தூத்துக்குடியில் புதிய கல்விக்கு எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தூத்துக்குடியில் வடக்கு சோட்டையன் தோப்பில் 24.9.2016 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் பெரியார் 138ஆவது பிறந்த நாள் விழா கல்வியை காவி மயக்கும் புதிய கல்வி கொள்கை 2016யை கண்டித்து பொதுக் கூட்டம் நடை பெற்றது.
மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமை வகித்தார். வடக்கு சோட்டைன், தோப்பு தோழர்கள் கே. சந்திரசேகர், செ. செல்லத் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் ச.கா. பால சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்திய பொதுவுடைமை கட்சி மாநகரச் செயலாளர் எஸ்.பி. ஞானசேகரன், இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்) ஒன்றிய செயலாளர் சங்கரன், கழக மாவட்ட துணைத் தலைவர் வே. பால்ராசு, ஆதித் தமிழர் கட்சி துணைப் பொதுச் செயலாளர் க. கண்ணன், விடுதலை சிறுத்தைக் கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர்காமை. இக்பால், கழகத் தோழர் கோ. அ. குமார், வி.சி.க. தென் மண்டலச் செயலாளர் சொ.சு. தமிழினியன் ஆகியோர் உரைக்குப் பின் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தந்தை பெரியாரின் பணிகள் மற்றும் போராட்டங்களை விளக்கியும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கினையும் விளக்கி உரையாற்றினார். கல்வி காவி மயமாவது மட்டுமல்ல வேலை வாய்ப்புகளிலும் புறக்கணிக்கப்படுவதை குறித்து விளக்கி உரையாற்றினார்.
கழகத் தோழர் கே. சந்திரசேகர் நன்றி கூறினார். கூட்டம் தொடங்கியது முதல் இறுதி வரை கூட்டம் கலையாமல் செவிமடுத்தனர். தோழர்களுக்கு இரவு உணவினை சோட்டையன் தோப்பு கழகக் கிளை தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு பால். பிரபாகரன்தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்தனர்.
பெரியார் முழக்கம 03112016 இதழ்