மேட்டூரில் ஜாதி ஒழிப்பு தெருமுனைக் கூட்டம்

நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு வீரர்களின் நாளில் மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில் தெருமுனைக் கூட்டம் மேட்டூர் ஒர்க்சாப் கார்னர், பேருந்து நிலையம், நான்கு ரோடு, சின்னபார்க் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவின் ஜாதி ஒழிப்பு பாடல்கள் பாடப்பட்டன. தோழர்கள் சி. கோவிந்தராசு-சேலம் மேற்கு மாவட்ட செயலாளர், சுந்தர், குமரேசன் ஆகியோர் உரையாற்றினர். தோழர்கள் குமரப்பா, முத்துக்குமார், கிட்டு, அம்ஜத்கான், சீனிவாசன், முத்துராஜ், சுசீந்திரகுமார், ஆனந்த், அண்ணாதுரை, பழனி ஆகியோர் கலந்துகொண்டனர். பொது மக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

பெரியார் முழக்கம் 08122016 இதழ்

You may also like...