ஆனூராருக்குப் ‘பெரியார் ஒளி’ விருது

நெய்வேலியில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தொல். திருமாவளவன் வழங்கினார்

2007 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி யினர் சமூகத் தொண்டாற்றி வரும் தலித் அல்லாதவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டி வருகின்றனர். 2012 ஆம் ஆண் டிற்கான ‘பெரியார் ஒளி’ விருது கழகத் தின் துணைத் தலைவர் ஆனூர் செகதீச னுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அதேபோல் ‘அம்பேத்கர் சுடர்’ விருது முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தோழர் என். வரதராஜனுக் கும், ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது ஆய்வறிஞர் கந்தசாமிக்கும் ‘காமராசர் கதிர்’ விருது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமாருக்கும், ‘காயிதே மில்லத் பிறை’ விருது பேராசிரியர் அப்துல் காதருக்கும், ‘மொழி ஞாயிறு’ விருது பேராசிரியர் க.பா.அறவாணனுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் அன்று மாலை 7 மணிக்கு நெய்வேலியில் நடந்த எழுச்சியான விழாவில் வழங்கப்பட்டது. விழாவில் ஆனூராரின் சிறப்புகளை ஒரு பாராட்டுப் பத்திரமாக பதிவு செய்து இரண்டடி நீளமுள்ள பாராட்டுப் பத்திரமாகவும், இரண்டு கைவிரல்கள் மேலும் கீழுமாக இணைந்த அளவில் இரண்டடி உயருமுள்ள ஒரு நினைவுப் பரிசும், பெரியார் ஒளி என்று எழுதப்பட்ட பட்டுத் துணியினாலான பதாகையும் அணிவிக்கப்பட்டு, ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையும் பலத்த கரவொலிக்கிடையே வழங்கப்பட்டது.

தனது ஏற்புரையில் ஆனூரார், “அம்பேத்கர் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு இந்து மதத்தைப் புறக்கணிப்பதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் அரிய தொண்டாகும்” என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சி இரவு 10.45 மணிக்கு முடிவுற்றது. சென்னையிலிருந்து கழகத் தோழர்கள் வேனிலும், மகிழுந்திலும் சென்று கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து, ஆனூராரையும் வாழ்த்தினர்.

பெரியார் முழக்கம் 19042012 இதழ்

You may also like...