“”வகுப்பு வாதம் கூடாது ஆனால் 100க்கு 50 நமக்கே வேண்டும்”
சென்னை மாகாண சார்பாய் இந்திய சட்டசபை பொதுத் தொகுதிக்கு 10 ஸ்தானங்களுக்கும் தேர்தல் நடந்துவிட்டது. அவற்றின் முடிவு.
சென்னை நகரத்திற்கு
தோழர் சத்தியமூர்த்தி அய்யர் (பார்ப்பனர்)
தஞ்சை திருச்சிக்கு
தோழர் ஈணூ.ராஜ அய்யங்கார் (பார்ப்பனர்)
கிருஷ்ணா கோதாவரி
தோழர் நாகேஸ்வரராவ் பந்துலு (பார்ப்பனர்)
சித்தூர்
தோழர் யம்.அனந்தசயன அய்யங்கார் (பார்ப்பனர்)
கஞ்சம் விசாகபட்டணம்
தோழர் வி.வி.கிரி பந்துலு (பார்ப்பனர்)
குண்டூர் நெல்லூர்
தோழர் யன்.ஜீ.ரங்கா (தெரியாது)
மலையாளம்
தோழர் சாமுவேல் ஆரன் (கிருஸ்தவர்)
கோவை, சேலம், வடஆற்காடு
தோழர் டி.எஸ்.அவனாசிலிங்கம் செட்டியார் (பார்ப்பனரல்லாதார்)
செங்கல்பட்டு தென் ஆற்காடு
தோழர் சி.என்.முத்துரங்க முதலியார் (பார்ப்பனரல்லாதார்)
மதுரை ராமநாதபுரம்
தோழர் பி.எஸ்.குமாரசாமி ராஜா ( பார்ப்பனரல்லாதார்)
ஆகவே மேற்படி பத்து ஸ்தானங்களில் 5 பார்ப்பனர்களும், 1 கிருஸ்தவரும், 1 நமக்கு விபரம் தெரியாதவரும், 3 பார்ப்பனரல்லாதாரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே பார்ப்பனர்களே பார்ப்பனரல்லாதார் களைவிட மெஜாரிட்டியாய் வெற்றி பெற்றிருக்கிறார்கள். வகுப்பு வாதம் கூடாது. வகுப்பு பிரிதிநிதித்துவம் கூடாது என்று பார்ப்பனர்கள் கூப்பாடு போட்டு தங்கள் வகுப்பை உயர்த்திக் கொள்ளும் வகுப்பு வாதமும் தங்கள் வகுப்புக்கு அதிக ஸ்தானம் பெற்றுக் கொள்ளும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் அடைவதை இப்போதாவது வகுப்புவாதம் கூடாது என்று சொல்லும் பார்ப்பனரல்லாத “”வீரர்”கள் (துரோகிகள்) உணர்வார்களாக.
பகுத்தறிவு செய்திக் குறிப்பு 02.12.1934