உச்சநீதிமன்றத்தின் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை நர்மதா அணைக்கு ஒரு தீர்ப்பு, சேது சமுத்திரத்துக்கு வேறு ஒரு தீர்ப்பா?
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் உரையாற்றினார். அவரது உரையி லிருந்து:
இப்படிப்பட்ட சூழலில்தான் நாம் இராமாயணத்தைப் பற்றி பேச வேண்டி வந்துள்ளது. சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் அக்டோபர் 1 அன்று பொது வேலை நிறுத்தம் நடத்துவது என்று தி.மு.க.வும் அதன் தோழமை கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள். இதில் நீதிமன்றங்களின் போக்கைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கோரி தடை ஆணை கேட்டு சுப்ரமணியசாமி வழக்குத் தொடுத்தார். மத்திய அரசிடம் எந்த கருத்தும் கேட்காமல், இராமர் பாலத்திற்கு எந்தவித சேதமும் வராமல் வேலை நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் ஆணை வழங்கியது. (நாம் சாதாரண ஒரு குடிமகன் நினைத்தால்கூட என்னுடைய நிலத்தில் ஒருவன் ஆக்கிரமிப்பு செய்கிறான் என்றோ, அல்லது எனது வீட்டை இடிக்க முயற்சிக்கிறான் என்றோ, உரிமையியல் நீதிமன்றத்தில் அதற்கு தடை ஆணை கேட்டுப் போனால், அந்த இடம் இருக்கின்றது, அது எனக்கு சொந்தமானது, இதில் சொந்தமில்லாத மற்றொருவன் நுழைய முயற்சிக்கின்றான் என்ற மூன்று விசயங்களை நிரூபிக்க வேண்டும்) ஆனால், இராமர் பாலம் வழக்கில் இடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே தவிர, அந்த பாலம் தன்னுடையது என்றோ அல்லது இந்தியாவிற்கு சொந்தமானது என்றோ சொல்லாமல் தடை ஆணை கேட்கின்றான். தலைமை நீதிபதியும் தடை ஆணை கொடுக்கிறார். 2500 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற இருக்கும் ஒரு பெரிய திட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறபோது, ஒரு தனி மனிதனான சுப்ரமணியசாமி, இராமன் என்று ஒருவர் இருந்ததாகவும், அவர் பாலம் கட்டினார் என்றும், நான் நம்புகிறேன், எனது நம்பிக்கை அதற்கு பாதகம் வந்துவிடக் கூடாது என்று தான் வழக்கு தொடுத்தார். அதை நீதிமன்றங்களும் விசாரணைக்கு ஏற்கின்றன.
ஒரு வளர்ச்சித் திட்டத்தை தடுக்கப்படுகிறபோது, அதற்கு அறிவியல் பூர்வமாக கேள்விகளை வைத்தவர், தனிநபரல்ல. அஞ்சகம் – முத்துவேல் மகன் கருணாநிதி அல்ல, தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி அல்ல. தமிழ்நாட்டின் முதலமைச்சர், தமிழ்நாட்டின் ஒரு வளர்ச்சித் திட்டம் தடுக்கப்படுகிறபோது, அறிவியல் பூர்வமான ஆதாரம் இருக்கின்றதா? என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்லாமல், அவரின் தலையை வெட்டு என்று சொல்வதும், அவரின் மகள் வீட்டின் மீது தாக்குதல் நடத்துவதும், அங்கு போகும் பேருந்துகளுக்கு தீ வைத்து அதில் பலபேர் சாவதும், என்று தொடர்ந்தபோது, சிலர் பி.ஜே.பி. அலுவலகத்தில் கற்களை வீசினர். உடனே சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. ஆட்சியை கலைக்க வேண்டும் என்று பி.ஜே.பி.யினர் மனு கொடுத்தனர். இவர்கள் யார்? வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, இரண்டாயிரம் இஸ்லாமியர்களை கேள்வி கேட்பாரின்றி கொலை செய்த குஜராத் அரசை நீக்கவேண்டும் என்று இவர்கள் சொல்ல வில்லை. அது பற்றி கேட்கப்பட்டபோது, தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள், மக்களின் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்தவர்களை நீக்க முடியாது என்ற அடிப்படை அரசியல்கூட தெரியாதவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள் என்று சொன்ன பி.ஜே.பி., இரண்டு கண்ணாடி உடைந்ததற்காக, ஆட்சியைக் கலைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு போட்டது.
சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறை வேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் அக்டோபர் 1 அன்று பொது வேலை நிறுத்தம் நடத்துவது என்று தி.மு.க.வும் அதன் தோழமை கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தார்கள். (நீதிமன்றங்களின் போக்கைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்) தமிழ்நாட்டு அரசையே கலைக்க முடியும். அந்த முதலமைச்சரையும், தலைமை செயலாளரையும் சம்மன் போட்டு நீதி மன்றத்தின்முன் நிறுத்த முடியும் என்று கூறியதோடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருங்கள் என்று யோசனையும் சொன்னார்கள்.
அ.தி.மு.க. சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. அக்டோபர் முதல் தேதி காலையே தமிழகத்தில் வர்த்தக நிறுவனங்கள் திறப்பதற்கு முன்பே நீதிபதி அகர்வால் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண் டார். சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்குலைந்து விட்டது என்றும், ஆட்சியை கலைக்கலாம் என்றும், நீதிமன்றமே குடிரயசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் என்று நீதிபதி மிரட்டினார்.
இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கோரி தடை ஆணை கேட்டு சுப்ரமணியசாமியும் வழக்குத் தொடுத்தார். மத்திய அரசிடம் எந்த கருத்தும் கேட்காமல், இராமர் பாலத்திற்கு எந்தவித சேதமும் வராமல் சேது சமுத்திர திட்ட வேலை நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் தடையாணை வழங்கிவிட்டது. (நாம் சாதாரண ஒரு குடிமகன் நினைத்தால்கூட, என்னுடைய நிலத்தில் ஒருவன் ஆக்கிரமிப்பு செய்கிறான் என்றோ, அல்லது எனது வீட்டை இடிக்க முயற்சிக்கிறான் என்றோ, உரிமையியல் நீதிமன்றத்தில் அதற்கு தடை ஆணை கேட்டுப் போனால், அப்படி ஒரு இடம் இருக்கின்றது, அது எனக்குச் சொந்தமானது, இதில் சொந்தமில்லாத மற்றொருவன் நுழைய முயற்சிக் கின்றான் என்ற மூன்று விசயங்களை நிரூபிக்க வேண்டும்.) ஆனால், இராமர் பாலம் வழக்கில் இடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே தவிர, அந்த பாலம் தன்னுடையது என்றோ, அல்லது இந்தியாவிற்கு சொந்தமானது என்றோ சொல்லாமல் தடை ஆணை கேட்கின்றார். தலைமை நீதிபதியும் தடை ஆணை கொடுக்கிறார். 2500 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற இருக்கும் ஒரு பெரிய திட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறபோது, ஒரு தனி மனிதன், இராமன் என்று ஒருவர் இருந்ததாகவும், அவர் பாலம் கட்டினார் என்றும், நான் நம்புகிறேன், எனது நம்பிக்கை அதற்கு பாதகம் வந்துவிடக் கூடாது என்று வழக்கு தொடுத்தார் என்றவுடன் தடையாணை கொடுக்கிறார்கள்.
நர்மதா அணைத் திட்டம்
இதே போன்ற திட்டம் ஒன்றில் சில ஆண்டு களுக்கு முன்னால் ஒரு சிக்கல் வந்தது. நர்மதாவில் அணை கட்டுகிறார்கள். நர்மதா அணை கட்டப்படும்போது, மேதாபட்கர் போன்றவர்கள் அப்போது போராடினார்கள். காரணம் அந்த பகுதியில் வாழும் அரிய வகை உயிரினங்கள் அழிந்துவிடும் என்பது ஒன்று. மற்றொன்று இலட்சக்கணக்கான மக்கள் குடிபெயர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆண்டாண்டு காலமாக அங்கு வாழ்ந்து வந்த அந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகிறது. எனவே வேறு இடத்தில் நிலம் ஒதுக்கி அரசே அவர்களுக்கு குடியிருப்புகள் அமைத்து அதன் பின்னர் தான் அணை வேலையைத் தொடர வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
பல்லாயிரக்கணக்கான மக்களின் பிரச்சினையை விட அரசின் வளர்ச்சித் திட்டத்தை தொடருவது தான் சரி என்று கூறிய அதே உச்சநீதிமன்றம், கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த கோரிக்கையான அரசின் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திர திட்டத்தைவிட ஒரு தனி மனிதனின் நம்பிக்கையே பெரிதென மதித்து தடையை விதித்தது. சுப்பிரமணிய சாமி என்ற பார்ப்பானின் உணர்வை அவ்வளவு மதிக்கிறது நமது உச்சநீதிமன்றம்!
வடநாட்டு ஆய்வாளர்கள் எல்லாம் சொல்வது, இந்தி பேசும் மக்கள் இருக்கும் பகுதியில்தான் இராமர் கடவுள். (வங்காளத்துக்கு துர்க்கா தான் பெரிய கடவுள். ஒரிசாவிற்கு – ஜகநாதர்) மற்றப் பல பகுதிகளில் இராமனை வணங்குகின்றார்கள். ஆனால், அவர்களுக்கு அதைவிட முதன்மையான கடவுள்கள் உண்டு. ஆனால், தமிழ்நாட்டைப் பொருத்தவரை இராமனுக்கு கோவில்கள் என்பதே அரிதாக உள்ளது. “தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இராமன் என்ற கதாபாத்திரம், மதிக்கத்தக்க கதா பாத்திரமாக இல்லை. இராமர் என்பவர் மறைந் திருந்து வாலியைக் கொன்ற கோழை; காரண மில்லாமல் மனைவியை காட்டுக்கு துரத்திய ஆணாதிக்கக்காரன்; கடவுளை வணங்கியதற்காக சம்பூகனை கொன்ற பார்ப்பன ஆதரவாளன். இப்படிப்பட்ட எதிர்ப்புணர்வுகள் தான் தமிழ்நாட் டில் உள்ளதே தவிர ஆதரவான உணர்வலைகள் இல்லை” என்று வடநாட்டு ஆய்வறிஞர்கள் எழுது கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் பெரி யாரியல் இயக்கம் அங்கு உண்டாக்கி வைத்திருக் கின்ற ஒரு நிலை என்பது, இராமரைப் பற்றி யாரும் புகழ்ந்து பேசுவதற்கு தயங்குகிற அளவிற்கு இருக் கின்றது என்று செய்தி வெளியிட்ட ‘அவுட்லுக்’ பத்திரிகை, “நாங்கள் பல பார்ப்பனர் களை பேட்டி கண்டோம். இராமனை ஒரு பக்கம் வணங்குவதும், ஒரு பக்கம் இராமனை செருப்பால் அடிப்பதும் இயல்பாக நடந்து கொண்டிருக்கின்றது என்று அவர்கள் சொன்னார்கள்” என்று எழுதுகிறது.
(தொடரும்)
பெரியார் முழக்கம் 12042012 இதழ்