கல்பாக்கம் அணுமின் நிலைய கதை என்ன?

கல்பாக்கம் அணுமின் நிலையம் – அதன் இலக்கு உற்பத்தி திறனில் 30 சதவீதத்தைத் தாண்டியதே இல்லை

1969 இல் கட்டுமானத்தைத் துவங்கிய மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன் என்ற கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அணு உலைகளின் முதல் யூனிட் தன் மின் உற்பத்தியை ஜூலை 1983 இல் துவங்கியது. இது 235 மெகாவாட் திறனுள்ள அணு உலையாகும். இரண்டாவது யூனிட் 23.1.1986 இல் தன் உற்பத்தியைச் துவங்கியது.

1983-84-லிருந்து 2007-08 ஆம் ஆண்டு வரையிலான 25 ஆண்டுகளில் இந்த அணுமின் நிலையமானது –

50 சதவீதம் மேலாக இரண்டு ஆண்டுகளிலும் (1987-88 = 53.42ரூ, 2006-07 = 58.26ரூ)

40 ரூ – 50ரூ உற்பத்தியை நான்கு ஆண்டுகளிலும் (1984-85 = 45.04ரூ, 1985-86 = 48.46ரூ, 1986-86 = 41.71ரூ, 2005-06 = 40.58ரூ)

30ரூ – 40ரூ – உற்பத்தியை நான்கு ஆண்டுகளிலும் (1988-89 = 30.46ரூ, 2003-04 = 33.39ரூ, 2004-05 = 321.59ரூ, 2007-08 = 36.82ரூ)

20ரூ – 30ரூ உற்பத்தியை ஏழு ஆண்டுகளிலும் (1990-91 = 25.89ரூ, 1991-92 = 21.03ரூ, 1994-95 = 22.77ரூ, 1998-99 = 21.07ரூ, 1999-2000 = 20.62ரூ, 2000-2001 = 24.57ரூ, 2001-2002 = 20.79ரூ)

10ரூ – 20ரூ உற்பத்தியை எட்டு ஆண்டுகளிலும் (1983-84 = 17.95ரூ, 1989-90 = 12.91ரூ, 1992-93 = 17.92ரூ, 1993-94 = 12.63ரூ, 1995-96 = 11.59ரூ, 1996-97 = 16.47ரூ, 1997-98 = 16.67ரூ, 2002-03 = 13.91ரூ) செய்தது.

ஆக, இந்த அணுமின் நிலையம் செயல்பட்ட 25 ஆண்டுகளில் 15 ஆண்டுகளில் 30ரூ க் குக் கீழாகவே மின் உற்பத்தியை செய்தது.1 ஆக, மின்சார நெருக்கடியான காலகட்டத்தில்கூட அணுமின் நிலையத்தால் எவ்வித உதவியையும் செய்ய முடியவில்லை.

ளுடிரசஉந: 1. ஊயடஉரடயவநன கசடிஅ – கூசூநுக்ஷ ளுயவளைவiஉள யவ ய ழுடயnஉந, 1996-1997 (யீ-25); 2007-2008

(யீ-18)

பெரியார் முழக்கம் 12042012 இதழ்

You may also like...