பெரியாரின் தொண்டு: தலைமை நீதிபதி பெருமிதம்
கடந்த காலங்களில் சாதி ரீதியான பாகுபாட்டை மிக அதிகமாக கண்டிருக்கிறோம். அவையெல்லாம் இந்திய வரலாற்றின் கருப்பு நாட்கள். தமிழகத்தில் பெரியாரின் அயராத உழைப்பின் காரணமாகத்தான் இன்று ஒரு சில குக்கிராமங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சாதி பாகுபாடு துடைத்தெறியப்பட்டது. பெரியாரின் குரலை அடுத்துதான், இடஒதுக்கீட்டு கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் இன்று பல்வேறு துறைகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் போன்ற சாதியினருக்குவேலை கிடைப்பதற்கான வழியை அமைத்துக் கொடுத்தவர் அந்த பெரியார்தான்.
– உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த அம்பேத்கர் விழாவில் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் உரையிலிருந்து. (நன்றி: ‘தினத்தந்தி’ 17.4.2012)
பெரியார் முழக்கம் 19042012 இதழ்