிருஸ்தவரும், 1  நமக்கு விபரம்  தெரியாதவரும்,  3  பார்ப்பனரல்லாதாரும் வெற்றி  பெற்றிருக்கிறார்கள்.  எனவே  பார்ப்பனர்களே  பார்ப்பனரல்லாதார் களைவிட  மெஜாரிட்டியாய்  வெற்றி  பெற்றிருக்கிறார்கள்.  வகுப்பு  வாதம்  கூடாது. ...

“”இன்னமும்  பார்ப்பனர்  அல்லாதார் பிரச்சினை  ஏன்?”

“”இன்னமும்  பார்ப்பனர்  அல்லாதார் பிரச்சினை  ஏன்?”

    பார்ப்பனர்களை   ஜஸ்டிஸ்  கட்சியில்  சேர்த்துக்  கொள்வது  என்று  தீர்மானம் செய்து கொண்ட  பிறகு  பார்ப்பனர்  பார்ப்பனரல்லாதார்  என்கின்ற  பிரச்சினை ஏன்  தேர்தலில்  உபயோகப்படுத்தப்பட்டது?”  என்று  சிலர் கேழ்வி  கேட்கிறார்கள். இதற்கும்  சமாதானம் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். ஜஸ்டிஸ்  கட்சியில்  பார்ப்பனர்களைச்  சேர்த்துக் கொள்வது  என்கின்ற  பிரச்சினை வந்த  காலங்களில்  அதாவது  ஜஸ்டிஸ்  கட்சியாரின்  ஒரு சாதாரண  கூட்டத்திலும்,  ஜஸ்டிஸ்  கட்சி  மகாநாடு   கூட்டத்திலும்  தோழர்  ஈ.வெ.ராமசாமி அவர்கள்  எதற்காக  சேர்த்துக் கொள்ளப்படுகின்றது  என்றும்,  எப்படிப்பட்டவர்களை  சேர்த்துக் கொள்வது  என்றும்,   இதுவரை  ஏன் சேர்த்துக் கொள்ளப்படவில்லை  என்பதைப்  பற்றியும்,  சேர்த்துக் கொண்ட  பிறகும்  நாம்  எப்படி  நடந்து  கொள்ள வேண்டும்  என்பதைப்பற்றியும்  விபரமாய்  பேசியிருக்கின்றார். அதை  ஒரு தரமாவது  படித்துப்  பார்ப்பவர்களுக்கு  பார்ப்பனர்  பார்ப்பனரல்லாதார்  பிரச்சினை அடியோடு  போய்விட வேண்டியது   தானா  அல்லது  இன்னமும்  இருக்க வேண்டியது  தானா என்பது  நன்றாய்  விளங்கும். ஜஸ்டிஸ்  கட்சியில்  பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வது  என்பதில் ...

ஐ.இ.கு.  செங்கோடையன் முடிவெய்தினார்

ஐ.இ.கு.  செங்கோடையன் முடிவெய்தினார்

  ஐ.சி.எஸ்.  செங்கோடையன்  அவர்கள்  ஒரு சிறு  பருவில்  காயம்  பட்டதின்  காரணமாக  இரத்தம்  விஷமாகி 29  ந்  தேதி  சென்னையில்  காலமானதாகக் கேட்டு  மிகவும்  வருந்துகிறோம். அவர்  ஈரோட்டிற்கு  6வது  மைலில்  உள்ள நஞ்சை  ஊத்துக்குளி  என்னும் கிராமத்தில் உள்ள ஒரு கொங்குவேளாள குலத்தில் பிறந்து  வளர்ந்து,  ஈரோட்டிலும்  கரூரிலும்  கல்வி  கற்று  அவரது  திறமையினால்  நமது  சர்க்காரால்  லண்டனுக்கு  ஐ.சி.எஸ். பரீட்øக்ஷக்கு அனுப்பப்பட்டு  அதில் தேறி  கலெக்ட்டராக  ஆனவர்.  கோயமுத்தூரில்  பிரபல  குடும்பஸ்தராய்  இருக்கும்  தோழர்  வெள்ளியங்கிரி  கவுண்டர்  அவர்களது வீட்டில்  அவரது சகோதரர்  தோழர்  பழனிச்சாமிக்  கவுண்டர்  அவர்களது  குமாரத்தியை  மணந்தவர். சமீபத்தில்  அவர்  அனந்தப்பூர்  ஜில்லாவுக்கு  கலெக்ட்டராக  மாற்றப்பட்டதாகக்  கேள்வி. மிகவும்  வருணாச்சிரமச்  சார்பான  வீட்டில்  பெண் கொண்டிருந்தாலும்  கூட  தோழர்  செங்கோடையன்  அவர்கள்  சீர்திருத்தத்  துறையில்  மிகுதியும்  ஆர்வமுடையவர். அவர்  முதல்  முதல்  1919ல்  ஐ.சி.எஸ்.  பாஸ் செய்துவிட்டு  1920ல்  இங்கு  வந்த சமயம்...

கோவை  முனிசிபாலிட்டி

கோவை  முனிசிபாலிட்டி

  கோயமுத்தூர்  முனிசிபாலிட்டியில்  திவான்பகதூர்  இ.கு. ரத்தினசபாபதி  முதலியார்  அவர்கள்  சுமார்  15  வருஷ  காலமாக  சேர்மனாக  இருந்து  வந்ததும், கோவை  முனிசிபல்  நிருவாகம்  சென்னை   மாகாண  முனிசிபாலிட்டிகளில்  எல்லாம்  தலைசிறந்து  விளங்கியதும்,  அந்த  நிர்வாகத்தைப்  பற்றி  அரசாங்க  யாதாஸ்தில்  கோயமுத்தூர்  முனிசிபல்  நிர்வாகம் முதல்தர  நிர்வாகத்தில்  முதன்மையானதாக  கருதப்படக்  கூடியது  என்று  பல  வருஷங்களாகக்  குறித்து  வந்ததும்  யாவரும்  அறிந்ததாகும். அப்படிப்பட்ட  தோழர்  இ.கு.கீ.  அவர்கள்  சென்ற  மூன்று  வருஷத்திய  நிருவாகத்தின்  கடைசி  மீட்டிங்கில்  கவுன்சிலர்கள் அவரைப்  பாராட்டிப்  பேசியதற்குப்  பதிலளிக்கையில், தான்  இதுவரை  சேர்மன்  அலுவல்  பார்த்ததற்கும், அதற்காக  தன்னை  கவுன்சிலர்கள்  பாராட்டியதற்கும்  எல்லாம்  கவுன்சிலர்களுடைய  ஒத்துழைப்பே  காரணம்  என்று  சொன்னதோடு  தான் இனி சேர்மென்  பதவியில்  இருந்து  விலகி  விடுவதற்கு  கவுன்சிலர்கள்  அனுமதிக்க  வேண்டும்  என்றும், வேறு  தக்கவரை  தெரிந்தெடுத்துக்  கொள்ள வேண்டும் என்றும்  தானும்  ஒத்துழைத்து  தன்னால் கூடியதை  கவுன்சிலர்  என்கின்ற  முறையிலேயே  செய்து  வருவதாயும் ...

கொள்கை  இல்லாதவர்களுக்கு  வெற்றி

கொள்கை  இல்லாதவர்களுக்கு  வெற்றி

  இந்திய  சட்டசபைத்  தேர்தல்  இந்தியா  முழுவதிலும்  அனேகமாக  நடந்தாகிவிட்டது. இவற்றுள்  சென்னையே  பார்ப்பனர்களுக்கு  பெருமித  வெற்றி  அளித்து  எங்கு  பார்த்தாலும்  பார்ப்பன  வெற்றிக்  கொண்டாட்டத்  திருநாள்கள்  நடைபெறச்  செய்திருக்கிறது.  இத்திருநாள்களை  புராணத்  திருநாள்கள்  அதாவது  “”நரகாசூரன்  தோற்ற  நாள்”  (அல்லது)  “”நரகாசூரனைக்  கொன்ற  நாள்”  என்று  தீபாவளி  கொண்டாடுவது  போல்  “”பார்ப்பனரல்லாதார்  இயக்கம்  தோற்ற  நாள்  (அல்லது)  ஜஸ்டிஸ்  கட்சியை  வெட்டிப்  புதைத்த  நாள்”  என்று  இப்போது  ஊர்  ஊராய்  கொண்டாடப்  புறப்பட்டு விட்டார்கள்  நம்  பார்ப்பனர்கள்.  இத்திருநாள்  இனி  வருஷா  வருஷம்  (காந்தி  ஜயந்தி  முதலியவை  போல்)  கொண்டாடப்படலாம்.  இதில்  பார்ப்பனரல்லாதாரும்  பெருமிதமாய்  கலந்து  கொண்டு  எண்ணெய்  ஸ்நானம்  செய்து  புதுவேஷ்டி  அணிந்து  பலகாரம்  செய்து  சாப்பிடலாம்.  என்றாலும்  இத்திருநாள்  கொண்டாட்டத்தின்  பயனாய்  ஏற்பட்ட  லாபம்  என்ன  என்று  பார்ப்போமானால்  தோழர்கள்  சத்தியமூர்த்தி  அய்யர்,  ராஜகோபாலாச்சாரியார்,  டாக்டர்  ராஜ  அய்யங்கார்  இன்னும்  ஏதோ  இரண்டொரு  சாஸ்திரியார்கள்,  ராவுஜீக்கள்  ஆகியவர்கள் ...

தோழர்  வரதராஜுலு

தோழர்  வரதராஜுலு

  தோழர்  வரதராஜுலு  அவர்கள்  தோற்றுவிட்டார்  என்பதில் நாம்  சிறிதும்  ஆ÷க்ஷபிக்காமலும்   ஆ÷க்ஷபிப்பதும்  முடியாத   காரியம்  என்றும்  பலமான  தோல்விதான்  என்பதையும்  ஒப்புக்  கொள்ளுகிறோம். அவருக்கு  ஜஸ்டிஸ்  கட்சித்  தலைவர்  உள்பட  அநேகர்  ஆதரவளித்தார்கள்  என்றாலும்  தோல்வியே  ஏற்பட்டது  என்பது  உண்மைதான். ஆனால்  தோழர்  ஷண்முகம்  அவர்கள்  தேர்தலுக்கும்  தோழர்  எ.ராமசாமி  முதலியார்  அவர்கள்   தேர்தலுக்கும்  நடந்த  காரியங்கள்  தோழர்  வரதராஜுலு  நாயுடு  அவர்கள்  தேர்தலுக்கும்  நடந்ததா  இல்லையா  என்றால்  நடந்தது  என்றுதான்  சொல்ல வேண்டும்.  அதுவும்  நன்றாய்  நடந்தது  என்றுதான் சொல்ல வேண்டும்.  தோழர்  வரதராஜுலு   அவர்கள்  தேர்தலுக்கு  நிற்கும்  விஷயத்தைப்  பற்றி  தானே  முடிவு  செய்து  கொள்ளாமல்  தன்னையொத்த  இரண்டொரு  பார்ப்பனரல்லாத  காங்கிரஸ்வாதி,  தேசபக்தர்கள்  என்று  சொல்லப்படுகின்றவர்களை  கலந்து  ஆலோசித்தார்.  அதில்  சிலர்  அவரை  நிற்கச்   சொல்லி கட்டாயப்படுத்தியதோடு  தாங்கள்  ஊர்  ஊராய்,  கிராமம்  கிராமமாய்  தன்  சொந்தத்தில்  போய்க்கூட  நாயுடுவுக்காக  பிரசாரம்  செய்வதாய்  ஒப்புக்  கொண்டு   அவருக்கு ...

ஜஸ்டிஸ்  கட்சிக்கு  ஒரு  வார்த்தை

ஜஸ்டிஸ்  கட்சிக்கு  ஒரு  வார்த்தை

இந்திய  சட்டசபை  தேர்தலில்  ஜஸ்டிஸ்  கட்சி  தோற்றுவிட்டது.  தேர்தலில்  அதிகாரத்திலிருக்கும்  கட்சிக்கு  எப்பொழுதும்  பலம்  குறைவு  என்பதையும்,  எதிர்கட்சியில் இருப்பவர்களுக்கு  பலம்  அதிகம்  என்பதையும்,  அதிகாரத்தில்  இருப்பவர்கள்  மனதில்  வைத்துக்கொள்ள  வேண்டும்.  ஆதலால்  தேர்தல்  வந்தால்  எதிரிகளை  விட  அதிகாரத்தில்  இருப்பவர்கள் இரண்டு  பங்கு  பலமுடையவர்களாக  இருக்கக்  கணக்குப்  போட்டுக்  கொண்டால்தான்  தேர்தலில்  முகம்  கொடுக்க முடியும். இன்றைய  ஜஸ்டிஸ்  கட்சியார்  தங்கள்  கட்சியில்  யார்  யார் இருக்கிறார்கள்  என்று  சொல்லுவதற்கே  முடியாத  நிலையில்  இருக்கிறார்கள்.மந்திரிகள் வக்கிரமாகவே இருக்கிறார்கள். ஒரு  சமயம்  ஒற்றுமையாக  இருக்கிறார்கள்  என்றாலும்  அடுத்த  மந்திரி  பதவியும்  தங்களுக்கே  வரும்  என்றால்தான்  ஒற்றுமை  என்று  காட்டிக் கொள்வார்களே  தவிர மற்றபடி  ஒருவரை  ஒருவர்   கவிழ்க்கவே  தபஞ்  செய்து கொண்டிருப்பார்கள்  என்று  சொல்ல வேண்டி  இருக்கிறதற்கு  வருந்துகிறோம். வெளியில்  ஒவ்வொரு  ஜில்லா  தாலூக்காக்களில்  உள்ள  ஜில்லா  போர்டு  பிரசிடெண்டு  சேர்மன்  முதலியவர்கள்  அடுத்த  தடவையும்  பிரசிடெண்டு  சேர்மன்  ஆவதற்கு  யாருடைய ...

கமிஷனர்  அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்

கமிஷனர்  அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்

  ஈரோடு  முனிசிபாலிட்டிக்கு  கமிஷனர்  ஏற்பட்டு  சுமார் 2 மாத  காலமே  ஆன  போதிலும்  இதற்குள்  பல  துரைகளிலும்  சீர்திருத்தங்கள்  நடந்து  வருகின்றதானது  மகிழ்ச்சியடையக் கூடிய  காரியமேயாகும். என்றாலும்  சுகாதார  விஷயத்திலும்  தெருக்கள்  ஆக்கிரமிப்பு  விஷயத்திலும்  இன்னும்  அதிக  கவனம்  செலுத்தப்பட வேண்டியிருக்கிறது  என்பதை  தெரிவித்துக் கொள்ள வேண்டியவர்களாய்  இருக்கின்றோம். தெருக்கள் தெருக்கள்  அதாவது  ஜனங்கள்  குடி இருக்கும்  பாக  வீதிகள்  பெரிதும்  கக்கூசாகவே  உபயோகப்படுத்தப்பட்டு  வருகின்றன. குழந்தைகளை  பகல்  காலங்களில்  தாய்மார்கள்  தாராளமாக  தெருக்களில்  மலஜலம்  கழிக்க விடுகின்றார்கள். இரவு  நேரங்களில்  பெரியவர்களே  தெருக்களை  கக்கூசாக  உபயோகிக்கிறார்கள். குழாய்கள் தெருக்குழாய்களின்  பக்கத்தில் பாத்திரம்,  மாடு  கன்றுகள்  கழுவுகின்றார்கள்.  தெருக்குழாய்களில் துணிகள்  துவைக்கிறார்கள்.  தெருக்குழாய்களில்    ஸ்நானம் செய்கின்றார்கள். இக்காரியங்கள்  பெரிதும்  மேல்  ஜாதிக்காரர்கள் என்று  தங்களை  சொல்லிக்  கொள்ளுபவர்கள் குடி  இருக்கும்  வீதிகளிலேயே  அதிகமாய்  நடக்கின்றன. சில  சந்து  பொந்துகள்,  நடக்க  யோக்கியதையற்றவைகளாகவே  காணப்படுகின்றன. தெருக்களில்  குப்பைத்  தொட்டிகள்  அல்லாத  இடங்களில் ...

குழந்தை  வளர்ப்பும்  சுகாதாரமும்

குழந்தை  வளர்ப்பும்  சுகாதாரமும்

  நமது  நாட்டு  மக்களில்  100க்கு  95  பேர்  சுகாதாரத்தின்  பயனை  யறியாதவர்களாயும்  அதையறிந்து  கொள்ள வேண்டுமென்னும் அக்கறையில்லாதவர்களாயுமிருக்கின்றார்கள்.  காரணம்  படிப்பின்மையும்,  பழக்க  வழக்கமுமேயாகும்.  இதையனுசரித்தே  மேல்  நாட்டார்  நம்மை  சுகாதாரமற்றவர்கள்  என்றும்,  நாகரிகமற்றவர்கள்   என்றும்  நினைக்கிறார்கள்.  நம்  நாட்டிலும்  மேல்  ஜாதிக்காரர்கள்  என்போர்  தங்களை  நாகரிகஸ்தர்  என்றும்,  சுகாதாரமுடையவர்கள்  என்றும்  நினைத்துக் கொண்டு,  மற்றவர்களை  சுகாதாரமற்றவர்கள்  என்றும்  நாகரிகமற்றவர்கள்  என்றும்  தாழ்ந்த  ஜாதியார்கள்  என்றும்  குறிப்பிடுகிறார்கள்.  சுகாதாரமின்மையாலேயே  ஒரு  கூட்டத்தாரைத்  தாழ்த்தப்பட்டவர்கள்  என்று  காரணமும் தத்துவார்த்தமும் கூறப்படுகிறது.  அப்படிப்பட்ட  சுகாதாரத்தைக்  கைக் கொள்ளாத  தாழ்த்தப்பட்ட  மக்களை  சுகாதாரத்தைக்  கைக்  கொள்ள முடியாமல்  கிணறு,  குளம்,  நல்ல  வாழ்க்கை  முதலியவைகளை  கடவுள்  பேராலும்  மதத்தின்  பேராலும்  தடைப்படுத்தி  வைக்கப்பட்டிருக்கின்றது.  நம்மில்  அத்தகைய  இழிவும்  தடையும்  கற்பிக்கும்  மக்களின்  கெட்ட  எண்ணத்தையும்,  அதன்  பயனாய்  சுகாதார  வசதியை  அனுபவிக்க  முடியாமல்  தாழ்த்தப்பட்டவர்கள்  என்று  ஒதுக்கப்பட்டிருக்கும்  மக்களின்  பரிதாப  நிலைமையையும்  கண்கூடாகப்  பார்த்து  வருகிறோம். ...

தோழர். ஜே.என்.இராமநாதன்

தோழர். ஜே.என்.இராமநாதன்

  பார்ப்பனரல்லாத  மக்களின்  நலத்திற்காக  உழைத்து  வந்த  தோழர் ஜே.என்.  இராமநாதன்  அவர்கள்  15.11.34  ல்  சென்னையில்  மரணமடைந்தாரென்பதையறிந்து  வருந்துகிறோம்.  நமது  அனுதாபத்தை  அவர்  குடும்பத்தாருக்குத்  தெரிவித்துக்  கொள்கிறேம். பகுத்தறிவு  இரங்கல் செய்தி  18.11.1934

* ஜஸ்டிஸ் கட்சிக்கு ஈ.வெ.ராமசாமி   

* ஜஸ்டிஸ் கட்சிக்கு ஈ.வெ.ராமசாமி   

  6 மாதத்திற்கு  முன் செய்த  எச்சரிக்கை தலைவரவர்களே!  தோழர்களே! ! தலைவரவர்கள்  தெரிவித்த  விஷயங்கள்  இயக்கநலனைக்  கருதி  அவசியம்  கவனிக்கத்  தக்கதாகும்.  எல்லா  விஷயத்தையும்  விட  நமது  கொள்கை  என்ன?  திட்டம்  என்ன?  என்பதைப்  பொது  ஜனங்கள்  அறியும்படி  செய்ய வேண்டும்.  ஜஸ்டிஸ் கட்சி  என்றால்  மாதம்  4000 ரூ.  சம்பளத்துக்கும்  மந்திரி  பதவிக்கும்  ஊர்  சிரிக்கச்  சண்டை  போட்டுக் கொண்டிருக்கும்  கூட்டம்  என்று  இனியும்  பாமர  ஜனங்கள்  சொல்லும்படி  நாம்  விட்டுக் கொண்டிருக்கக் கூடாது.  காங்கிரசுக்காரர்கள்  என்பவர்களின்  உள்  எண்ணமும்,  நாணையமும்  எப்படியிருந்தாலும்  அவர்கள்  ஏதோ  இரண்டொரு கொள்கைகளைச் சொல்லி, அதைப்  பெரிதாக்கிக்  காட்டி  அதற்காக  அடியும்,  உதையும்,  நஷ்டமும்,  கஷ்டமும்,  சிறைவாசமும்  பெற்றவர்கள்  என்கின்ற  பெயரைப்  பெற்றிருக்கிறார்கள். அவர்களோடு  இப்பொழுது  திடீரென்று  போட்டி போடுவதென்றால் அதுவும் ஒரு விளக்கமான  யாவருக்கும் தெரியும்படியான ஒரு கொள்கையும், திட்டமும் இல்லாமல் போட்டி  போடுவதென்றால்    சுலபமான  காரியமல்ல  என்பதே  எனது  அபிப்பிராயம். ...

தோல்வி  ஆனால்  நன்மைக்கே

தோல்வி  ஆனால்  நன்மைக்கே

  சென்ற  வாரம்  நடந்த  இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  பார்ப்பனரல்லாதார்  இயக்க  சார்பாய்  நிறுத்தப்பட்ட  அபேக்ஷகர்களும்  பார்ப்பனரல்லாதார்   இயக்கப்  பிரமுகர்களால் ஆதரிக்கப்பட்ட  அபேக்ஷகர்களும்  அனேகமாக  எல்லோரும்  தோல்வி  என்பதை  அடைந்துவிட்டார்கள்.  தோல்வி  என்றால்  நல்ல  பரிசுத்தமான   பாதாளத்துக்குக்  கொண்டு போகும்படியான  தோல்வி  என்று  சொல்லத்தக்க  வண்ணம் தோல்வி  அடைந்திருக்கிறார்கள்  என்று  தான் சொல்ல  வேண்டும். பார்ப்பனரல்லாதார் சார்பாய்  வெற்றி ,  வெற்றி,  வெற்றி  என்று  வீரம்  பேசிய  நமது  வாயும்  கையும்  வெட்கப்படத்  தக்க தோல்வி  என்று  சொன்னால் தலைகுனிந்து  பொருத்துக் கொள்ள  வேண்டியது  தான்.  அதற்குக்  காரணமும்  சமாதானமும்  பதினாயிரம்  இருந்தாலும்  தேர்தல் முடிவு  தோல்வி  தான் என்பதில் சிறிதும்  ஆ÷க்ஷபனையோ,  விவகாரத்துக்கு  இடமோ  இல்லை  என்பதே  நமதபிப்பிராயம்.  அதுவே  நம்  வீரத்துக்கு  அறிகுறியாகும். எனவே  நல்ல  தோல்வி  அடைந்துவிட்டோம்  என்பதை  ஒப்புக் கொள்ளத்தக்க  தைரியம்  நம்  எல்லோருக்கும்  இருக்க வேண்டியது  மிகவும்  அவசியமாகும். ஆனால்  இத்  தோல்வியின்  பயன் ...

மற்றுமொரு  தொல்லை

மற்றுமொரு  தொல்லை

  மதங்களின்  பெயரால்  கடவுளின்  பெயரால் ஜாதிகளின்  பெயரால்  மனிதனை  மனிதன்  பிய்த்துப்  பிடுங்கித் தின்னும் இந்நாட்டில்  ஒரு  கவளம்  சோற்றுக்கு  வழியின்றி  எச்சிக்கல்லை  நாயோடு  சண்டை  போட்டுழலும்  ஏழைமக்கள்  பல்லாயிரக்கணக்காயுள்ள  இந்நாட்டில்  மத சம்மந்தமான  தெய்வ  சம்மந்தமான    ஆடம்பரத்  தொல்லைகள் வாரம் தோறும்  மாதம்  தோறும் வந்து கொண்டுள்ளன.  தீபாவளித்  தொல்லை வந்து  இன்னுந்  தீர்ந்த பாடில்லை.  முதலாளிகளின்  கோடியாடைகளின்னும்  மழுங்கவில்லை.  பலகார  பக்ஷணங்களின்  மப்பு  மந்தாரம்   இன்னும்  வெளியாகவில்லை. மயிலாடுவதைக்  கண்டு  கோழியாடிய மாதிரி  தாமும்  அம்முதலாளிகளைப்  பின்பற்றி  இமிடேஷன்  கொண்டாட்டம் நடத்திய  ஏழைகள்,  கூலிகள்,  அடிமைகள்,  பாட்டாளி  மக்கள்  அதனால்  பட்ட  கடன்  தொல்லைகள்  இன்னும்  தீர்ந்தபாடில்லை. இந்த  லக்ஷணத்தில்  “”கார்த்திகை  தீபம்”  என்று  மற்றொரு  தொல்லையும்  சமீபத்தில்  வந்துவிட்டது.  தீபாவளித்  தொல்லையாவது  இருந்த  இடத்திலேயே  மக்களைப்  பிடித்தாட்டி  விட்டு  போய்விட்டது. இதுவோ  ( அண்ணாமலை  தீபமோ)  கடவுளே  ( சிவன்)  ஜோதி  மயமாகக்  கிளம்புகிறாரென்பதாக  அண்ணாமலை ...

இனியாவது  உணருவாரா?

இனியாவது  உணருவாரா?

  காங்கிரஸ்காரர்  என்பவர்கள் 100க்கு  99 முக்காலே  மூன்று  வீசம்  பேரும்  பொய்,  புரட்டு,  சூட்சி,  தந்திரம்,  சமயத்துக்குத்  தகுந்தபடி  சரணம்  போட்டுக் கொள்வது ஆகிய  குணங்களையே  கொள்கையாகவும்,  திட்டமாகவும்  வைத்து அதற்கு  நீதியும்,  சத்தியமும்  என்று  பெயர்கொடுத்து  காங்கிரஸ்  காரியத்தை  அதாவது  தங்களது  வாழ்க்கையை  நடத்தி வருகிறார்கள்  என்கின்ற  அபிப்பிராயமானது  நமக்கு  நாளுக்கு  நாள்  பலப்படுவதுடன்  வளர்ந்து  கொண்டே  வருகிறது. பாமர  மக்களை  ஏமாற்றுவதற்கென்று  செய்யப்படும்  சூட்சிகளை  இன்றைய  காங்கிரஸ்  பிரசாரத்தின்  பயனாய்  மக்கள்  அறிய  முடியாமல்  இருந்தாலும்  கூட  அதற்கும்  ஒரு  அளவோ, மானம்  வெட்கமோ,  மனிதத்  தன்மையோ  இல்லாமல்போய் விட்டதை  வெளியாக்காமல் இருக்க முடியவில்லை. இந்த  5, 6 மாத  காலத்தில்  தமிழ்நாட்டில்  ஸ்தல  ஸ்தாபனங் களுக்குப்  பல  தேர்தல்கள்  நடந்திருக்கின்றன.  அவற்றிற்காக ஒவ்வொரு  ஊரிலும்  பார்ப்பனர்  பார்ப்பனரல்லாதார்  என்றும்,  காங்கிரஸ்காரர்  காங்கிரசுக்காரரல்லாதார்  என்றும்  சொல்லப்பட்ட  பிரிவுகளின் பேரால்  தேர்தல்கள்  நடந்தன.  அவற்றுள்  ஜெயித்தால்  “”காங்கிரசுக்கு  ஜெயம்” ...

காந்தியின்  புதிய  திட்டம்

காந்தியின்  புதிய  திட்டம்

  மக்களைக்  காட்டுமிராண்டி  வாழ்க்கைக்குத்   திருப்புதல் தோழர்  காந்தி  காங்கிரசை விட்டு  விலகியது  பொது  ஜனங்களுக்கும்,  தேசத்துக்கும்  பெரியதொரு  லாபகரமான  காரியமானாலும், வேறு  வழியில்  அவர்  செய்யப்  புகுந்திருக்கும்  காரியம்  மனித  சமூகத்துக்கே  மிகவும்  பிற்போக்கான  காரியமே  ஆகும். எப்படி  எனில்  தனது  கொள்கையில்  காங்கிரசில்  இருப்பவர்களுக்கு  நம்பிக்கையில்லை  என்பது  ஒரு  புறமிருக்க,  தான்  (காந்தியார்)  இனி  செய்யப்போகும்  காரியங்களை  அவர்கள்  தடை செய்யக்கூடும்  என்கின்ற  எண்ணத்தின் மீதே  விலகினாரானாலும்  இனி  அவர்  விலகிச் செய்யப் போகும்  காரியம்  என்பது பெயர் மாத்திரத்தில்  காதுக்கு  இனிமையானதாக  இருக்கின்றதே  ஒழிய,  காரியத்தில்  முழு  மோசமானதென்றே  சொல்ல வேண்டி இருக்கிறது. அதாவது,  கிராம  புனருத்தாரணம்  என்றும்,  கிராம  கைத்தொழில்  சங்கமென்றும் சொல்லிக் கொண்டு  பணம்  வசூல்  செய்ய ஆரம்பித்து  விட்டார்.  டில்லியில் ஏதோ  ஒரு கோடீஸ்வரர்  20  லட்சம்  ரூபாய்  கொடுத்ததாக  பத்திரிகைகளில் சேதி  வெளியாய்  இருக்கின்றது. ஆனால்  காந்தியார்  அதை  மறுக்கிறார்  என்றாலும். ...

சென்னை  பச்சையப்பன்  மண்டபத்தில்   ராமசாமியின்  முழக்கம்

சென்னை  பச்சையப்பன்  மண்டபத்தில்  ராமசாமியின்  முழக்கம்

  அ. ராமசாமி  முதலியாருக்கு  ஆதரவு “”இன்று  தோழர்  ஷண்முகம் இக்கூட்டத்திற்கு  வந்து  பேச  வேண்டும்  என்று  குறிப்பிட்டிருந்தது. ஆனால்  அவருக்குத் தேக  அசௌக்கியமேற்பட்டிருப்பதை  முன்னிட்டு அவரால்  வரமுடியவில்லை.   நமது  தேர்தல்  விஷயமாக  கவலைப்பட  வேண்டாமென்று  பலர்  பலவிதமாக  பத்திரிகைகளில்  எழுதி  வருவதை நம்ப  வேண்டாமென்றும்,  தாம்  வெற்றி  பெறுவது  நிச்சயமென்று  அவர்  உங்களுக்குத்  தெரிவிக்கும்படி  என்னிடம்  சொன்னார்.  (பலத்த  கரகோஷம்) இன்று  தொண்டர்களைக் கூட்டி  அவர்கள்  தேர்தலில்  எப்படி  நடந்து கொள்வதென்பது  பற்றி  அறிவுறுத்துவதே  இக்கூட்டத்தின்  நோக்கமாகும்.  ஆனால் இப் பெரிய  கூட்டத்தில்  அது  சாத்தியமல்ல வாகையால்  தொண்டர்களாகச்  சேர  விரும்புவோரெல்லாம் ஞாயிற்றுக்  கிழமை  மாலை  தியாகராய  மெமோரியல்  ஹாலுக்கு  வந்தால்  அவர்கள்  நடந்து கொள்ளவேண்டிய  முறையையும்  இதர  விவரங்களையும்  தெரிவிப்போம். தேர்தல்  பிரசாரப்  போக்கு தோழர் ராமசாமி  முதலியார்  தேர்தல்  விஷயத்தில் மிக்க  ஊக்கமுள்ள  ஏராளமான  வாலிபர்கள்  இங்கே  கூடியிருப்பது  நல்ல  அறிகுறியாகும்.  தேர்தல்  பிரசாரத்தின்  போக்கு   உங்களுக்கு ...

சுயமரியாதை  இயக்கமும்    ஜஸ்டிஸ் கக்ஷியும்

சுயமரியாதை  இயக்கமும்   ஜஸ்டிஸ் கக்ஷியும்

  சுயமரியாதை  இயக்கம்  ஆரம்பித்த கால  முதல்கொண்டு  பார்ப்பனரல்லாதாரின்  சுயமரியாதைக்காக  உழைத்து  வருவதும்  ஜஸ்டிஸ்  கக்ஷிக்கு  உதவி  புரிந்து  வருவதும்,  ஜஸ்டிஸ் கக்ஷிப்  பிரமுகர்களுடைய  ஆதரவு  பெற்று  வந்ததுமான  காரியம்  எதுவும்  சுயமரியாதை  இயக்கத்திலுள்ள  எவரும்  அறியாததல்ல.   ஜஸ்டிஸ்  கக்ஷியானது  சென்ற  தேர்தலில்  நின்ற  காலத்தில்  சுயமரியாதை இயக்கம்  அதற்கு  உதவி  புரிந்து  வந்திருக்கிறது. செங்கல்பட்டில்  கூடின  சுயமரியாதை  மாகாண  கான்பரன்ஸ்  என்பது  முழுதும்  ஜஸ்டிஸ்  கக்ஷி  பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும்  நடந்ததும்,  மற்றும்  ஜஸ்டிஸ்  கக்ஷியைச்  சேர்ந்த  இளைஞர்,  முதியோர்  ஆகியவர்கள்  பெரிதும்  சுயமரியாதை  இயக்கத்தில் இருந்து  வந்ததும்  சுயமரியாதை  இயக்கத்திலுள்ள  முதியோர்,  இளைஞர்  ஆகியவர்கள்  பெரிதும்  இன்னும்  ஜஸ்டிஸ்  கக்ஷியில்  இருந்து  வருவதும்  ஒருவரும்  அறியாததல்ல. மற்றும்  சுயமரியாதை  இயக்கம்  அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத  சமூகம்  சமூகத்துறையில்  சமதர்மம்  அடைய  வேண்டும்  என்பதை  முதன்மையாகக்  கொண்டது  என்பதை  அநேக  சுயமரியாதைக்காரர்  ஒத்துக்கொண்டும்,  அதை  அமுலில்  நடத்த ...

விளம்பரப்  பிரசாரம்

விளம்பரப்  பிரசாரம்

  காங்கிரஸ்  திருவிழா  கூடிக்  கலைந்துவிட்டது.  அதன்  கொள்கையினால்  எவ்வித  மாற்றமும்  ஏற்பட்டு  விடவில்லை.  ஜஸ்டிஸ்  கட்சி  மகாநாட்டில்  அதன்  நிர்வாக  விதிகளில்  பார்ப்பனர்களைச்  சேர்க்கலாம்  என்ற  ஒரு  மாற்றம்  செய்யலாமா?  வேண்டாமா?  என்பதே  ஒரு  முக்கிய  பிரச்சினையாய்  இருந்து  அதன்  பேரிலேயே  எல்லா  விவாதமும்  நடந்து  எப்படி  அம்மகாநாடு  முடிந்ததோ  அது  போலவே  காங்கிரசிலும்  அதன்  நிர்வாக  வேலைத்  திட்டத்தில்  அஹிம்சை,  சத்தியம்,  ராட்டினம்,  கதர்  என்பன  போன்ற  பயனற்ற  வார்த்தைகளைப்  பேசுவதிலும்,  இயற்கைக்கு  விரோதமான  அனுபவ  சாத்தியமில்லாத  தத்துவங்களை  வலியுறுத்துவதிலுமே  5,  6  நாள்கள்  செலவழிக்கப்பட்டு  கடைசியாக  பெரும்பான்மையான  ஜனங்களுக்குப்  புரியாத  ஏதோ  சில  தீர்மானங்களுடன்  முடிவு  பெற்றது  என்றுதான்  சொல்ல  வேண்டி யிருக்கிறது. இதற்குப்  பொது  மக்களின்  பணம்  சுமார்  2,  3  லட்ச  ரூபாய்க்கு  மேலாகவே  செலவாகி  இருக்கலாம்.  பதினாயிரக்கணக்கான  மக்களுக்கு  4,  5  நாளாவது  வேலை  கெட்டு  இந்தத்  திருவிழாவில்  காலங்  கடத்தப்பட்டு  இருக்கலாம்....

சென்னை  பெண்கள்  சங்கத்தின்  அறியாமை

சென்னை  பெண்கள்  சங்கத்தின்  அறியாமை

  சென்னையில்  இந்திய  பெண்கள்  சங்கம்  என்பதாக  ஒரு  சங்கம்  இருக்கின்றது.  அது  சென்னை  செல்வவான்கள்  பெண்களும்,  அதிகாரிகள்  மனைவிகளும்,  வக்கீல்  மனைவிகளும்  பெரும்பான்மையாகக்  கொண்டதாக  ஒரு  சில  ஸ்திரீகளைக்  கொண்டதாக  இருந்து  வருகின்றது. இந்த  நாட்டுப்  பணக்காரர்கள்  ஜமீன்தார்கள்  ஆகியவர்களுக்கு  எப்படி  உண்மையான  விடுதலை  தேவை  இல்லையோ  அதேபோல்  இந்த  பெண்களுக்கும்  உண்மையான  விடுதலை  தேவை  இல்லை  என்பதோடு  தெரிவதற்குக்  கூட  முடியாத  நிலைமையில்  இருந்து  வருகிறார்கள். இந்த  லக்ஷணத்தில்  இவர்கள்  அரசியல்  துறையில்  பிரவேசித்து  தோழர்  சத்தியமூர்த்தியை  ஆதரிக்க  வேண்டுமென்று  ஆசைப்பட்டார்கள்  என்றால்  பெண்கள்  சமூகத்துக்கு  அதைவிட  வெட்கக்  கேடு  வேறு  இல்லை  என்றுதான்  சொல்ல  வேண்டும். தோழர்  சத்தியமூர்த்தி  அவர்கள்  ஆண்களும்  பெண்களும்  சரிசமானமான  சுதந்திரத்துக்கு  அருகதையுடையவர்கள்  என்பதையே  ஒப்புக்கொள்ளுவதில்லை  என்பதோடு  சாஸ்திரங்களிலும்,  புராணங்களிலும் பெண்களுக்குள்ள  இழிவையும்,  தாழ்வையும்  அப்படியே  நிலைநிறுத்தப்  பாடுபடுகின்றவர்  என்பது  யாவரும்  அறிந்ததேயாகும். உதாரணமாக  தேவதாசித்  தொழிலை  ஒழிக்கக்  கொண்டு  வந்த  சட்டத்தை ...

இந்திய  சட்டசபைத்  தேர்தலில் 

இந்திய  சட்டசபைத்  தேர்தலில் 

  தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  அவர்களுக்கு  சென்னை  ஓட்டர்களின்  பகிரங்கக்  கேள்விகள் தாங்கள் சிறை  சென்ற  “”தியாகத்”தைப்  பற்றி  “ஏ’  வகுப்புக்  கைதியாகப்  போடப்பட  வேண்டுமென்று  கேட்டுக்  கொண்டதும்,  பிறகு அதிலும்  பிறரைவிட  அதிக  வசதிகள்  வேண்டுமென்று  கேட்டு  வாங்கிக்  கொண்டதும்,  பிறகு  ஜஸ்டிஸ்  கட்சியாரைக்  கொண்டு  சிபார்சு  செய்து  ஆஸ்பத்திரிக்கு  வந்ததும்,  பிறகு  அதை  விட்டு  குறித்த  காலத்திற்கு  முந்தி  விடுதலையாவதற்கு  ஜஸ்டிஸ்  கட்சியார்  சிபார்சு  செய்ததுமான  விஷயங்கள்  இருக்கும்போது,  ஜஸ்டிஸ்  கட்சியைத்  தூற்றுவதும்  “தியாகம்’  என்று  சொல்லிக்  கொள்வதும்,  யோக்யமான  செயலாகுமா? பெண்களில் ஒரு  கூட்டத்தாராகிய  தேவதாசிகளை  கோவிலில்  ஆடவிட்டால்தான்  இந்து  மதம்  நிலைக்குமென்று  சொல்லி  பெண்  சமூகத்தை  இழிவுபடுத்திய  தங்கட்கு  பெண்களுடைய  ஓட்டுகளைக்  கேட்க  வெட்கமில்லையா? ஜஸ்டிஸ் கட்சியை  “வகுப்புவாதக்’  கட்சியென்று  கூறும்  தாங்கள்,  உங்களுடைய  இனத்தார்களாகிய  பிராமணர்களின்  வீடுகளில்  100க்கு  99ல்  “”கூணி  டூஞுt  ஞூணிணூ  ஆணூச்டட்டிணண்  ணிணடூதூ”  (“”பிராமணர்களுக்கு  மட்டும்  வாடகைக்கு  விடப்படும்”)  என்று ...