மேட்டூரில் ஒரு நாள் பயிலரங்கம்
20-10-2016 அன்று காலை 11-00 மணியளவில் மேட்டூர் பாப்பாயம்மாள் திருமண மண்டபத்தில், சேலம் மேற்கு மாவட்ட கழக சார்பில் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. முற்பகல் அமர்வில் புலவர் செந்தலை கவுதமன் ”திராவிடர் இயக்க வரலாறு” என்ற தலைப்பில் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் கருத்துரையாற்றினார். அதன் பின்னர் தோழர்கள் எழுப்பிய அய்யங்களுக்கு விளக்கம் அளித்தார். மதியம் 2-00 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மதிய உணவுக்குப் பின்னர் பிற்பகல் 3-00 மாணிக்கு தலைவர் கொளத்தூர் மணி “புதியக் கல்விக் கொள்கையும் பழைய குலக் கல்வித் திட்டமும் “ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். அய்யங் களைதலுக்குப் பின்னர் மாலை 5-30 மணியளவில் பயிலரங்கம் நிறைவுற்றது. பயிலரங்க ஏற்பாடுகளை மேட்டூர் நகரக் கழக செயலாளர் சுரேஷ்குமார், குமரேசன் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர். வகுப்பின் துவக்கத்தில், திராவிடர் இயக்கத்தின் அடிவேரான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் அமைப்பின் தொடக்க நாளான 20-11-1916இன் நூற்றாண்டு நிறைவு நாளான அதே 20-11-2016இல் இப் பயிலரங்கம் நடைபெறுவது தனி சிறப்புக்குரியது என்பதை புலவர் கவுதமன் பெருமகிழ்வுடன் குறிப்பிட்டு வகுப்பினைத் தொடங்கினார்.
பெரியார் முழக்கம் 24112016 இதழ்