சைதையில் கழகக் கூட்டம்

19.3.2012 திங்கள் மாலை 6 மணிக்கு மேற்கு ஜோன்ஸ் சாலை, மேற்கு சைதாப்பேட்டையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி விளக்க  கூட்டம் நடை பெற்றது. சா. இராசு தலைமை வகித்தார். அ. தியாகு வரவேற் புரையாற்ற, ப. மனோகர் முன்னிலை வகித்தார். உடுமலை தமிழ்ச் செல்வன், கு. அன்பு தனசேகர் சிறப்புரை யாற்றினர். நிகழ்வின் தொடக்கத்தில் சம்பூகன் இசைக்குழுவினர் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. தோழர் நாத்திகன், ஜெயந்தி அம்பிகா பாடல்கள் பாடினார். கழகத் தோழர் அருண், தபேலா வாசித்தார்.

பெரியார் முழக்கம் 05042012 இதழ்

You may also like...