உலகம் – உயிர் – சாதி தோன்றியது, இப்படித்தான்!
(சென்ற இதழ் தொடர்ச்சி) ஏன், எதற்கு எப்படி? என்று எதையுமே ஆராய்ச்சி செய்து பார் என்று ஏதென்சு நகரத்து இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டிய அறிஞர் சாக்ரடீசு நஞ்சு கொடுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பகுத்தறிவு பேசிய இத்தாலி நாட்டைச் சேர்ந்த புரூனோ என்ற பகுத்தறிவாதி 16.2.1600 இல் ரோமன் சர்ச்சில் வைத்து உயிரோடு எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வரலாற்றையும் நாம் மறந்து விடுவதற்கில்லை! போலியான மதக் கருத்துகளை யாரும் எதிர்க்கத் துணியவில்லை! துணிந்த ஒரு சிலரோ மக்கள் கூட்டத்தின் முன்பாக எரிக்கப்பட்டனர்.! கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர்! தூக்கிலிடப்பட்டனர்! கை கால்கள் துண்டிக்கப்பட்டனர்! இத்தகைய கொடுமையான தண்டனைகளை நேரில் கண்டபின் யாருக்கு போலி மதக் கருத்துகளை எதிர்க்கத் துணிவுண்டாயிருக்கும்? இவ்வாறு அறிவியல் உண்மைகளுக்குப் புறம்பான கருத்துகளை தங்கள் மத நூல்களில் கொண்டுள்ள அனைத்து மதங்களும் மக்களின் அறியாமை அச்சம், மூடநம்பிக்கை போன்றவைகளை அடித்தளமாகக் கொண்டு அழகாகவும், உறுதியாகவும் மனித சமுதாயத்தில் நிலைநிறுத்தப்பட்டன. உலகில்...