Category: திவிக

ஊழல் மின்சாரம் ஆவணப்பட வெளியீடு சென்னை 02042016

”ஊழல் மின்சாரம்” – ஆவணப்படம் வெளியீடு. நாள் : 02.04.2016 மாலை 5 மணி. இடம் : இக்சா அரங்கம் (கன்னிமாரா நூலகம் எதிரில்), எழும்பூர் சென்னை. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். தலைமை : சா.காந்தி, தமிழ்நாடு மிந்துறை பொறியாளர்கள் அமைப்பு. ஆவணப்படத்தை வெளியிடுபவர் : தோழர்.ஆர் நல்லக்கண்ணு, (இந்திய பொதுவுடமைக் கட்சி) மேலும் தோழமை அமைப்புகளைச்சார்ந்த தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

ஜாதி மறுப்பு திருமண இணையருக்கு பாதுகாப்பு வழங்கிய கழக தோழர்கள் !

ஜாதி மறுப்பு திருமண இணையருக்கு பாதுகாப்பு வழங்கிய கழக தோழர்கள் ! திருப்பூரைச் சேர்ந்த ”சக்திகாமாட்சி – ஆனந்த் இணையர்” தங்கள் காதலுக்கு ஜாதியை காரணம் காட்டி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் சாமிநாதன் அவர்களிடம் பாதுகாப்பு கோரிவந்தனர்.ஆனந்த் ”இந்துமுண்ணனி”யின் தீவிர உறுப்பினர் என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. கழக தோழர்கள் அவர்களுக்கு பாதுகாப்பளித்து சட்டப்படி 25.03.2016 அன்று திருமணம் செய்து வைத்தனர். இவர்களின் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு பெண் வீட்டார் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இணையருக்கு மிரட்டல் விடுத்தும் இவர்களை பிரிக்காமல் விடமாட்டோம் எனவும் 70க்கும் மேற்பட்டோர் இவர்களை பல்வேறு ஊர்களில் தேடி அலைந்தனர். இந்நிலையில் சக்தி காமாட்சியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் தங்கள் பெண்ணை கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்ததை அடுத்து இணையர்கள் காவல்நிலையத்திற்கு நேரில் ஆஜராகி தன் தரப்பை விளக்க...

தேன்கனிக்கோட்டை பொதுக்கூட்டம் ! 27032016

தேன்கனிக்கோட்டை பொதுக்கூட்டம் ! 27-03-2016 ஞாயிறு மாலை 4-00 மணி அளவில், கிருட்டிணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகில், ‘திராவிடர் விடுதலைக் கழக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது. காவல்துறை கலை நிகழ்சிக்கு தடைவிதித்து, இரவு 7-00 மணிக்குள் கூட்டத்தை நிறைவு செய்யவேண்டும் என்ற நிபந்தனையோடு இக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கியிருந்தது. இப்பொதுக் கூட்டம்,மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவினரின் மூடநம்பிக்கை – ஜாதி ஒழிப்பு பாடல்களோடு துவங்கியது. மாவட்ட பொருளாளர் மைனர் (எ) வெங்கிடகிரியப்பா கூட்டத்திற்கு தலைமை ஏற்றார். தோழர் பழனி வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் தி.க.குமார் முன்னிலை வகித்தார். கழக புதுவை மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட துணைச் செயலாளர் வாஞ்சிநாதன் நன்றியுரை ஆற்றினார்.

” ஜாதிய வறட்டு வன்மமே ஆணவ படுகொலைகளுக்கு அடிப்படை காரணம் ” – பேராவூரணி ஆர்ப்பாட்டத்தில் தோழர் எவிடென்ஸ் கதிர்

” ஜாதிய வறட்டு வன்மமே ஆணவ படுகொலைகளுக்கு அடிப்படை காரணம் ” பேராவூரணியில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக்கழக ஆர்பாட்டத்தில் தோழர் எவிடென்ஸ் கதிர் பேச்சு பேராவூரணி  ஜாதி மறுப்பு திருமணம்செய்த சங்கர் உடுமலைப்பேட்டையில் ஜாதிய வெறியர்களால் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் பேராவூரணி அண்ணா சிலை அருகில் திராவிடர் விடுதலைக் கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் மார்ச் 25ம் தேதி மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் எவிடென்ஸ் கதிர் பங்கேற்று கன்டன உரையாற்றினார், அவர் தனது உரையில், ”ஜாதி மறுப்பு திருமணம் செய்த தோழர் சங்கர் தனக்கும் தன் மனைவியாகிய கௌசல்யாவிற்கும் கௌசல்யா உறவினர்களால் பலமுறை கொலை மிரட்டல் விடப்பட்டபோது இதுகுறித்து மடத்துக்குளம், குமரலிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, புகார் மனு அளித்திருந்தார். ஆனால் புகாரை பெற்றுககொண்ட மேற்கண்ட...

ஜாதி வெறியர்களுக்கு எதிராக கழகம் புகார் மனு சென்னை 23032016

வாட்ஸ் அப் வழியாக சட்டவிரோதமாக ஜாதி வெறியைத் தூண்டி, கலவரத்தை உண்டாக்கும் நோக்கோடு ‘தலித் மக்களை தனிமை படுத்த வேண்டும் , அவர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க கூடாது , வேலை கொடுக்க கூடாது , சோற்றுக்கு வழியில்லாமல் மாற்றி நடு தெருவில் நிறுத்த வேண்டும்’ என்று பேசியுள்ள M.R.செங்குட்டுவன் வாண்டையார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன்,தலைமைச் செயலவை உறுப்பினர் தோழர் அய்யனார்,மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி,மாவட்ட தலைவர் தோழர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் தோழர் பிரகாசு,தோழர் செந்தில் FDL,தோழர் செந்தில் உள்ளிட்ட தோழர்கள் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று 23.03.2016 மாலை 03.30 மணியளவில் புகார் மனு அளித்துள்ளனர்.

உடுமலை சங்கர் படுகொலையை கண்டித்து பேராவூரணியில் கண்டன ஆர்ப்பாட்டம் 25032016

இன்று (25.03.2016) மாலை 5 மணிக்கு பேராவூரணியில் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஜாதி மறுப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் ஜாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தோழர் எவிடன்ஸ் கதிர்,தோழர் ஆறு.நீல கண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்கள்.

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் தேன்கனிகோட்டை 27032016

பொதுக்கூட்டம் ! கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம். நாள் : 27.03.2016. மாலை 4.00 மணி. இடம் : தேன்கனிக்கோட்டை,பேருந்து நிலையம். சிறப்புரை : ”தோழர் கொளத்தூர் மணி,” தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் லோகு.அய்யப்பன், தலைவர்,பாண்டிச்சேரி திராவிடர் விடுதலைக் கழகம். பொதுக்கூட்டம் முன்னதாக ‘புத்தர் கலைகுழு’வினரின் கலைநிகழ்ச்சி நடைபெறும் !  

சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுக – பொதுக்கூட்டம் சென்னை 22032016

“சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுக” என இன்று 22.3.16 மாலை 5 மணிக்கு அம்பேத்கர் திடலில் தோழர் நல்ல கண்ணு தலைமையேற்க தோழர்கள் சுந்தர மூர்த்தி, செந்தில், தெய்வமணி, அருண பாரதி, தமிழ்நேயன், நாகை திருவளளுவன் உரையாற்றினர். அவரகளை தொடர்ந்து தோழர் பொழிலன் தமிழக மக்கள் முண்ணனி, பொதுச் செயலர், கோவை இராமகிருஷ்ணன் தந்தை பெரியார் திராவிடர் கழகம், கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் கழகம் உரையாற்றிய பின் நிறைவாக தோழர் தியாகு பேசிய பிறகு பொதுக் கூட்டம் இரவு 10.00 மணியளவில் நிறைவடைந்தது செய்தி குகநந்தன் லிங்கம்

சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு – பயிலரங்கம் தூத்துக்குடி 13032016

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த 13.03.2016 அன்று தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி ஒன்றியத்தில் வைத்து, “சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு” என்ற தலைப்பில் ஒருநாள் பயிரங்கம் நடைபெற்றது. பயிற்சியளித்தவர் மாநில பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள். காலை 9 மணிக்கு தொடங்கிய பயிலரங்கம் மதியம் 1:30 மணிவரை நடந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் 2:30க்கு தொடங்கிய பயிலரங்கம் மாலை 6 மணிவரை நடைபெற்றது. இந்த இருவேளைகளிலும், சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு என்ன என்பதைப்பற்றி பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள் மிக அழகாக, தெளிவாக விளக்கி கூறினார். பயிலரங்கம் முடிந்த பிறகு தோழர்கள் தங்களது கருத்துகளையும், சந்தேகங்களையும் பரப்புரை செயலாளரிடம் கேட்டு விளக்கம் பெற்றனர். இப் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் தேநீரும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. தோழர்களுக்கு மதிய உணவாக சுவையான மாட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட்டது. இப்பயிலரங்க...

தெருமுனைக் கூட்டம் சித்தோடு 20032016

தெருமுனைக்கூட்டம்,சித்தோடு ! ஈரோடு மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சித்தோடு கிளையில் சித்தோடு தட்டாங்குட்டை பகுதியில் 20.03.2016 மாலை 6 மணியளவில் தோழர் வேல்மாறன் தலைமையில் தோழர் கமலக்கண்ணன் முன்னிலையில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் தோழர் முருகேசன் பெரியாரிய பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார் . அவரைத் தொடர்ந்து நாமக்கல் வடக்கு மாவட்ட தலைவர் சாமிநாதன் பகுத்தறிவு பாடல் பாடினார் . ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேணு மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் ப.ரத்தினசாமி ஆகியோரது உரையைத் தொடர்ந்து காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது .இறுதியாக கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது . இரவு தோழர்களுக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த தோழர்கள் மாவட்ட அமைப்பாளர் குமார் , காவை சித்துசாமி , நங்கவள்ளி சிவக்குமார் , கொங்கம்பாளையம் சத்தியராஜ், சவுந்திரபாண்டியன், ராஜேஷ், ரங்கம்பாளையம்...

தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள் -கருத்தரங்கம் மேட்டுப்பாளையம் 20032016

தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ”தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள்” எனும் கருத்தரங்கம் பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் பிறந்த நாளான 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு மேட்டுப்பாளையம் அன்னபூர்ணா அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் தோழர் ஆசிரியர் சிவகாமி அவர்கள் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை புறநகர் மாவட்ட தலைவர் தோழர் பா.இராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கழக மாநில பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி,மாநகர் மாவட்டத் தலைவர் தோழர் நேரு தாசு,மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் நிர்மல் குமார்,பகுத்தறிவாளர் கழக தோழர் கள்ளக்கரை சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவியர் தோழர் தூரிகை சின்னச்சாமி அவர்கள் கைரேகையிலேயே வரைந்த கை’நாட்டுக்காக’ உழைத்த காமராஜர் எனும் ஓவியத்தை கருத்தரங்கில் கழக தலைவர் அவர்களிடம் வழங்கினார். ”கல்வி கற்காத காமராஜரின் கல்விப்புரட்சி” எனும் தலைப்பில் கழக தலைவர் ‘தோழர் கொளத்தூர்...

உடுமலை சங்கர் படுகொலை கண்டித்து நெமிலியில் ஆர்ப்பாட்டம் 20032016

20.03.2016 காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், உடுமலை சங்கர் அவர்களின் ஆணவப் படுகொலையை கண்டித்து நெமிலியில் கழக பிரச்சார செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்.இரா.பா.சிவா (திவிக) தோழர்.திலீபன் (திவிக) தோழர்.விழுப்புரம் அய்யனார் (திவிக) தோழர்.சங்கர் (திராவிடர் கழகம்) மற்றும் தோழமை அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஜாதி ஆணவக்கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக – பொதுக்கூட்டம் சென்னை 22032016

சென்னையில் பொதுக்கூட்டம் ! திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நட்டநடுத் தெருவில் சங்கர் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த காணொளி கண்டிருப்பீர்கள். சங்கரின் காதல் துணைவி கௌசல்யாவையும் கொடூரமாகத் தாக்கியது கௌசல்யாவின் தந்தை அனுப்பிய கூலிப்படை! இதைத்தான் ஆணவக் கொலை என்கிறோம். இதற்கு எதிராகத்தான் தனிச்சட்டம் கோருகிறோம். நம் கண்கள் கண்ட இப்படுகொலை நம்மையெல்லாம் நிலைகுலையச் செய்தது. படுகொலை செய்யப்படும் அளவுக்கு சங்கர் செய்த குற்றம் காதலித்ததும் அவரையே மணமுடித்ததும் எந்த அச்சுறுத்தலுக்கும் மீறி எதிர்காலத்தை காதல் துணையோடு எதிர்கொண்டதும் மட்டும்தான். மட்டும்தான். காதலித்ததிலிருந்து எதிர்கொண்டிருந்தது வரை இந்தச் சமூகம் எவ்வகையிலெல்லாம் அவர்களுக்குத் துணை நின்றது? குறிப்பாக சாதி ஒழிப்பை இலட்சியமாய்க் கொண்ட நாம் என்ன செய்தோம்? சாதி ஒழிப்பிலேயே அவரவர் காட்டும் வழிமுறைகளும் கண்ணோட்டங்களும் கோட்பாடுகளும் வேறு வேறாக இருக்கின்றன. அவற்றை பற்றி நாம் நமக்கும் மாறி மாறி விவாதித்துக்  கொண்டிருக்கிறோம். ஆனால், இளவரசனுக்குப் பிறகு, கோகுல்ராஜுக்குப் பிறகு காதலர்க்குத்...

பெரியாரியல் விளக்கப் பொதுக்கூட்டம் மேட்டூர் 18032016

பெரியாரியல் விளக்க பொதுக்கூட்டம் – மேட்டூர் – 18.03.2016. 18-03-2016 வெள்ளிக்கிழமை மாலை 6-00 மணியளவில், சேலம் மாவட்டம் மேட்டூர் சதுரங்காடி திடலில் ‘பெரியாரியல் விளக்கப் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது. மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டம், கழகத் தோழர்களின் பறை இசையோடு துவங்கியது. தொடர்ந்து மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவினர் (பாடகர்கள்; முத்துக்குமார், கோவிந்தராசு, அருள்மொழி. இசை; குமரப்பா, சீனி, காளியப்பன்) பகுத்தறிவு மற்றும் ஜாதி ஒழிப்புப் பாடல்களை பாடினர். பொதுக்கூட்டத்திற்கு நகரத் தலைவர் செ.மார்ட்டின் தலைமை ஏற்க, நகர துணைச் செயலாளர் குமரப்பா வரவேற்பு உரை ஆற்றினார். கொளத்தூர் குமரேசன், மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி ஆகியோர் உரைகளுக்கு பின், புலவர் செந்தலை ந.கௌதமன் அவர்கள் உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக நகர பொருளாளர்...

தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள் கருத்தரங்கம் மேட்டுப்பாளையம் 20032016

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும், ”தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள்” கருத்தரங்கம். பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் பிறந்த நாளில், இடம் : அன்னபூர்ணா அரங்கம்,மேட்டுப்பாளையம். நேரம் : மாலை 4.30 மணி. நாள் 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை. தலைமை : ஆசிரியர் சிவகாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் மாநில அமைப்பாளர். வரவேற்புரை : பா.இராமச்சந்திரன்,புறநகர் மாவட்ட தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். முன்னிலை : திருப்பூர் துரைசாமி, மாநில பொருளாளர், திராவிடர் விடுதலைக் கழகம். நேரு தாசு,மாநகர் மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். நிர்மல் குமார்,மாநகர் மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். கள்ளக்கரை சுந்தரமூர்த்தி,பகுத்தறிவாளர் கழகம், கருத்துரை : ”கல்வி கற்காத காமராஜரின் கல்விப்புரட்சி” எனும் தலைப்பில் கழக தலைவர் ‘தோழர் கொளத்தூர் மணி’ அவர்கள். ”தமிழகத்தில் தந்தை பெரியாரின் சமுதாயப்புரட்சி” எனும் தலைப்பில் ‘ரெயின்போ வெங்கட்ராமன்’, மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர். நன்றியுரை...

செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை 17032016 விடுதலை இராசேந்திரன்

கும்முடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாமில் சுபேந்திரன் அவர்களின் கால்கள் ஆய்வாளர் டெல்லிபாபுவால் உடைக்கப்பட்டது. முகாம் தலைவர் சிவக்குமார் அவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கி இழிவுபடுத்தியுள்ளார்கள். இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் செய்தியாளர் சந்திப்பு நேற்று 17.03.2016 வியாழன் அன்று காலை 11 மணியளவில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. அனைத்து ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் கலந்து இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். கால்கள் உடைபட்டுள்ள சுபேந்திரன் அவர்களை அவரின் துணைவியார், மகள் மற்றும் சிவகுமார் ஆகியோர் நேரில் வந்திருந்து செய்தியாளர்களிடம் தங்களுக்கு ஏற்பட்டதை முழுமையாக விளக்கினர். தோழர் தியாகு நமது கோரிக்கைகள் குறித்து விளக்கினார். மற்ற கேள்விகளுக்கும் பதிலளித்தார். திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை, தமிழக மக்கள் முன்னணி வழக்குரைஞர் பாவேந்தன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் க.அருணபாரதி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர்...

செயல்படாத தீண்டாமை ஒழிப்பு அலுவலகம் முற்றுகை திருப்பூர் 16032016 – நிழற்படங்கள்

திருப்பூரில், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதில் காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 16.3.2016 அன்று கழக பரப்புரை செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காவல்துறை முற்றுகைக்கு அனுமதி மறுத்துவிட்ட நிலையிலும் முற்றுகைப் போராட்டம் தடையை மீறி எழுச்சியுடன் நடைபெற்றது. • ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் வரவேண்டும். • ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதில் காவல்துறை அலட்சியம் காட்டுவதை மாற்றிக் கொள்ள வேண்டும். • ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோரின் வாழ்வுரிமைப் பாதுகாப்பைப் புறக்கணித்து, வாக்குரிமை பேசும் அரசியல் கட்சிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். • ஜாதி எதிர்ப்பு – தீண்டாமை எதிர்ப்புக்கான போராட்டக் களத்தை மேலும் வலிமையாக்கிட ஜாதி எதிர்ப்பு, சமூகநீதி இயக்கங்களின் வலிமையான ஒற்றுமை உருவாக வேண்டும். எனும் கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற்ற இந்த...

செயல்படாத தீண்டாமை ஒழிப்பு அலுவலகம் முற்றுகை சென்னை 16032016 – நிழற்படங்கள்

சென்னையில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில்.காவல்துறையின் தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 16.03.2016.புதன் கிழமை,காலை 10 மணி அளவில் ,சென்னை மயிலாப்பூர்,ஐ.ஜி.அலுவலக வளாகத்தில் உள்ள காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாவட்ட தலைவர் வேழவேந்தன், மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி, இளந்தமிழகம் அமைப்பின் தோழர் செந்தில்,பரிமளா,அம்பேத்கர் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தோழர் ஜெயமணி, எம்.ஆர்,எஸ் தொழிலாளர் சங்கத்தின் தோழர் சேகர், மரணதண்டனை எதிர்ப்புக்குழுவின் தோழர் டேவிட் பெரியார் உள்ளிட்ட 45 தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டார்கள். முற்றுகைப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக கடந்த 3 ஆண்டுகளில் 82 பேர் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தலித் இளைஞர்கள். இளவரசன்,...

தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம்!

தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம்!

முற்றுகைப் போராட்டம்! காவல்துறையின் தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில். உடுமலை சங்கர் அவர்களை ஜாதி வெறியர்கள் ஆணவப் படுகொலை செய்ததை கண்டித்தும், தொடர்ந்து நடைபெறும் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்கத் தவறும் செயல்படாத காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவை கண்டித்தும், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க கடுமையான தனிச் சட்டம் இயற்றக்கோரியும் முற்றுகைப் போராட்டம். நாள் : 16.03.2016.புதன் கிழமை காலை 10 மணி. இடம்: காவல்துறை இயக்குனர் (I.G.) அலுவலக வளாகத்தில் உள்ள தீண்டாமை ஒழிப்பு பிரிவு அலுவலகம்,மயிலாப்பூர், சென்னை. தொடர்புக்கு: தோழர் உமாபதி, செல் : 7299230363 சென்னை மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். ஜாதி வெறி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அணிதிரள்வோம் வாருங்கள்.

ஜாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூரில் புகார்

முகநூலில் ஜாதிவெறிப் படுகொலைகளுக்கு ஆதரவாகவும் மேலும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பதிவுகளை செய்து ஜாதி கலவரங்களை  தூண்டும் ஜாதிவெறியர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு தலைமையில் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் மாப்பிள்ளை சாமி,தோழர் அகிலன்,தோழர் தனபால் உள்ளிட்ட தோழர்கள் திருப்பூர் மாவட்ட இணையதள குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.  

‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என்கிறது தமிழ்த் தேசியம்; ‘ஆடு மேய்ப்பவரை ஐ.ஏ.எஸ். ஆக்கியது’ பெரியாரியம்: பால்பிரபாகரன் பேச்சு

திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், கல்வி நிலையங்களில் நிலவும் ஜாதிய பாகுபாடுகளை நீக்க வலியுறுத்தியும், கண்டன பொதுக்கூட்டம் பாவூர் சத்திரம் பேருந்து நிலையத்தில் மார்ச் 3ம் தேதி மாலை 5 மணியளவில் கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் குரும்பலாபேரி மாசிலாமணி தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. துவக்கத்தில் மாவட்ட அமைப்பாளர் அன்பரசு வரவேற்றார். திராவிடர் விடுதலைக்கழக நிர்வாகிகள் சங்கர், லெட்சுமணன், பெரியார் திலீபன், தங்கதுரை, சபாபதி, மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய மோடி அரசை கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட தலைவர் பால்வண்ணன், கீழப்பாவூர் மதிமுக ஒன்றிய செயலாளர் இராம உதய சூரியன், கீழப்பாவூர் திமுக ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன், கழகத் தோழர் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக கல்வி வேலை வாய்ப்புகளில்...

கோவையில் சர்வதேச மகளிர் நாள் விழா

கோவையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் நாள் விழாவில் மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். மார்ச் 8,சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி கோவையில் அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பணியாற்றும் பெண் பத்திரிக்கையாளர்கள் சர்வதேச பெண்கள் தினத்தை எழுச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடினர். கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ஒய்.ஏ.சாதிக் வரவேற்புரையாற்றினார். சர்வதேச பெண்கள் தினத்தின் சிறப்பு குறித்தும், காலம் காலமாய் பெண்கள் ஒடுக்கப்பட்டுவரும் இழிநிலை குறித்து தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் மாநிலப் பொறுப்பாளரும், திருப்பூர் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான சிவகாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக சர்வேதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் பெரிய வகையிலான கேக்கை வெட்டியும், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும் எழுச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மூத்த பெண் பத்திரிக்கையாளர் சௌந்தர்யா ப்ரீத்தா உள்ளிட்ட அச்சு மற்றும் காட்சி ஊடகத்தின்...

இந்துத்துவாவும் பெண்களின் உரிமைகளும் – கருத்தரங்கம் ஈரோடு 12032016

இன்று (12.03.2016) ஈரோட்டில், ”உலக மகளிர் நாள் சிறப்புக் கருத்தரங்கம் !” நாள் : 12.03.2016,சனிக்கிழமை,மாலை 5.30 மணி. இடம் : யாளி ரெசிடென்சி அரங்கு,பிரப் சாலை,ஈரோடு. மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்தும் இக்கருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி அவர்கள் ”இந்துத்துவாவும் பெண்களின் உரிமைகளும்” எனும் தலைப்பிலும் புரட்சி விடியல் பெண்கள் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் தமயந்தி அவர்கள் ”மதவெறியும் ஜனநாயக உரிமைகளும்” எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றுகிறார்கள்.

வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது – கவிதை நூல் வெளியீடு கோவை 13032016

”வெள்ளக்காக்கா மல்லாக்கப்பறக்குது” கவிதை நூல் வெளியீட்டு விழா ! கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நூலை வெளியிட்டு உரையாற்றுகிறார். நாள் : 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை,காலை 9.30 மணி. இடம் : அண்ணாமலை அரங்கம்.சாந்தி திரையரங்கம் அருகில், ரயில் நிலையம் எதிரில்,கோவை. வரவேற்புரை : தோழர் இனியன் நேருதாசு, மாநகர மாவட்ட தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். நூல் வெளியீட்டு அறிமுக உரை : ”தோழர் கொளத்தூர் மணி” அவர்கள் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் முதல் பிரதி பெற்றுக்கொள்பவர்: கோவிந்தம்மாள் அவர்கள். மதிப்புரை : கவிஞர் புவியரசு, எழுத்தாளர் பாமரன், எழுத்தாளர் இரா.முருகவேள். நன்றியுரை : தோழர் நிர்மல், மாநகர மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.

மதுரை அகதி முகாமில் ரவிச்சந்திரன் குடும்பத்தினரிடம் கழகத் தலைவர் ஆறுதல்

மதுரை திருமங்கலம் அருகில் உச்சம்பட்டியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 06032016 ஞாயிற்றுக் கிழமையன்று அங்கு சோதனையிடவந்த வருவாய் அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ரவிச்சந்திரன் அங்கு வந்துள்ளார். தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அப்போது அவர் தெரிவித்தார். ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த ரவிச்சந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து ரவிச்சந்திரன் உயிரிழந்தார் இறந்த ரவீந்திரனின் குடும்பத்திற்கு போதுமான நிவாரணம் அளிக்க வேண்டுமென்றும் அந்த வருவாய் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த முகாமில் உள்ள அகதிகள் கோரி போராட்டம் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அங்கு சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னார்....

பெரியார் நடத்திய போராட்டங்களும் தமிழர் அடைந்த பயன்களும் ஆனைமலை பொதுக்கூட்டம் – 05032016 – நிழற்படங்கள்

பொள்ளாச்சி ஆனைமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக பொதுக்கூட்டம் ! ”பெரியார் நடத்திய போராட்டங்களும்,தமிழர்கள் அடைந்த பலன்களும்” எனும் தலைப்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கு தோழர் அரிதாசு அவர்கள் தலைமை தாங்கினார்.தோழர்கள் அப்பாதுரை,இரா.ஆனந்த்,விவேக்சமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி,மாநில அமைப்புச்செயலாளர் ஈரோடு ரத்தினசாமி,மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி,தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், தோழர் சூலூர் பன்னீர் செல்வம்,மடத்துக்குளம் மோகன்,நேருதாசு,நிர்மல், வே.வெள்ளியங்கிரி, த.ராஜேந்திரன்,சீனிவாசன்,யாழ்மணி,மணிமொழி,சுந்தரமணி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். பள்ளத்தூர் நாவலரசு – மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு பகுத்தறிவுப்பாடல்கள் இடம்பெற்றன. தோழர் கோ.சபரிகிரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.  

உடுமலை – பேராசிரியர் இந்திரஜித் நினைவேந்தல் – நிழற்படங்கள்

முனைவர் க. இந்திரசித்து படத்திறப்பு ! உடுமலையில் கடந்த 27.01.2016 அன்று மறைந்த பேராசிரியர் முனைவர் க.இந்திரசித்து அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 05.03.2016 அன்று நண்பகல் 12 மணியளவில் உடுமலைப் பேட்டை சிங்கப்பூர் நகரில் உள்ள முனைவர் இந்திரசித்து அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. முனைவர் இந்திரசித்து அவர்கள் படத்தை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். முனைவர் இந்திரசித்து அவர்களின் இணையர் திருமதி. வீ.வளர்மதி அவர்கள் முனைவரின் நினைவுகளை கூடியிருந்த தோழர்களிடம் நெகிழ்சியோடு பகிர்ந்து கொண்டார். முனைவரின் மகள் கவிஞர் தமிழ்மகள்,முனைவரின் இணையர் திருமதி. வீ.வளர்மதி அவர்கள்,கவிஞர் கார்கோ ஆகியோர் எழுதிய இரங்கற்பாக்கள் வாசிக்கப்பட்டன. தோழர்கள் இலெனின் பாரதி, உடுமலை அருட்செல்வன், தோழர் பொள்ளாச்சி காசு.நாகராசன் பேரா.கண்டிமுத்து, தோழன் இராசா,தோழர் கொழுமம் ஆதி, உடுமலை துரையரசன், பேரா.பொன்னரசன், முனைவர் சி.டி.கோபால், சிவசக்திராமசாமி,திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர் தம்பி பிரபாகரன் உள்ளிட்ட தோழர்கள் இந்நிகழ்வில் கலந்து...

மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் நடைபாதை ஆக்ரமிப்பை எதிர்த்து மனு

தனியார் பள்ளிக்கு ஆதரவாக சென்னை மாநகராட்சியே ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தக் கோரி சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் சென்னை மேயர் அலுவகத்தில் மனு ! நேற்று 08.03.2016 அன்று மயிலாப்பூரில் மாநகராட்சியே மேற்கொள்ளும் நடைபாதை ஆக்ரமிப்பிற்கு எதிராக திவிக சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன் தலைமையில் சென்னை கழக தோழர்கள் மேயர் அலுவலகம் சென்று அந்த பணியை நிறுத்தக்கோரி மனு தந்தனர். கழக தோழர் செந்தில் அவர்கள் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

திவிகழக கூட்டங்கள்

திவிகழக கூட்டங்கள்

‘சித்தோடு’ கிளைக் கழகம் நடத்திய ஜாதி எதிர்ப்பு கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு (தெற்கு) மாவட்டம் சித்தோடு கிளைக் கழக சார்பில் “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” என்ற முழக்கத்துடன் மற்றும் “கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்” சித்தோடு அருகில் உள்ள ஜே.ஜே நகரில் 21.02.2016 மாலை 6.30 மணி யளவில் சங்கர் தலைமையில், எழிலன் முன்னிலை யில் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில் முருகேசன் பெரியாரியல் பாடல்கள் பாடினார். காவலாண்டியூர் சித்துசாமி மற்றும் ஈசுவரன் ஆகியோர் கொள்கை விளக்க உரையாற்றினர். தொடர்ந்து காவை இளவரசன், “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து வீரன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார். நிறைவாக கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். கூட்ட துவக்க முதல் இறுதி வரை மக்கள் திரளாக இருந்து நிகழ்ச்சியை கேட்டனர். கமலக்கண்ணன் நன்றியுரை கூற கூட்டம் நிறைவு பெற்றது. ஈரோடு...

கோபியில் காவல்துறை தடைகளைத் தகர்த்து, பார்ப்பன மத சூழ்ச்சிகளை தோலுரித்த கழக மாநாடு

பார்ப்பன கும்பல் தங்களது மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள கல்வியை காவி மயமாக்கி சமஸ்கிருதத்தைத் திணித்து,இந்துத்துவ போர்வையில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குஎதிராக சதிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றன. ஜாதி அமைப்பே இந்துமதத்தின் அடிப்படை தத்துவமாகும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் இந்துக்கள் தான் என கூறும் பார்ப்பனர்கள் அவர்களை பல்வேறு ஜாதிகளாக கூறுபோட்டு அவர்களின் உரிமைகளை பறிக்கின்றனர். இந்த நாட்டில் ஜாதியம் தான் பார்ப்பனியம் என சரியாக பிளந்து காட்டியவர் பெரியார். இந்த சமூகத்தில் ஜாதியமைப்பை நியாயப்படுத்தும் பாசிச தத்துவமான பார்ப்பனியத்தின் கோரமுகத்தை வெகு மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள் ஈரோடு,சேலம், சென்னை, சங்கராபுரம், மதுரை, கோபி செட்டிபாளையம் போன்ற நகரங்களில் நடத்தப்பட்டுள்ளன. ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில், ‘மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு’ பிப்ரவரி 28ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோபி...

புரட்சி முழக்கம் – இதழ் வெளியீடு மதுரை 06032016

மதுரை காலேஜ் ஹவுஸ் (ரயில் நிலையம் அருகில்) 06.03.2016, மாலை 5 மணிக்கு புரட்சிப் புலிகள் நடத்தும் முப்பெரும் விழாவில் கழக தலைவர் தோழர் ‘கொளத்தூர் மணி’ அவர்கள் கலந்து கொண்டு “புரட்சி முழக்கம்” எனும் இதழை வெளியிட்டார்.

மதுரை நகரில் கழக மாநாட்டின் எழுச்சி

மதுரையில், ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ மக்களைப் பிளவு படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை 27.2.2016 அன்று ஒபுளா படித் துறையில் சிறப்புடன் நடத்தியது. மாவட்ட செயலாளர் மா.ப.மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்புரையாற்ற, மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பகத்சிங், கழகப் பிரச்சார செயலாளர் பால்.பிரபாகரன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் இரா. செல்வம், கம்யூனிஸ்ட் மா.லெ.மாவட்டச் செயலாளர் மேரி ஆகியோரைத் தொடர்ந்து எ.ஸ்.டி.பி.ஐ.மாநில செயலாளர் நெல்லை முபாரக், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சகாயராஜ் நன்றி கூறினார். மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில பொருளாளர் துரைசாமி, விருதுநகர் கணேசமூர்த்தி, விஜயகுமார், சூலூர் பன்னீர்செல்வம், காளையார் கோயில் முத்துகுமார், தனபால், சங்கீதா, வழக்கறிஞர் பொற்கொடி ஆகியோர் மாநாட்டின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினர். காவல்துறை விதித்த தடையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துஅனுமதி...

கெயில் குழாய் பதிப்பின் ஆபத்து குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு !

20-2-2016 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கெயில் குழாய் பதிப்பின் ஆபத்தை விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் தோழர் கி.வெ.பொன்னையன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பார்கள் தோழர் பிரவின், தோழர் திருமுருகன் மற்றும் கெயில் குழாய் பதிப்பால் பாதிக்கப்பட்ட தோழர் பொன்னம்மாள் தோழர் வசந்தாமணி ஆகியோர் பங்குபெற்றனர்.

முதல்வருக்கு குடிசைப் பகுதி குழந்தைகள் கடிதம் எழுதும் போராட்டம்

20.2.2016 அன்று தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தமிழக முதல்வருக்கு குடிசைப் பகுதி குழந்தைகள் கடிதம் எழுதும் போராட்டம் காலை 11 மணிக்கு நடைபெற்றது. • சென்னையில் குதிரைப் பந்தயம், முதலாளிகளுக்கு கோல்ப் விளையாட பல ஏக்கர் அரசு நிலம். • சென்னையில் ஏழை எளிய குடிசை மக்களுக்கு ஒரு சென்ட் நிலம் இல்லையா? • தமிழக அரசே! ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! • வாழ்வாதாரத்தை பறிக்காதே! கல்வி வேலை வாய்ப்பை முடக்காதே! • குடிசைப் பகுதி மக்களுக்கு அவர்கள் வாழ்விடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடு! • உச்சநீதிமன்ற உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட மக்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருப்பிடத்தை அமைத்து கொடு! • பார்ப்பன பனியா கும்பலுக்கு வெண்ணை! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுண்ணாம்பா?” – என்று முதல்வருக்கு கடிதம் எழுதும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப் போராட்டத்தில்...

இழிவொழிப்பு மகளிர் மாநாடு – ஆதித்தமிழர் பேரவை மதுரை 08032016

“தாய் நாடு தாய்த் திருநாடு” எனப் பெண்களை உயர்த்திப்பிடித்து தம்பட்டமடிக்கும் இம்மண்ணில் தான் பெண்கள் தங்களின் தலையில் “மனிதன் கழிக்கும் மலத்தை” சுமந்து “தேசிய அவமானமாகவும்” வலம்வருகிறார்கள்.இந்திய நாட்டின் ஒட்டுமொத்த மலமள்ளும் தொழிலாளர்களில் 80 சதத்திற்கும் அதிகமானோர் பெண்கள்தான். இக்கொடுமையை சகித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பதுதான்  மனித இனத்திற்கு “பேரவமானம்”. சக பெண்கள் இழிவைச் சுமக்க சகித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது பெண்ணியவாதிகளுக்கு பெருமையாக இருக்கின்றதா? ‘பீப்’ பாடலுக்கு எதிராக பீரிட்டுக் கிளம்பிய பெண்ணியவாதிகளின் குரல்கள் “பீயை” சுமக்கும் பெண்களைப் பற்றி பேசாமல் மவுனம் காப்பது பேரிழுக்கு இல்லையா? இழிவென்று தெரிந்தும் இதை ஏன் செய்கிறார்கள் என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டு நழுவிக்கொள்வதுதான் முற்போக்காளர்களின் முற்போக்கான சிந்தனையா? இதுவெல்லாம் ஒரு பிரச்சினையா? என அலச்சியத்தோடு அணுகும் அதிகாரிகளும், காவல்துறையும் கள்ளச்சாரயம் காய்ச்சுவதையும், கஞ்சா விற்பதையும், குழந்தைத்தொழில் முறையையும் “விரும்பி செய்தால்” விட்டுவைக்குமா? தமிழ் ஈழமும், காவிரி முல்லைப் பெரியாறும், அணுஉலையும், மீத்தேனும் பொதுப் பிரச்சினைகள் என்றால் இதுமட்டும் தனிப்பிரச்சினையா? இவர்கள் செய்யவில்லை என்றால் இதை நாம்தானே செய்யவேண்டும் என்ற சுயநல சாதிய...

பெரியாரின் போராட்டங்களும் தமிழர் அடைந்த பயன்களும் ஆனைமலையில் பொதுக்கூட்டம்

05.03.2016 ஆனைமலை, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம். ”பெரியாரின் போராட்டங்களும் தமிழர் அடைந்த பயன்களும்” எனும் தலைப்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கழக தலைவர் ‘தோழர் கொளத்தூர் மணி’ அவர்களும், கழக பொதுச்செயலாளர் ‘தோழர் விடுதலை ராஜேந்திரன்’ அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். நாள் : 05.03.2016 சனிக்கிழமை ,மாலை 5.30 மணியளவில் இடம் : முக்கோணம்,ஆனைமலை (பொள்ளாச்சி). மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு,பகுத்தறிவுப் பாடல்கள் இடம்பெறும். நிகழ்ச்சி ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம்,ஆனைமலை தொடர்புக்கு : 99760 86033 – 98428 15340 – 99420 77390

பூரணாகரன் – ஆஷா ஜாதி மறுப்பு இணை ஏற்பு விழா!

பூரணாகரன் – ஆஷா ஜாதி மறுப்பு இணை ஏற்பு விழா! நெமிலியில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சு.பூரணாகரன்-தி.ஆஷா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணை ஏற்புவிழா, 19.2.2016 அன்று காலை 7 மணிக்கு வேணுகோபால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, அருள் மொழி (திராவிடர் கழகம்), அனந்தி சசிதரன் (இலங்கை வடமாகாண சபை உறுப்பினர்), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), டேவிட் பெரியார், திரைப்பட இயக்குனர் ஹீரா, சென்னை மாவட்ட கழக செயலாளர் தோழர் இரா. உமாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

JNU மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற கோரி குடியாத்தத்தில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் ! வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ! 29.02.2016 அன்று மாலை மாலை 4 மணியளவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் JNU மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற கோரிஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இந்நிகழ்வில் கழக இரா.ப.சிவா. மா.பெ.பொ.கட்சியின் தோழர் சீனி.பழனி, மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் தோழர் சுந்தர், அம்பேத்கர் தொழிலாளர் இயக்கத்தின் தோழர் மேயர் சுந்தர், கழக தோழர்கள் பார்த்தீபன் நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர். கழக தோழர் கோடீஸ்வரன் நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமை அமைப்பு தோழர்கள் உள்பட 40 தோழர்கள் கலந்துகொண்டனர் பெரியார் முழக்கம் 10032016 இதழ்

முகநூலில் சாதி வெறியைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு திவிக சார்பில் மனு

முகநூலில் சாதி வெறியைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் மனு ! சமூக வலைத்தளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் தீரன் சரவணன் குருசாமிக் கவுண்டர் என்ற நபர்,தான் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை என்ற அமைப்பைச் சார்ந்தவர் என்று கூறிக் கொண்டு கொங்கு இனத்தைச் சார்ந்த பெண்களைக் காதலித்தால் பஸ்,லாரியை எற்றிக் கொலை செய்வோம் என்று கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.. மேற்படி நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 29.02.2016 அன்று ஈரோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன்,பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பாளார்கள் குமார்,சென்னிமலை செல்வராசு,மாநகரச் செயலாளர் சிவானந்தம், சிவக்குமார்,மோகன்ராஜ்,விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனர் தோழர்.தமிழின்பன் ஆகியோர் மனு அளித்தனர் பெரியார் முழக்கம் 10032016 இதழ்

ஜாதிவெறியர்களை கைதுசெய் – நாமக்கல் மாவட்டத்தில் கழகம் புகார் மனு

அருந்ததிய இளைஞரை காதலித்தால் கௌரவ (ஆணவ)கொலை செய்வோம் என்றும், அந்த இளைஞரையும் கொலைசெய்வோம் என்றும் திருச்செங்கோடு செங்குந்தர் கல்லூரி மாணவியை “அலைபேசி”யில்(யுவராஜ் பாணியில்)மிரட்டிய கவுண்டர் ஜாதிவெறியர்களை வன்கொடுமை தடுப்பு மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கைதுசெய்…! மாணவிக்கு தகுந்த உயிர்பாதுகாப்பு வழங்கு…! என்று நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறையில் இன்று புகார் அளித்துவிட்டு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை சந்தித்து செய்திகளை பதிவு செய்தோம்… உடன் மாவட்ட கழகசெயலாளர் சரவணன், பள்ளிபாளையம் நகரகழக செயலாளர் பிரகாசு, திருச்செங்கோடு நகரகழக செயலாளர் நித்தியானந்தம், நகர இளைஞரணி செயலாளர் பிரகாசு, ஒன்றிய அமைப்பாளர் சதீசு,கார்த்தி உள்ளிட்ட கழகத்தோழர்கள் வந்திருந்தனர் செய்தி வைரவேல், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்

பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு மதுரை 27022016

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் மதுரையில் வரும் 27.2.2016 சனிக்கிழமை அன்று ”மக்களை பிளவு படுத்தும் பார்பன மதவாத எதிர்ப்பு மாநாடு ” நடக்கவிருக்கிறது. பறை இசை மற்றும் பள்ளத்தூர் நாவலரசு அவர்களின் இசை நிகழ்ச்சியோடு தொடங்கி கழக தலைவர் தோழர் ”கொளத்தூர் மணி ”அவர்கள், கழக பொதுசெயலாளர் தோழர் ”விடுதலை ராஜேந்திரன்” அவர்கள் , எஸ்டிபிஐ கட்சி தலைவர் தோழர் ”தெகலான் பாகவி” அவர்கள், தமிழ் புலிகள் கட்சி தலைவர் தோழர் ”நாகை திருவள்ளுவன்” அவர்கள், ஆதி தமிழர் பேரவை தெற்கு மாவட்ட செயலாளர் தோழர் ”இரா .செல்வ குமார்” அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளார்கள் அனைவரும் வருக

சென்னை காதல் தின கொண்டாட்டத்தில் மதவாத கும்பலுக்கு பதில் அடி கொடுத்த கருப்பு சட்டைகள்

காதல் தினத்திற்கு தோழர்களுடன் ஏதோ பல நிகழ்ச்சிகள்லாம் திட்டமிட்டோம் ஆனால் நாங்கள் திட்டமிட்டதை விட மிகவும் சிறப்பான நிகழ்ச்சியை ஏற்படுத்தி கொடுத்தது இந்து மக்கள் கட்சி. மெரினா உழைப்பாளர் சிலை அருகில் ஒன்று கூடி காதலர் தினத்திற்காக தயார் செய்த பேனரை புடித்து கொண்டு காதலர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டும் வாழ்த்து தெரிவித்தும் நடந்து சென்றோம். எதிரே தவ்ஹித் ஜமாத் யை சேர்ந்தவர்கள் காதலர் தினத்தை எதிர்க்கும் வகையில் துண்டறிக்கை கொடுக்க அவர்களுக்கும் இனிப்பு வழங்கி காதலர் தின வாழ்த்து தெரிவித்தோம். கொஞ்ச தூரம் சென்ற பிறகு தோழர் நாத்திகன் எங்களிடம் வந்து கண்ணகி சிலை அருகே இந்து மக்கள் கட்சி ஏதோ ஆர்ப்பாட்டம் பன்றாங்களாம் கண்டிப்பா அங்கே இருக்கும் காதலர்க்கு தொந்தரவு கொடுப்பார்கள் நம்ப அங்கே போயிடலாம் திராவிடர் விடுதலை கழக தோழர்களும் இருப்பாங்கனு சொன்ன வுடனே நாங்க அங்க போயிட்டோம். அங்கே ஏற்கனவே தோழர் உமாபதி தலைமையில் திவிக...

தோழர் திலீபன் மகேந்திரனை தாக்கிய காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தோழர் திலீபன் மகேந்திரனை தாக்கிய புளியந்தோப்பு காவல்துறையை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் 13022016 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

காதலர் தின விழா குமரி மாவட்டத்தில் சாதி ஒழிப்பு நாளாக கொண்டாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம்.சார்பாக மாவட்டத் தலைவர் வே.சதா தலைமையில் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை காலை10.00 மணிக்கு அவருடைய இல்லத்தில் காதலர் தின விழா சாதி ஒழிப்பு நாளாக கொண்டாடப்பட்டது. கழகத் தோழர்.தமிழ்மதி மற்றும் அவரின் வாழ்விணையர் தமிழ்ச் செல்வி ஆகியோர் கலந்துக் கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.தோழர்.தமிழ் மதி அவர்கள் ”சாதியை ஒழிக்கவே சாதி ஒழிப்பு நாள் என திராவிடர் விடுதலைக் கழகத்தால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது” என்று விளக்கி பேசினார். நிகழ்வில்; தோழர்கள் மஞ்சு குமார்,இராஜேஸ் குமார்,சகிலா பொன் மலர்,அ.மணி கண்டன்,இராசேந்திரன்,சூசையப்பா ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

தொடர் முழக்க கண்டன ஆர்பாட்டம் ! – OBC இடஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) 27% இடஒதுக்கீடு 23 ஆண்டுகள் கடந்த பின்பும் 12% மட்டுமே நிரப்ப்ப்பட்டுள்ளது. இதை முழுமையாகவும் முறையாகவும் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிரப்பக்கோரி 13.2.2016 அன்று காலை சென்னை வள்ளுவர் கோட்ட்த்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட(OBC) ஊழியர்கள் நலச்சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மத்திய அரசை கண்டித்து தொடர் முழக்க கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த பேரமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். பேராசிரியர் டாக்டர் முரளிதரன் விரிவாக இடஒதுக்கீட்டிலும், அய்.அய்.டி போன்ற உயர் கல்வி நிறுவன்ங்களில்லும் நடைபெறும் மோசடிகளை தனது உரையில் தோலுரித்து காட்டினார். அடுத்து சங்கர் IAS அகாடமியின் தலைவர் திரு.சங்கர் அவர்கள் சிவில் சர்வீல் தேர்வுகளில் எப்படி முறைகேடுகளை இவ்வரசுகள் மேற்கொள்கின்றன இதனால் உயர் சாதியினர் எப்படி பலன் அடைகிறார்கள் என்பதை சுருக்கமாக விளக்கினார். நிறைவாக கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தமது கண்டன உரையில் இடஒதுக்கீட்டை...

பா.ஜ.க.வின் கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு !

பா.ஜ.க.வின் கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு ! பாஜக பொறுப்பாளர் கல்யாண ராமன் தொடர்ச்சியாக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும்,கலவரத்தை தூண்டும் விதமாகவும்,பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் விதமாகவும் பேசியும்,சமூக வலை தளங்களில் எழுதி வருவதற்க்காகவும், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை ஒருமையிலும், திவிக தோழர்களை கும்பல்கள் என்றும் முகநூலில் பதிவுசெய்த பாஜக கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று (10.02.2016) காலை பதினோரு மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அப்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்த திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி அவர்கள் ”இதுபோன்ற நடவடிக்கைகளை கல்யாணராமன் போன்ற பாஜகவினர் தொடர்ந்தால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்’ என தெரிவித்தார்.