அறிவுரைக் குழுமம் முன் கழகத் தலைவர் வாதம் சென்னை 08112016

இன்று 08.11.2016 மதியம் 2 மணியளவில் அறிவுரைக் குழுமம் முன் கழக தலைவர் அவர்கள் நேரில் வாதுரைக்கிறார்.

கடந்த மாதம் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டதையடுத்து கோவையில் இந்து மதவாதிகள் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தினர்.

அந்த வன்முறை செயல்களுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத கழக தோழர் பாரூக் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு தமிழக காவல் துறை அவரை சிறையில் அடைத்துள்ளது. மேலும் அவர் மீது குண்டர் சட்டத்தையும் பாய்ச்சியுள்ளது.

இவ்வழக்கின் மீதான அறிவுரை குழுமத்தின் விசாரணை இன்று 8.11.2016 மதியம் 2 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அவ்வமயம் நேரில் ஆஜராகி கழக தோழர் பாரூக் அவர்கள் தரப்பு வாதங்களை முன் வைக்கிறார்.

 

You may also like...