தென்மண்டல ஐ.ஜி.அலுவலக முற்றுகை – ஆணவக்கொலை மதுரை 03112016

ஆணவக் கொலைகளைத்  தடுக்கத்  தவறிய காவல்துறைக் கண்டித்து, தென்மண்டல காவக்துறை ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம்  3-11-2016 அன்று, காலை 11-00 மணியளவில் நடைபெற்றது. மதுரை, புதூர் பேருந்து நிலையத்தில் அணிதிரண்ட தோழர்களிடையே கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்  தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை.திருவள்ளுவன் நோக்க உரையாற்றினார். திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலைக் கட்சியின் மீ.த.பாண்டியன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமக்கிரிட்டிணன், மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எச்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெகலான் பாகவி, ஆதிதமிழர்ப் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் புதுக்கோட்டை செரீப், மக்கள் ஜனநாயக முன்னேஏற்றக் கழகப் பொதுச் செய்லாளர் பிரிசெல்லா பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், மே 17 இயக்கம் திருமுருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நேசன், விடுதலைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆற்றலரசு போன்றோர் உரையாற்றிய பின்னர் ஐ.ஜி அலுவலகத்தை நோக்கிப் பேரணியாக தோழர்கள் புறப்பட்டனர்.

ஏறத்தாழ 200 மீட்டர் தூரம் கடந்தபோது காவல்துறையினர் தோழர்களைத் தடுத்து கைது செய்தனர்.
காவல்துறையினர்  கணக்குபடி  செய்யப்பட்ட 480 தோழர்களும் பத்மசூர்யா திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
அரங்கில் மதிய உணவுக்குப் பின்னர் பிற்பகல் 3-30 மணியளவில்  ஒருங்கிணைப்பாளர் நாகை திருவள்ளுவன் தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது. ப்தக்லாுஜ்னன் சமாஜ் கட்சித் தோழர் ஒருவர்,  பாகவி பொது சிவில் சட்டத்தின் மோசடிகள் குறித்தும், அப்துல் சமது மோடி ஆட்சியின் மதவெறிப் போக்கைக் குறித்தும், திருமுருகன் மோடி ஆட்சியில் தமிழர்கள் உரிமைகள் பறிக்கப் படுவதைக் குறித்தும், புரட்சிகர இளைஞர் முன்னணித் தோழர் குமரன் போன்றோர் உரையாற்றினர். மாலை 6-00 மணியளவில் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
img_8958 img_8987 img_8990 img_8995 img_8996 img_9000 img_9001 img_9011 img_9015 img_9023 img_9024 img_9030 img_9070 img_9073 ipad-1660 ipad-1662 ipad-1667 ipad-1669 ipad-1691

You may also like...