சேலம் மாணவர்களுக்கு கழகத்தினர் வழங்கிய இலவச குறுந்தகடுகள்

சிங்கள ராணுவம் ஈழத்தில் நடத்திய இனப்படுகொலைகளை சித்தரிக்கும் குறுந்தகடுகள், தாதகாப்பட்டி பெரியார் நூலகம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு, பொது மக்களுக்கு, சமூக ஆர்வலர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. 1350 குறுந்தகடுகள் வழங்கப்பட்டன.

16.3.2012 வெள்ளியன்று சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்களிடம் பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை 650 குறுந்தகடுகளும்,

17.3.2012 சனி அன்று சேலம் சட்டக் கல்லூரி சேலம் கெண்டலாம்பட்டி சௌடேஸ்வரி கல்லூரி மாணவர்களிடமும் மற்றும் பொது மக்கள், சமூக ஆர்வலர்களிடமும் சேலம் பழைய சூரமங்கலம் நீலாம்பாள் மேல்நிலைப் பள்ளியிலும் குறுந்தகடுகள் வழங்கப்பட்டன.

கழகத் தோழர்கள் வெ.ப.அம்பிகாபதி (சிவசக்தி நகர்), செந்தில்குமார் (கொண்டலாம்பட்டி), செந்தில் (அன்னதானப்பட்டி), ல.லோகநாதன் (இந்திய பொதுவுடைமை கட்சி), மணிகண்டன் (இந்திய பொதுவுடைமை கட்சி) ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

பெரியார் முழக்கம் 05042012 இதழ்

You may also like...