தீபாவளி புனிதமா? வணிகமா? விழிப்புணர்வு துண்டறிக்கை

தீபாவளி புனிதமா? வணிகமா? விழிப்புணர்வு துண்டறிக்கை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்ட தோழர்களால் தியாகராய நகர் கடைவீதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது .

மாணவர்கள், மாணவியர்கள் தாய்மார்கள் என மக்கள் ஆர்வமாக துண்டறிக்கையை வாங்கி படித்தது அவர்களின் தேடலை, தேவையை நன்கு உணர்த்தியது. சிலர் இருபது முப்பது துண்டறிக்கைகளை அவர்களின் பகுதியில் விநியோகிக்க வாங்கிச் சென்றதும், ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க கம்யூனிஸ்ட் தோழர் தாமாக முன் வந்து துண்டறிக்கை விநியோகத்திற்கு உதவியாய் வந்ததும், திருவல்லிக்கேணிதொகுதி MLA ஜெ. அன்பழகன் துண்டறிக்கையை பெற்றுக்கொண்டு தோழர்களின் பணியை பாராட்டியது, தோழர்களுக்கு பெரும் ஊக்கமாய் அமைந்தது. தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதியுடன் தோழர்கள் துண்டறிக்கையை விநியோகம் செய்தனர்.

செய்தி :
தோழர் உமாபதி,
மாவட்ட செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்
சென்னை மாவட்டம்

14581373_1828911534059405_6091727861606654578_n 14581393_1828911924059366_29304242606897966_n 14581421_1828911597392732_5986804673380552237_n 14581515_1828911560726069_391361858989516319_n 14606249_1828911864059372_1894178831506670932_n 14606518_1828911750726050_7563748283195987504_n 14725680_1828911670726058_8263231722567295210_n 14732367_1828911880726037_7054166060698066936_n 14732399_1828911827392709_8011721745632296603_n 14908310_1828911704059388_7867309747975702592_n 14909901_1828911644059394_4938906551412493536_n

You may also like...