தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சென்னை 05112016

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

திராவிடர் விடுதலைக் கழகம் வடசென்னை மாவட்ட தோழர்கள் கழக பாடகர் தோழர் அருள்தாஸ் தலைமையில், தோழர் விஜயன் வரவேற்புரையில், தோழர் பாஸ்கர் தோழர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் 5:11:2016 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணியளவில் புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது . நிகழ்காலத்திலும் பெரியாரின் தேவையை உணர்த்தும் பல்வேறு தலைப்புகளில் பொதுச்செயலாளர் தோழர். விடுதலை இராசேந்திரன், முனைவர். சுந்தரவள்ளி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தோழர் திருமூர்த்தி, தோழர் துரை அருண், சிறப்புரையாற்றுகிறார்கள். தோழர் காவை. இளவரசன் வழங்கும் அறிவியல் நிகழ்ச்சி மந்திரமா – தந்திரமா மற்றும் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தோழர் வேலு நன்றியுரையுடன்நிகழ்ச்சியை முடித்து வைப்பார் . அனைத்து பகுதி தோழர்களும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும்.

திராவிடர் விடுதலைக் கழகம்
சென்னை மாவட்டம்

14963157_708334679305251_9200116635431319157_n

You may also like...