சித்தோட்டில் சட்ட எரிப்புப் போராளிகள் நினைவு நாள்
26.11.2016 சனிக்கிழமையன்று, திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக, சித்தோடு நான்கு முனைச் சந்திப்பில் மாலை 7.00 மணிக்கு “சட்ட எரிப்புப் போராட்டமும் பெரியார் தொண்டர்களின் தியாகமும்” என்கிற தலைப்பிலும், “பொது சிவில் சட்டத்தின் ஆபத்துகள்” என்கிற தலைப்பிலும் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. யாழ். எழிலன் வரவேற்க, மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தின சாமி தலைமையேற்றும், இரா. கமலக்கண்ணன் முன்னிலை வகிக்கவும், தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி. வேலுச்சாமி, வீரா கார்த்திக் மற்றும் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பான உரையை நிகழ்த்தினார். வேணுகோபால், ராசண்ணன், சத்தியராஜ், சித்தோடு தோழர்கள் முருகேஷ், நடராஜ், சுப்பையா, முத்துசாமி, பிரபு, ரமேஷ், பள்ளி பாளையம், காஞ்சிக்கோயில் திருமூர்த்தி, அய்யப்பன், சாமியப்பன், அரங்கம்பாளையம் பிரபு, தமிழ்ச் செல்வன் ஆகியோர் பங்கேற்க மாவட்டப் பொருளாளர் பி.கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்புடன் முடிந்தது.
பெரியார் முழக்கம் 08122016 இதழ்