86 ஆம் அகவையில் மூத்த பெரியார் தொண்டர் திருவாரூர் தங்கராசு

கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடறிந்த பேச்சாளருமான திருவாரூர் தங்கராசு அவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி 86 ஆவது பிறந்த நாளாகும். பிறந்த நாளில் இராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அவரது இல்லம் சென்று கழகத் தோழர்கள் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி, வழக்கறிஞர் இளங்கோ, வழக்கறிஞர் குமாரதேவன், சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் உமாபதி, அன்பு தனசேகர், சுகுமார், இராவணன், கோவை ராசுக்குமார், ஜான் உள்ளிட்ட தோழர்கள் திருவாரூர் தங்கராசு அவர்களை சந்தித்து  சால்வை அணிவித்து, மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். கழகத் தோழர்களை சந்தித்த மகிழ்வில் பழைய வரலாறுகளை நினைவுகூர்ந்து, திருவாரூர் தங்கராசு நீண்ட நேரம் உரையாடினார்.

பெரியார் கொள்கைக்கே அர்ப்பணித்து, நாடு முழுதும் கொள்கைகளை எடுத்துச் சென்ற திருவாரூர் தங்கராசு அவர்கள் மேலும் பல்லாண்டு வாழ ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.

பெரியார் முழக்கம் 12042012 இதழ்

You may also like...