டிச.24-சேலத்தில் ‘வேத மரபு மறுப்பு மாநாடு’ தோழர்களே தயாராவீர்!

டிசம்பர் 24இல் பெரியார் நினைவு நாளில், சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒரு நாள் மாநாடு.

“சித்தர்கள்-வள்ளலார்-பெரியார்-அடிச்சுவட்டில்…

‘வேத மரபு’ மறுப்பு மாநாடு

காலை முதல் இரவு வரை கருத்தரங்குகள் – பேரணி – பொதுக் கூட்டம் – கலை நிகழ்ச்சிகள்.

கழகத்தின் வளர்ச்சிக்கான கட்டமைப்பு நிதி – முதல் தவணை யாக கழகத் தலைவரிடம்  வழங்கப்படுகிறது.

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு முதல் தவணையாக 5000 சந்தாக்கள் வழங்கப்படு கிறது.

கழகத்தின் புதிய ‘மாத இதழ்’ வெளி வருகிறது.

தமிழகத்தின் சிந்தனையாளர் கள் – பேச்சாளர்கள் – தலைவர் கள் பங்கேற்கிறார்கள்.

வேத மதமான பார்ப்பன மதத்தை பார்ப்பனர்கள் – பார்ப் பனரல்லாத மக்கள் மீது திணித்தார்கள். ‘இந்துக்கள்’ என்று பெயர் சூட்ட வைத் தார்கள்.

வேத மதத்துக்குள் வெகு மக்களை இழுத்துக் கொண் டவர்கள் அந்த மக்களின் சுய மரியாதையை மறுத்தார்கள். ஜாதிகளைத் திணித்து ஒடுக்கு முறை கட்டமைப்பை உறுதி செய்தார்கள்.

தீண்டாமைக்கு எதிராக – இட ஒதுக்கீட்டு உரிமைக்காக பெண் ணுரிமைக்காக நடந்த போராட் டங்கள் எல்லாம் இந்த மண்ணில் வேத மரபுக்கு எதிராக நடந்த போராட்டங்கள்தான்!

வேத மரபுக்கு எதிர்ப்பு – வேத காலத்திலேயே தொடங்கி விட்டது. வேதங்களின் பார்ப்பனிய கொடுமைகளை – ‘சார்வாகர்கள்’ எதிர்த்தார்கள்; சித்தர்கள் எதிர்த்தார்கள்; புத்தர் எதிர்த்தார்; சமணம் எதிர்த்தது; வடலூர் இராமலிங்க அடிகளார் எதிர்த்தார்.

எதிர்ப்பாளர்களை செரி மானம் செய்து ஏப்பம் விட்டது பார்ப்பன ‘வேத மரபு’.

ஆம்! பெரியார் மட்டுமே பார்ப்பனியத்தால் செரிக்க முடியாத ஒரே தலைவர்!

சார்வாகர்களும் – சித்தர்களும் புத்தரும் வடலூர் வள்ளலாரும் பெரியாரும் போராடிய அடிச் சுவட்டில் – வேத மரபு மறுப்புப் போராட்டத்தை தொடரவும் – சமூக நீதியையும் சமத்துவத்தை யும் ஓங்கி ஒலிக்கவுமே இந்த மாநாடு.

வேத மரபை மறப்போம்!

வெகுமக்கள்

உரிமை மீட்போம்!

– என்ற முழக்கத்தோடு

தோழர்களே!

சேலத்துக்கு திரள தயாராவீர்!

15380274_1853864708230754_4402114696103665993_n

பெரியார் முழக்கம் 24112016 இதழ்

You may also like...