“பெரியாரியல் பயிலரங்கம்.” – மேட்டூர் 20102016

முற்பகல் அமர்வில் புலவர் செந்தலை ந.கவுதமன் வகுப்பின் துவக்கத்தில் , திராவிடர் இயக்கத்தின் அடிவேரான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் அமைப்பின் தொடக்க நாளான 20-11-1916இன் நூற்றாண்டு நிறைவு நாளான அதே 20-11-2016இல் இப்பயிலரங்கம் நடைபெறுவது தனி சிறப்புக்குரியது என்பதை பெருமகிழ்வுடன் குறிப்பிட்டு வகுப்பினைத் தொடங்கினார். ”திராவிடர் இயக்க வரலாறு” என்ற தலைப்பில் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் கருத்துரையாற்றினார்.

அதன் பின்னர் தோழர்கள் எழுப்பிய அய்யங்களுக்கு விளக்கம் அளித்தார்.

மதியம் 2-00 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டிருந்தது.
மதிய உணவுக்குப் பின்னர் பிற்பகல் 3-00 மாணிக்கு தலைவர் கொளத்தூர் மணி “புதியக் கல்விக் கொள்கையும் பழைய குலக் கல்வித் திட்டமும் “ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.

அய்யங்களைதலுக்குப் பின்னர் மாலை 5-30 மணியளவில் பயிலரங்கம் நிறைவுற்றது.

பயிலரங்க ஏற்பாடுகளை மேட்டூர் நகரக் கழக செயலாளர் சுரேஷ்குமார், குமரேசன் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.

15078537_1842176852732873_2311454034484372086_n 15094912_1842176829399542_4202055279707993121_n 15134817_1842176769399548_6934188611464232378_n 15178934_1842176732732885_8647074043617644191_n 15178936_1842176802732878_4071941060024875546_n 15179215_1842176692732889_5019664324279743837_n

You may also like...