எண்ணூரில் மதவாத எதிர்ப்பு கருத்தரங்கம்
சென்னை மாவட்டம் எண்ணூர் கத்திவாக்கத்தில் அமைந்துள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் படிப்பகம் சார்பாக 20.11.2016 அன்று மாலை “மதவாதம் – கல்வி வியாபாரக் கொள்கைக்கு எதிராக பொது வெளி கருத்தரங்கம்” அரிகரன் தலைமையில் சிறப்புடன் நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் “ஆட்சியில் இந்துத்துவம்: விளைவுகள் – சவால்கள்” என்ற தலைப்பில் ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார். இந்துத்துவம் இந்து என்று சொல்லப்படுகிறவர்களுக்கு எப்படியெல்லாம் கல்வி தர மறுக்கிறது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் முன் வைத்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, புதிய கல்விக் கொள்கையின் பேராபத்துகள் குறித்து விரிவாகப் பேசினார். தோழர் பகத்சிங் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் வழக்கறிஞர் திருமூர்த்தி மற்றும் சென்னை மாவட்டத் தோழர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி: செந்தில்FDL
பெரியார் முழக்கம் 24112016 இதழ்