பா.ஜ.க. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரிக்கும் சூழ்ச்சி வலை
‘இந்துத்துவா’ அரசியல் வரும் தேர்தலில் எடுபடாது என்ற முடிவுக்கு வந்த பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சூழ்ச்சி வலை வீசி வாக்குகளாக மாற்றும் திட்டத்தை உருவாக்கி வருகிறது. சர்வதேச காதலர் தினமான பிப்ரவரி 14-யை ஒன்றிய அரசின் விலங்குகள் நல வாரியம் பசு மாடு அணைப்பு தினமாக கடை பிடிக்கு மாறு விடுத்த வேண்டுகோளை இப்போது திடீரென்று ரத்து செய்வதாக அறிவித் துள்ளது. இதற்கு மக்களுடைய எதிர்ப்பு தான் காரணம் என்றாலும்கூட இதற்கு முன்பு எப்போதும் பிடிவாதமாக இருக்கிற ஒன்றிய பாஜக ஆட்சி இப்போது திடீரென்று தன்னுடைய குரலை ஏன் மாற்றிக் கொண்டு இருக்கிறது, இதற்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய அரசியல் சூழ்ச்சி அடங்கி இருப்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். பிப்ரவரி 10 ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டிருக்கிறது, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் “இந்துத்துவ முழக்கம்” தங்களை...