கட்டைமைப்பு நிதி வழங்கும் விழா ! 30112016 குருவரெட்டியூர்

ஈரோடு வடக்கு மாவட்டத்தின் சார்பில் முதல் தவணையாக கழக தலைவர் அவர்களிடம் ரூ.1,10,000.00 (ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் மட்டும்) வழங்கப்பட்டது.

கழக தலைமையினால் அறிவிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் கழக கட்டமைப்பிற்கு கழக தோழர்களால் நிதி சேகரிப்பு நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.அதன் ஒரு பகுதியாக ஈரோடு வடக்குமாவட்டத்தின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் தோழர் நாத்திக ஜோதி அவர்கள் தலைமையில் 30.11.2016 அன்று குருவரெட்டியூரில் ”கட்டமைப்பு நிதி பெரும் விழா” நடைபெற்றது.

கழக ஆதரவாளர்களிடம் நிதி திரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஆதரவாளர்கள் ஏராளமாக கலந்து கொண்டு கழகத்திற்கு நிதி உதவி அளித்து ஆதரவளித்தனர்.

அந்நிகழ்வில் மட்டும் திரட்டப்பட்ட நிதியான ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை முதல் தவணை நிதியாக கழக தலைவர் அவர்களிடம் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் நாத்திகஜோதி அளித்தார்.

இந்நிதி வழங்கும் நிகழ்வில் அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி,பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி,தோழர் காவலாண்டியூர் ஈஸ்வரன்,தோழர் செட்டியூர் மாரியப்பன்,தோழர் சூலூர் பன்னீர் செல்வம்,ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் வேணுகோபால்,அம்மாப்பேட்டை செயலாளர் தோழர் வேல்முருகன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவாக அசைவ உணவு வழங்கப்பட்டது.

fb_img_1481379071628 fb_img_1481379101976 fb_img_1481379122550 fb_img_1481379137376

You may also like...