அஞ்சலகத்தில் “தீண்டாமை”யை கண்டித்து கழகம் போராட்டம்
கோவை மாவட்டம் அன்னூர் வடவள்ளி ஊராட்சியில் அஞ்சலகத்தில் அங்குள்ள தலித் மக்களை அனுமதிக்காததை கண்டித்தும் அதே ஊராட்சிக்கு உட்பட்ட தாத்தம்பலயத்தில் செயல்படும் அங்கன்வாடியில் தலித் குழந்தைகளை அனுமதிக்காததை கண்டித்தும் சின்னவடவல்லியில் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் 16.4.2012 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் து.ராமசாமி, கலங்கல் வேலுசாமி, சூலூர் குமாரவேல், கோவை வே.கோபால், இர. இரஞ்சித் பிரபு, சா.கதிவரன், அன்னூர் பொறுப்பாளர்கள் ஜோதி ராம், ஈஸ்வரன், இராமன், கணேசன், வீரமுத்து மற்றும் நூற்றுக்கணக்கான தோழர்கள், பெண்கள் பங்கேற்றனர்.
கழகம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தவுடன் ஊராட்சி தலைவர் கணேசன் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து அங்கன்வாடி செயல்படும் கட்டிடம் தனியாருக்கு சொந்தம் என்பதால் பொது கட்டிடம் தேவை என்று முறையிட்டதை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் தனது சிறப்பு நிதியிலிருந்து ரூ.6.5 லட்சம் ஒதுக்கி யுள்ளார்.
பெரியார் முழக்கம் 26042012 இதழ்