தமிழ்ச் செல்வன் – தனவதி வாழ்க்கை ஒப்பந்தம்

கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வடலூர் வே. கலியமுர்த்தி-இராதா ஆகியோரது மகன் க. தமிழ்ச்செல்வன், எம்.எஸ்.சி., பிஎச்.டி. – செ. தனவதி, பி.எஸ்சி., பி.ஜி.டி.சி.ஏ. ஆகியோரது வாழ்க்கைத் துணை ஏற்பு விழா, 29.1.2012 காலை 7 மணிக்கு வடலூர் இராதா திருமண மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன், மத்திய அமைச்சர் வி.நாரா யணசாமி, புதுவை மாநில கழகத் தலைவர் லோகு அய்யப்பன் உள்பட பலரும் வாழ்த்தினர். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏடு வளர்ச்சிக்கு ரூ.2000 கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 05042012 இதழ்

You may also like...