சேலம் கிழக்கு கழகம் சாதனை; கழக ஏட்டுக்கு 580 சந்தாக்கள்
2.4.2012 திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு சேலம் தாதகாப்பட்டி பெரியார் உடற்பயிற்சி மையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட பெரியார் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்க, மாவட்ட தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா ஆயிரம் சேர்ப்பது என முடிவு செய்து முதல் தவணையாக 580 சந்தாக்கள் தலைமைக்கு அனுப்பப்பட்டது. மீதி சந்தாக்களை விரைவில் வசூலித்து ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.
மே மாதம் 26 ஆம் தேதி, ஓமலூரில் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துடன் நாத்திகர் விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஏற்காடு கோடை விழாவின்போது, அரசு கண்காட்சி சாலையில் ஒரு அறை வாடகைக்கு எடுத்து, புகைப்பட கண்காட்சி மற்றும் புத்தக விற்பனை செய்வது என்றும், ஜூன் மாதம் ஏற்காடு பகுதியில் படிப்பகம் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மே 6 ஆம் தேதி ஆத்தூரிலும், ஜூன் மாதம் அம்மாபேட்டையிலும் பொதுக் கூட்டம் நடத்துவது என்றும், சேலம் நகரம் மற்றும் இளம்பிள்ளை பகுதிகளில் தொடர் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர்கள் இளம்பிள்ளை முத்துமாணிக்கம், நங்கவள்ளி அன்பு, மாவட்ட செயலாளர் டேவிட், மாவட்ட துணைத் தலைவர் ஏற்காடு பெருமாள், துணைச் செய லாளர் ஆத்தூர் மகேந்திரன், பொருளாளர் சேலம் வீரமணி, மாநகர செயலாளர் மூனாங் கரடு சரவணன், மாவட்ட இளைஞரணித் தலைவர் கு.சவுந்திரராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளக்கக் கூட்டம்
2.4.2012 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு சேலம் சீலநாய்க்கன்பட்டி சிவசக்தி நகரில், சேலம் மாநகர பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சாமியார் களின் மோசடிகளை விளக்கும் மந்திரமல்ல தந்திரமே என்ற கலை நிகழ்ச்சியுடன் துவங்கிய இப்பொதுக் கூட்டத்திற்கு, சிவசக்தி நகர் பகுதி கழகத் தோழர் வெ.ப.அம்பிகாபதி தலைமை யேற்க, சோ.பிரபு வரவேற்புரையாற்றினார். தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி பிந்து சாரன் உரையை தொடர்ந்து, தலைமை கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி தமிழர் களிடையே இருக்கும் மூட நம்பிக்கைகளை நகைச்சுவையோடு விளக்கிப் பேசினார். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஈழத் தமிழர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை ஆகியவைகளில் மத்திய அரசின் தமிழின விரோத போக்கை விளக்கி சிறப்புரையாற்றினார். சி.பால்பாண்டி நன்றி கூறினார்.
மல்ல சமுத்திரத்தில்
நாமக்கல் மாவட்டம் மல்ல சமுத்திரம் ஒன்றியம் சார்பாக புதிய தோழர்கள் பங்கேற்ற முதல் கலந்துரையாடல் 26.3.2012 அன்று காலை 11 மணிக்கு, மல்ல சமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டியில் நடை பெற்றது. மல்ல சமுத்திரம் கண்ணன், இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டை செய்தார். புதிதாக வந்திருக்கும் பல தோழர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டனர். இளம்பிள்ளை கோகுல கண்ணன் மற்றும் நங்க வள்ளி கிருஷ்ணன் ஆகியோர் பெரியார் கொள்கைகள் பற்றியும், கழகத்தின் செயல்பாடுகள் பற்றியும் தோழர்களிடம் விளக்கம் அளித்தனர். மே மாதத்தில் கழகத் தலைவரை அழைத்து, பொதுக் கூட்டத்துடன் ஒன்றிய கழகம் துவக்குவது என்றும், விரைவில் பயிற்சி வகுப்பு ஒன்று நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கலந்து கொண்டவர்கள்: மல்லசமுத்திரம் கண்ணன், மின்னக்கல் அன்பழகன், ஆட்டை யாம்பட்டி சங்கர், காளிப்பட்டி பெரியண் ணன், கோபி, குட்டிராஜ், மோகன், சென்னி மலை முருகன், கோவிந்தராஜ், சேகர், டைலர் அருணாச்சலம், ரமேஷ், ராஜ் ஆகியோர்.
பெரியார் முழக்கம் 19042012 இதழ்