கான் அப்துல்  கபூர்கான்

 

எல்லைப்புறக் காந்தி  என்று பட்டம் சூட்டப்பட்ட  தோழர் அப்துல்கபூர்கான்  அவர்கள்  ராஜத்துவேஷ  குற்றத்துக்காக   இரண்டு வருஷம்  தண்டிக்கப்பட்டுவிட்டார்.

தான்  செய்த காரியத்துக்காகவோ,  பேசிய  பேச்சுக்காகவோ  வருத்தம்  தெரிவிப்பதன் மூலம் மன்னிப்புக் கேட்டும் அரசாங்கம் மனமிரங்காமல் இரண்டு வருஷம் தண்டித்துவிட்டது.

வெள்ளை அறிக்கையையும், பார்லிமெண்டு கூட்டுக் கமிட்டி அறிக்கையையும்  நிராகரிக்கிறது  என்கின்ற  காங்கிரஸ்  திட்டத்தில்  அரசாங்கத்தை மன்னிப்புக் கேட்டுக் கொள்வது  என்பதும்  ஒரு பிரிவு  போல் காணப்படுகின்றது.  ஐயோ  பாவம்  காங்கிரசே!   நீ  இன்னமும்  என்ன கதிக்கு  ஆளாகப்  போகின்றனையோ!! உனது  வீரமே  வீரம்!!!

பகுத்தறிவு  துணைத் தலையங்கம்  23.12.1934

You may also like...