“குடிஅரசு” வாசகர் வட்டம் தொடக்க விழா

24.3.2012 சென்னை பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கத்தில் குடிஅரசு வாசகர் வட்டம் தொடக்க விழாவும் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது. ‘குடிஅரசு’ வாசகர் வட்டத்தின் தலைவர் வழக்கறிஞர் குமாரதேவன் தலைமையேற்க செயலாளர் க.ராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். கழகத்தின் துணைத்தலைவர் ஆனூர் செகதீசன், பெரம்பூர் கந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்புரையாற்றியவர்களுக்கு ‘குடிஅரசு’ வாசகர் வட்டத்தின் சார்பாக நினைவு பரிசும் பொன்னாடையும் வழங்கப்பட்டன.

‘திராவிடர் இயக்கம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய மறுமலர்ச்சி’ என்ற தலைப்பில் கழகத்தின் மூத்த வழக்கறிஞர் துரைசாமி, ‘திராவிடர் இயக்கத்தின் தேவை இப்பொழுதும்’ எனற தலைப்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினர்.

இறுதியாக ‘குடிஅரசு’ வாசகர் வட்டத்தின் பொருளாளர் வி.ஜனார்த்தனன் நன்றியுரையாற்றினார். திராவிடர் இயக்க உணர்வாளர்களும், நடுநிலை யாளர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 05042012 இதழ்

You may also like...