கழகத் தோழர் பாரூக் மீதான குண்டர் சட்டம்: அறிவுரைக் குழுமம் இரத்து செய்தது

கோவையில் 22.9.2016 அன்று இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் டி.சசிக்குமார் என்பவர் அடையாளம் தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை யொட்டி கோவை நகர் முழுதும் கலவரம், தீ வைப்பு, உடைமைகளை அழிப்பது என இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்கள். இதற்காக தமிழகம் முழுதுமிருந்தும்  ஆட்கள் அழைக்கப்பட்டனர். காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. அப்போது உக்கடம் பகுதி திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் பாரூக், குழந்தைக்கு பால் வாங்க வந்தபோது கலவரக்காரர்கள் சூறையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. காவல்துறை ‘இந்து அமைப்பைச் சார்ந்த சிலரையும், இ°லாமியர்கள் சிலரையும் கணக்கு காட்ட கைது  செய்தது. அதில் பால் வாங்க வநத தோழர் பாரூக்கையும் கைது செய்து பின்பு அவர் மீது குண்டர் சட்டத்தையும் ஏவியது.

அதைத் தொடர்ந்து குண்டர் சட்ட விதிமுறை யின் கீழ் நவம்பர் 8ஆம் தேதி சென்னையிலுள்ள அறிவுரை குழுமத்தின் முன்பு பாரூக் நேர் நிறுத்தப் பட்டார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது சட்டப்படி சரியல்ல என்று தோழர் பாரூக் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நீதிபதிகள் முன் வாதிட்டார். தோழர் கொளத்தூர் மணியின் வாதம் மற்றும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த மனு ஆகியவற்றின் அடிப்படையில்  வழக்கைப் பரிசீலித்து அறிவுரைக் குழுமம்  பாரூக்கை விடுதலை செய்தது.

தோழர் பாரூக், குண்டர் சட்டம் இரத்தான செய்தியறிந்து சிறையிலிருந்தபடியே தன் குடும்பத்தாரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு செய்தியை தெரிவித்தார்.

 

பெரியார் முழக்கம் 08122016 இதழ்

You may also like...