இதை நீங்கள் தயவு செய்து கவனியுங்கள் எதற்காக  தெரியுமா?

 

நீங்கள்  ஒவ்வொருவரும்  எப்படியாவது  கஷ்டப்பட்டு  இரண்டு  அல்லது  ஒரு  சந்தாதாரரையாவது  சேர்த்து  8  அணாவாவது  அட்வான்ஸ்  வாங்கி  விலாசத்துடன்  நமக்கு  அனுப்பிக் கொடுங்கள்.

ஏன்?

பகுத்தறிவு  ஒரு  தனி  மனிதனுடைய  சுயநலத்துக்கோ  ஒரு  தனி  வகுப்பாருடைய  நன்மைக்கோ  நடைபெறுவதல்ல.

ஆனால்  இன்று  ஆதிக்கத்திலிருக்கும்  வகுப்பாருடைய  விஷமமும்  சூழ்ச்சியும்  நிறைந்த  எவ்வளவோ  எதிர்ப்புகளையும்  தொல்லைகளையும்  சமாளித்துக் கொண்டு  இழிவுபடுத்தப்பட்ட  மக்களுக்காகவும்,  ஏழ்மைப்படுத்தப் பட்ட  மக்களுக்காகவும்  பின்தள்ளப்பட்ட   மக்களுக்காகவும்  நடை பெறுகின்றது.

இந்த  வருஷத்தில்   மாத்திரம்  3  தடவை பத்திரிகை  நிறுத்தப்பட்டு  விட்டதாலும்  2, 3  தடவை  ஜாமீன்  கட்டும்படி  உத்திரவு  செய்யப்பட்டதாலும்,  பத்திரிகை  விஷயமாய்  3  கேசுகள் ஏற்பட்டு  அபராதங்களும்  தண்டனைகளும்  விதிக்கப்பட்டதாலும்,  கேசுகளை  எதிர்வழக்காடியதாலும்  5000  ரூபாய்க்கு  மேற்பட்ட   நஷ்டங்களேற் பட்டதோடு  பத்திரிகை  சந்தா  எண்ணிக்கையும்  குறையத்  தலைப்பட்டு விட்டது.  ஏஜண்டுகள்  பெரும்பாலோர்  அதாவது  இயக்கத்தின்  மேல்  உள்ள  ஆர்வத்தினால்  இயக்கத்தில்  உள்ளவர்களால்  இயக்க  நன்மைக்காகப்  பாடுபட்டவர்கள்  என்று சொல்லிக்கொள்ளுபவர்கள்  எங்கெங்கு  ஏஜண்டாயிருந்தார்களோ  அவர்களது பாக்கிகள் 100க்கு  90  ரூபாய்  வீதம்  வசூலாகாமல்  போய்விட்டதுடன்  கண்டித்து கேட்கப் பட்டதினால்  அவர்களது  விரோதத்துக்கும்   ஆளாக  நேரிட்டுவிட்டது.  மற்ற பொது  ஏஜண்டுகளும்  சிலர்  ஒழுங்காய்  நடந்து கொள்ளாததால்  எலக்ஷனுக்குப்  பிறகு  பத்திரிகை  அனுப்புவதை  நிறுத்திக்கொள்ள வேண்டியதாகி விட்டது.

ஆதலால்  “”பகுத்தறிவு”க்கு  ஆதரவளிக்க  வேண்டும்  என்று  கருதுகின்ற  ஒவ்வொரு  தோழர்களும் தயவு  செய்து இரண்டு  சந்தாதாரர்களையாவது  சேர்த்துக்  கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட வேண்டியவர்களாகி  விட்டார்கள்.  இதைச்  சிறிது   முக்கியமானதாகக்  கருத  வேண்டுமாய்  வேண்டுகிறோம்.

பத்திராதிபர்.

குறிப்பு:            உதவி  செய்தவர்கள்  பெயர்கள்  பிரசுரிக்கப்படும்.

…………………………………………………………………………………..

“”பகுத்தறிவு”  காரியாலயம்  மானேஜர்  அவர்களுக்கு…………………  ஐயா  அடியில்  கண்ட  விலாசப்படிக்கு  ஒரு  வருஷத்துக்கு  பகுத்தறிவு  பத்திரிகை  அனுப்பி  வைக்கக்  கோறுகிறேன்.  சந்தா  ரூபாய்  3  இத்துடன்  அனுப்பி  இருக்கிறேன்.

தேதி…………….             கையெழுத்து

விலாசம்……………………………………………………

பேர்……………………………….. குறிப்பு……………..

ஊர்…………………………………………………………..

போஸ்டாபீஸ்…………………………………………….

 

பகுத்தறிவு  அறிவிப்பு  02.12.1934

You may also like...