‘அச்சம்’ போக்க வேண்டும் என்ற ஜெயலலிதா ‘அச்சுறுத்தி’ திணிக்கிறார்

மக்களின் அச்சத்தைப் போக்கிய பிறகே கூடங்குளம் அணுமின் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றார், முதல்வர் ஜெயலலிதா. அச்சத்தைப் போக்கும் வரை, திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால், தமிழக முதல்வர் நியமித்த விஞ்ஞானிகள் குழு, கூடங்குளம் இடிந்தகரை பகுதி மக்களை சந்திக்கவே மறுத்தது. மக்களின் அச்சம் அப்படியே நீடிக்கிறது. இப்போது முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களை அச்சுறுத்தி, 5000 போலீசையும், துணை ராணுவப் படைகளையும் குவித்து, போராட்டக் குழு தலைவர்கள் மீது தேச விரோதம் உள்ளிட்ட கொடூரமான சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து, கைது செய்து சிறையிலடைத்து, கூடங்குளம் அணு உலையைத் திறக்கப் போகிறது.

ஈழத்தில் தமிழர்களை ஒழிக்கத் திட்டமிட்ட இலங்கை ராணுவம், அவர்களை முல்லைத் தீவு நோக்கி நெருக்கித் தள்ளியதுபோல், இடிந்தகரை மக்களும் இப்போது துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று நாடகமாடிய ஜெயலலிதா –

இப்போது மக்களை அச்சுறுத்தி கூடங்குளம் அணுமின் திட்டத்தைத் திணிக்கிறார்.

உலகம் முழுதும் நடக்கும் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தில் புதிய அத்தியாயங்களை  இடிந்தகரை மக்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த மக்களின் போராட்டம் வெல்வது உறுதி! உறுதி!

பெரியார் முழக்கம் 22032012 இதழ்

You may also like...