காந்தி கொலை: முன் கூட்டியே எச்சரித்தார் பெரியார் காந்தியை இந்துத்துவ தீவிரவாதிகள் படுகொலை செய்த நாள் (30.01.1948).

காந்தியடிகளை (ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி கோட்சே) படுகொலை செய்யப்படக்கூடிய ஆபத்து இருப்பது குறித்து காந்தியிடமே முன்பே எச்சரித்தார் பெரியார்.

பெரியார் எச்சரித்தவாறே காந்தியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கொலை செய்தார்கள்.

பெரியார் காந்தியை நேரில் பார்த்து கூறினார் :

“நான் சொல்லுகிறேன், தாங்கள் மன்னிக்க வேண்டும். இந்து மதத்தை வைத்துக் கொண்டு இன்று தங்களாலேயே நிரந்தரமாக ஒன்றும் செய்துவிட முடியாது. பிராமணர்கள் அவ்வளவு தூரம் விட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் கருத்து அவர்களுக்கு விரோதமாகச் சற்றுப் பலிதமாகிறது என்று கண்டால் உடனே எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவரை ஒரு பெரியாராலும் இந்தத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்பதோடு, அப்படிப்பட்ட ஒருவரையும் பிராமணர்கள் விட்டு வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.”

பெரியார் முழக்கம் 02022023 இதழ்

You may also like...