அருஞ்சொல் பொருள்
அசூயை பொறாமை, அவதூறு
அத்தியந்தம் மிகவும்
அந்தர் தலைகீழாய் பாயும் செயல்
ஆத்மீகம் தன்வினை பற்றி வரும் துன்பம்
ஆஸ்பதம் இடம், பற்றுக்கோடு
இத்யாதி இவை போன்ற
உதார குணம் பெருங்கொடைத் தன்மை
உபமாக இரண்டாவதாக
உற்பவித்தல் தோன்றுதல், பிறப்பித்தல்
ஒரு அம்மன்
காசு அளவு புதுக்கோட்டை அரசர்கால நாணய வகை
320 அம்மன் காசு = 1 ரூபாய்
கண்டனை மறுப்பு
கல்லுக்கும் இரத்தினத்துக்கும்
காயம் உடல்
குண்டுணி கலகமூட்டுகை
சம்சயம் அய்யம், சந்தேகம்
சரீராப்பியாசம் உடற்பயிற்சி
சவுத்தல் விலைபடாமலிருத்தல்
சாய்கால் செல்வாக்கு
சாவோலை இழவோலை (சாவை அறிவிக்கும் மடல்)
சுங்கான் கப்பல் திருப்பும் கருவி
தர்பித்தல் நிலைபெறச் செய்தல், பிரதிட்டை செய்தல், பயிற்சி கொடுத்தல்.
திருஷ்டாந்தம் எடுத்துக்காட்டு
தியங்க கலங்க
திரேகப்பிரயாசை உடலுழைப்பு
துரபிமானம் வீண்செருக்கு, வெறுப்பு
தூஷணம் பழிப்பு
நாதனற்று தலைவர் இல்லாமல்
நிர்த்தாரணம் நிலையிடுகை, அழிதல், சிதைதல்
பச்சகானாக்கள் கூத்தாட்டுச் சிறார்கள்
பஞ்சேந்திரியம் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் அய்ம்பொறிகள்.
பரகிய பிறனுக்கு உரியவள்
பரிமளிக்க சிறக்க
பாதாரவிந்தம் பாதத் தாமரை
பாஷியம் விளக்கவுரை
பிதுரார்ஜ்ஜிதம் முன்னோர் தேட்டை
பிரசன்னம் மகிழ்ச்சி
புழுத்தம் புழு
புனருத்தாரணம் மீண்டும் நிலை நிறுத்துகை.
யாதாஸ்து அறிக்கை
யோக்கியதாபக்ஷமாய் தகுதி பற்றிய மதிப்பு
ராஜாளி கழுகு (பெரிய வகை)
லாகிரி போதை
லொட்டை தாழ்ந்தது
வாக்குத்தத்தம் உறுதிமொழி கூறல்
வாசா கைங்கரியம் வெறும் பேச்சு
விசனித்தல் துயருறுதல்
விமலம் சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று
வியர்த்தம் வெளிப்படை
விவகரித்தல் விரித்துக் கூறுதல், வழக்காடல்
விரக வேதனை காதலர்க்குப் பிரிவாலுண்டாகும் துன்பம்
ஹானி கேடு