அணி திரட்ட முடியுமா?

பொருளாதாரப் புரட்சி ஒன்றை ஏற்படுத்த, பாட்டாளிகளைத் தட்டி எழுப்ப அவர்களிடம் மார்க்ஸ் கூறினார்: “அடிமை விலங்குகளைத் தவிர இழப்பதற்கு வேறு எதுவும் உங்களிடம் இல்லை” என்று.

ஆனால், சமுதாய மற்றும் மதவியல் உரிமைகளை சில சாதிகளுக்கு அதிகமாகவும், சில சாதிகளுக்கு குறைவாகவும் பல்வேறு சாதிகளுக்கு இடையே மிக வஞ்சகமாகவும் பகிர்ந்து அளிக்கப் பட்டுள்ள நிலையில், சாதியமைப்புக்கு எதிராக இந்துக்களைத் தட்டி எழுப்ப, காரல்மார்க்சின் முழக்கம் சிறிதும் பயன் அளிக்காது. சாதிகள் உயர்ந்தவை தாழ்ந்தவை என்ற வரிசைப்படி தரம் பிரிக்கப்பட்டுள்ளன. தங்கள் அந்தஸ்தை சாதிகள் மிகவும் அக்கறையோடு காப்பாற்றி வர எண்ணு கின்றன. சாதிய அமைப்பு ஒழிக்கப்பட்டால், சில சாதிகள் மற்ற சாதிகளைவிட அதிகமாக தங்கள் தனியுரிமைகளையும், அதிகாரங்களையும் இழக்க வேண்டியிருக்கும் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.

எனவே, சாதி அமைப்பு என்னும் கோட்டையைத் தகர்க்க, இந்துக்களை பொதுவான ஓர் அணியாக ஒன்று திரட்ட உங்களால் முடியாது.

புரட்சியாளர் அம்பேத்கர்

பெரியார் முழக்கம் 12042012 இதழ்

You may also like...