லஞ்சம் வாங்குவதற்கு சித்திரவதை செய்யும் இராணுவம்-3

இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு, போர் முடிந்த பிறகு இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை, கடந்த 13 ஆம் தேதி அய்.நா.வின் அறிக்கையாக சமர்ப்பித்தது. இலங்கை அரசுக்கு உலக அரங்கில் மேலும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ள அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் இவை:

  • பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கீழோ, சந்தேகத்தில் பேரிலோ கைது செய்யப்படுகிறவர் களுக்கு எந்த முறையான சட்ட நடைமுறைகளை யும் இலங்கை அரசு பின்பற்றுவது கிடையாது. ‘ஆம்னஸ்ட்டி இன்டர் நேஷனல்’ இப்படி ஏராளமான வழக்குகளை கண்டறிந்துள்ளது.
  • பிரிட்டனில் செயல்படும் ஒரு மனித உரிமை அமைப்பு (குசநநனடிஅ கசடிஅ வடிசவரசந) இலங்கையில் செயல்படும் தமது பிரதிநிதிகளிடமிருந்து பெற்ற புகார்களை அறிக்கையாக 2011 டிசம்பரில் வெளி யிட்டுள்ளது. இதன்படி 32 மனித உரிமை களப் பணியாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, ராணுவ தடுப்பு முகாம்களிலும் காவல் நிலையங் களிலும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட் டுள்ளனர் என்று கூறியுள்ளது. இவர்கள் குடும்பத் தினருக்கும் தெரிவிக்கப்படவில்லை. நீதி மன்றத்தை அணுகும் வழிமுறைகளும் முற்றாக தடுக்கப்பட்டுவிட்டன.
  • இலங்கை மனித உரிமைகளுக்கான ஆணையம், பூசா தடுப்புக் காவல் முகாமில் நேரில் சென்று ஆய்வு நடத்தியதில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு எதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளோம் என்பதே தெரியவில்லை  என்று 2008 ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத் தில் கொழும்பு நகரில் தடுத்து சிறை வைக்கப் பட்ட ரவீந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற அய்ரோப்பிய குடிஉரிமை பெற்ற ஈழத் தமிழர் பூசா சிறையிலுள்ள ரகசிய புலனாய்வு துறை சித்திரவதை முகாமில் 2007 செப்டம்பர்

5 ஆம் தேதியிலிருந்து சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிறகு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட வேண்டிய காலக்கெடு முடிந்த பிறகும், சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார் பஸ்) மீதான விசார ணையே 18 மாதங் களாக 16 விசாரணை களாக நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளுடன் தமக்கு தொடர்பு உண்டு என்று ராணுவம் ஒப்புக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவதை அவர் மறுப்பதே இதற்குக் காரணம். அவர் தனிமையாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அய்.நா.வின் சட்டவிரோத காவல் கண்காணிப்புக் குழு தனது அறிக்கையில் இதை சுட்டிக்காட்டி கண்டித்துள்ளது.

  • இலங்கை அரசே நியமித்த கற்ற பாடம் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையமும் தனது அறிக்கையில் எந்தக் குற்றமும் சாட்டப்படாமலே ஏராளமானவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ளார்கள் என்பதை ஒப்புக் கொண் டுள்ளது.
  • கொழும்பு நகரத்திலும் அதன் சுற்றுப் பகுதியி லும் அமைச்சரவையே நியமித்த ஒரு சிறப்பு புலனாய்வுக்குழு ரகசிய இடங்களில் பலரை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தில் பிடித்துச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்து வருகிறார்கள். நேரில் பார்த்தவர்களிடமிருந்து தகவல்கள் ஆம்னஸ்டி இன்டடர்நேஷனுக்கு கிடைத் துள்ளன.
  • விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கப்பல் படை புலனாய்வுத் துறை பிடித்து சித்திரவதை செய்து தனது உளவாளியாக மாற்றியுள்ளது. அவர் மூலம் பலரைப் பிடித்து வந்து சித்திரவதை செய்து சாகடிக்கிறார்கள். இதில் 15, வயதுக்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவர்.
  • இப்படி அடைத்து வைக்கப்பட்ட ஒருவரிட மிருந்து வெளியே ரகசியமாக குடும்பத்தாருக்கு 2010 பிப்.1 இல் அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல் ஆம்னஸ்ட்டி இன்டர்நேஷனுக்கு கிடைத் துள்ளது. தன்னைத் தேடும் முயற்சிகளில் இறங்க வேண்டாம் என்று அந்த கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது.
  • வவுனியாவிலுள்ள 211 ராணுவ அலுவலகங்கள் மற்றும் ‘புளோட்’ என்ற அமைப்பின் அலுவலகங்களில் சட்ட விரோதமாக கடத்தப்பட்டவர்கள் கொண்டு வரப்பட்டு, சித்திரவதை செய்யப்படுவது குறித்து ரகசிய தகவல்கள் ஆம்னஸ்டி இன்டர்நேஷனுக்கு கிடைத்துள்ளது.
  • கல்முனையைச் சேர்ந்த 45 வயதுள்ள கணவனை இழந்த பெண், இலங்கை அரசு நியமித்த ஆணையத்தின் முன் மட்டக்களப்பு காவல் நிலையத்தில் தன்னை சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை செய்ததை வாக்கு மூலமாக தந்துள்ளார். தன்னுடன் இருந்தவர்களில் 5 பேர் மரணமடைந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
  • ஆர்.டி. விக்கிரமசிங்கே என்ற முன்னாள் ராணுவத்திலிருந்த ஆசிரியர், கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். தமிழில் எழுதப்பட்ட 5 கடிதங்களை அவரிடம் காட்டி, அதை சிங்களத்தில் மொழி பெயர்க்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். 5 போலீசார் பற்றிய குற்றச்சாட்டுகள் அதில் இருந்தன. அதை மிகைப்படுத்தி, சிங்கள போலீசாரை மிரட்டவே இந்த ஏற்பாடு.
  • இப்படி சித்திரவதைக்குட்பட்டு தடுத்து வைக்கப் பட்டவர்கள் குடும்பத்திடமிருந்து பெரும் தொகையை லஞ்சமாக வாங்கிக் கொண்டு, விடுவிப்பதாக ‘சித்திரவதையிலிருந்து விடுதலை’ என்ற மனித உரிமை அமைப்பு தனது அறிக்கை யில் குறிப்பிட்டுளள்து. 2011 டிசம்பரில் வெளி யிட்ட அறிக்கையில் இதுபோன்ற 35 லஞ்சம் பெற்ற சம்பவங்களை பட்டியலிட்டுள்ளது

பெரியார் முழக்கம் 12042012 இதழ்

You may also like...