Category: திவிக

தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ! 24042018

தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ! 24042018

தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ! புதிய கிளை பொறுப்பாளர்கள். மாநில அமைப்பு செயலாளர், பிரச்சாரச் செயலாளர் முன்னிலையிலும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது, வரும் மே – 9. முதல் 12 வரை நடைபெறும் திராவிடர் ரதம், பெரியார், அம்பேத்கார் கைத்தடி, கண்ணாடி ஊர்வலம் சிறப்பாக வரவேற்பு கொடுத்து தோழர்களும் கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது, பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்கள் சந்தா சேர்த்து அனுப்புவது,மாதம் ஒரு முறை தோழர்கள் சந்தித்து இயக்க வளர்ச்சி கலந்துரையாடல் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.கலந்துரையாடல் கூட்டத்தில் 25 தோழர்கள் கலந்து கொண்டனர்

மகளிர் தின மாநாடு – கோபி 15042018

மகளிர் தின மாநாடு – கோபி 15042018

மகளிர் தின மாநாடு – கோபி – 15.04.2018. திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக கோபிசெட்டிபாளையத்தில் 15.04.2018 ஞாயிறு அன்று பெண்ணே எழு விடுதலை முழக்கமிடு மகளிர் தின மாவட்ட மாநாடு பெரியார் திடலில் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நிகழ்வாக நிமிர்வு கலைகுழவினரின் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவை இசைமதி மற்றும் திருப்பூர் பெரியார் பிஞ்சு யாழினி ஆகியோர் பெரியார் மற்றும் அம்பேத்கர் பாடல்களை பாடினார்கள். அதனை தொடந்து பெண்கள் பங்கேற்ற வழக்காடு மன்றம் நடைபெற்றது. அதில் பெண்கள் ஒவ்வொரு இடத்திலும் எவ்வாறு அடிமைபடுத்த படுகிறார்கள் என்பது பற்றியும் அதற்கான தீர்வு குறித்தும் வழக்காடு மன்றம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் பொதுகூட்ட மேடை நிகழ்வு தொடங்கியது. நிகழ்விற்கு தோழர் மணிமொழி அவர்கள் தலைமை ஏற்க தோழர் கோமதி வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து தோழர் சிவகாமி அவர்கள் மாநாடு தீர்மானத்தை வாசித்தார். அதனை தொடர்ந்து...

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – நெருக்கடிகளும் தீர்வும் – கருத்தரங்கம் சென்னை 19042018

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – நெருக்கடிகளும் தீர்வும் – கருத்தரங்கம் சென்னை 19042018

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – நெருக்கடிகளும் தீர்வும்” – கருத்தரங்கம். தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 19.04.18 சென்னை YMCA கட்டிடத்தில் “வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – நெருக்கடிகளும் தீர்வும்” கருத்தரங்கம் நடைபெற்றது. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி உரையாற்றினார். மருத்துவர் எழிலன் மற்றும் சட்ட வல்லுனர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். படங்கள் : தோழர் Kugan Oli

கோபி மகளிர் மாநாட்டு தீர்மானங்கள் !

கோபி மகளிர் மாநாட்டு தீர்மானங்கள் !

கோபி மகளிர் மாநாட்டு தீர்மானங்கள் ! 15-4-2018 ஞாயிறு அன்று,ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற மகளிர் தின விழா மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்.: தீர்மானம்: 1 அ) தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு ஆதாரமாகவும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்குக் குடிநீராகவும் பயன்படும் காவிரிநீரை, (அளவில் குறைவாக இருப்பினும்,) கர்நாடக அரசிடம் இருந்து நிரந்தரமாகக் கிடைக்கும் வகையில் வழங்கப்பட்ட; உச்சநீதிமன்றத்தின் தீர்;ப்புக்குப் பின்னரும் சொந்த அரசியல் லாபங்களுக்காக காவிரி மேலண்மைவாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசுக்கு இம்மாநாடு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.. மத்திய அரசு மேலும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக கவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் அமைத்திட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது. ஆ) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திப் போராடிய அனைத்து கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், கலைத் துறையினருக்கும் இம்மாநாடு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள்மீது புனையப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும்...

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வுகள் – விருதுநகர்

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வுகள் – விருதுநகர்

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வுகள் – விருதுநகர். திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள வடமலைக்குறிச்சி யில் அம்பேத்கர் படத்திற்கு ஆசிரியர் செயக்குமார் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. பின் சத்திரெட்டியாபட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு சாதி ஒழிப்பு , மத மாய்ப்பு முழக்கங்களுடன் மாலை அணிவிக்கப்பட்டது.. திக , திமுக , காங்கிரஸ் , ஆதித் தமிழர் கட்சி, திவிக மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ! 15042018

கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ! 15042018

கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ! 15.04.2018 அன்று கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகில் பேரளையூர் கிராமத்தில் ஆசிரியர் அறிவழகன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. நேமம்,வண்ணான்குடிகாடு,கருவேப்பிலங்குறிச்சி,பேரளைர், ஆகிய கிராமங்களை சேர்ந்த 20 புதிய தோழர்கள் அமைப்பில் இணைந்தனர். மாவட்ட, ஒன்றிய,கிளைகழக,மாணவர் கழக பொறுப்புக்கள் புதியதாக நியமிப்பது பற்றியும்,கழகத் தலைவர் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்துவது பற்றியும்,புரட்சி பெரியார் முழக்கம்,மற்றும் நிமிர்வோம் சந்தா சேர்ப்பது பற்றியும் , விவாதிக்கப்பட்டது. இக் கலந்துரையாடல் கூட்டத்தில் கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் நட.பாரதிதாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் அய்யனார்,விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் பூ.ஆ.இளையரசன், சிதம்பரம் நகர செயலாளர்,தோழர் மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அமைப்பை பற்றியும்,பெரியார் அம்பேத்கர் குறித்து கருத்துக்களையும் முன் வைத்தனர். தோழர் முத்து நன்றியுரை கூறிய பின் கூட்டம் நிறைவுற்றது.

தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி

தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி

தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி. 22.03.18 பயணக் குழு காலை தீர்த்தமலை பகுதியில் முதல் நிகழ்வாக 10.30 மணிக்கு தோழர் பெருமாள் அவர்கள் துவக்கவுரையுடன் தொடங்கி மாநில செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் சிறப்புரையாக இழந்து வரும் உரிமைகளையும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் விரிவாக உரைக்கு பின் நன்றியுரையுடன் முடிந்தது மதியம் 12.30 மணிக்கு சங்கிலி வாடியில் தோழர் பெருமாள் தொடக்கவுரைக்கு பின்மாநில செயற்கு உறுப்பினர் தோழர் விழுப்புரம் அய்யனர் அவர்கள் விரிவாக மக்களை பாதிக்கும் திட்டங்களை விளக்கியுரையாற்றினார்கள் பின் தோழர் பெருமாள், மனோகர் இருவரின் குடும்பத்தினர்களுடன் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள், நன்றியுடன்முடித்தது. மதியம் 1.30 க்கு GH கூட்டு ரோடு பகுதியில் தோழர் சந்தோஸ்குமார்தொடங்கி வைத்து உரையற்றினார் பின் சூலூர் பன்னீர்செல்வம், அடுத்து மடத்துக்குளம் மோகன்அந்த பகுதி மக்கள் வாழ்வியலையும் இன்றைய அரசுகளால் ஏற்பட்டு இன்னல்களையும் விரிவாக எடுத்துரைத்தார்கள் 3.00...

தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி 21032018

தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி 21032018

தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி. (21.03.2018) தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் ! நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் மதியம் 12.30 மணிக்கு தொடங்கி சந்தோஸ் குமார்.மடத்துக்குளம் மோகன். கரைக்குடி முத்து உரைக்கு பின் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி அவர்கள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும். ஹைட்ரோகார்ப்பன். மீதேன். TNPSC தேர்வு நிலைபாடுகள் போன்றனவகளை விரிவாக உரையாற்றினர் இறுதியாக மாவட்ட செயலாளர் பரமசிவம் நன்றியுரையுடன் முடிந்து. அடுத்து 3.30 மணிக்கு தருமபுரி பூங்கா அருகில் உள்ள பிரபாகரன் சர் கிள் பகுதியில் மாவட்ட தலைவர் வேணுகோபல் தலைமையில் தொடங்கி திமுக தோழர் பச்சியப்பன்.ஆரூர் பகுதி தி வி க தோழர் பெருமாள் அவர்கள் இன்றைய இளைஞர்களின் கல்வி வேலைவாய்ப்பு எவ்வாறு எல்லாம் பதிக்கப்பட்டு உள்ளது TNPSC தேர்வில் வெளி மாநிலத்தவர்களை ‘ தவிர்க கோரியும் விரிவாக உரையாற்றிய...

“ஆசிஃபாவும் தேசத்துரோகியா?” கண்டன ஆர்ப்பாட்டம் ! சென்னை 20042018

“ஆசிஃபாவும் தேசத்துரோகியா?” கண்டன ஆர்ப்பாட்டம் ! சென்னை 20042018

“ஆசிஃபாவும் தேசத்துரோகியா?” பச்சிளங் குழந்தைகளையும் சீரழிக்கும் மதவெறியைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ! கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில்….. 20.04.2018 மாலை 3 மணிக்கு ஆட்சியாளர் அலுவலகம் அருகில், சென்னை கண்டன உரை : #தெகலான்_பாகவி SDPI #குணங்குடி_அனிஃபா மனிதநேய மக்கள் கட்சி #திருமுருகன்_காந்தி மே 17 இயக்கம் #செந்தில் சேவ் தமிழ் #டைசன் தமிழர் விடியல் கட்சி திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

“கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” – பரப்புரைப் பயணம்.

“கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” – பரப்புரைப் பயணம்.

“கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” – பரப்புரைப் பயணம். ‘தூத்துக்குடியிலிருந்து கீழப்பாவூர் வரை’ தூத்துக்குடி- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” எனும் தலைப்பில் தமிழக மாணவர்களின் உரிமை மீட்பு பரப்புரை பயணம் மாநில பரப்புரை செயலாளர் தோழர்.பால்.பிரபாகரன் அவர்களின் தலைமையில் தூத்துக்குடியிலிருந்து கீழப்பாவூர் வரை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல்14,15 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறது.… See more

இராசிபுரத்தில்  “ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம் ” கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு.

இராசிபுரத்தில் “ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம் ” கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு.

இராசிபுரத்தில் “ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம் ” கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு. இராசிபுரத்தில் திராவிடர்விடுதலைக்கழகத்தின் சார்பில் ஞாயிறு 08.04.18 அன்று”ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. தோழர் வசந்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தோழர் சுமதி மதிவதனி அவர்கள்கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக திமுகவின் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தோழர் வி.பாலு அவர்கள் கலந்து கொண்டார். கருத்துரையாக திரைப்பட துணை இயக்குநர் தோழர் கலைமதி, தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தோழர் வீரா.கார்த்திக், திவிகவின் தலைமைக் கழக பேச்சாளர் தோழர் கோபி.வேலுச்சாமி ஆகியோர் பேசினர். தோழர் ஈரோடு மணிமேகலை அவர்கள் நன்றியுரையாற்றினார்.ஏராளமான கழகத்தோழர்கள் ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

“தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாட்டிற்கான ஆரம்ப பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்.

“தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாட்டிற்கான ஆரம்ப பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்.

“தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாட்டிற்கான ஆரம்ப பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம். 30.04.2018 அன்று “தோழர்.பத்ரி நாராயணன்” அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாளில் இராயப்பேட்டை வி.எம்.தெருவில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கான சுவர் விளம்பர பணியில் கழகத்தோழர்கள். நிலம் பாழ்,நீர் மறுப்பு,நீட் திணிப்பு இவற்றிற்க்கெதிராக “தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாடு நடைபெறவுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

சென்னையில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

சென்னையில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

சென்னையில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக… டாக்டர்.அம்பேத்கர் பிறந்த நாளான 14.04.2018 அன்று காலை 8 மணிக்கு சேத்துபட்டு பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் உருவச்சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து திருவான்மீயூர், பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு, அம்பேத்கர் மணிமண்டபம், மயிலாப்பூர், இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் திருஉருவச்சிலை, படங்களுக்கு மாலை அணிவித்து, முழக்கங்களோடு மரியாதை செலுத்தப்பட்டது. கழகத் தோழர்கள் பலரும் வந்திருந்து மரியாதை செலுத்தினர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

சேலத்தில்  புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

சேலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

சேலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விழுப்புரத்தில்  புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

விழுப்புரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

விழுப்புரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காஞ்சிபுரத்தில்  புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

காஞ்சிபுரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

காஞ்சிபுரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மதுரையில்  புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

மதுரையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

மதுரையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் மதுரை மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளில் சாதி ஒழிப்பு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைப்புகள் தமிழ்த்தேச_மக்கள்_முன்னணி திவிக தபெதிக நாணல்_நண்பர்கள் குறிஞ்சியர்_விடுதலை_இயக்கம் இளந்தமிழகம்

கோவையில்  புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

கோவையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

கோவையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் கோவை மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

திருச்செங்கோட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

திருச்செங்கோட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

திருச்செங்கோட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. கழகத்தோழர்களால் கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் விழா 14.04.2018 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே நடைபெற்றது. கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவிஞர் தோழர் கனல் மதி அவர்களின் வாசிப்பில் கழகத்தின் ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ ஏற்பு கழகத் தோழர்கள் ஏற்க்கப்பட்டது. இந்நிகழ்வின் இடையே பெரியார் பிஞ்சுகள் யாழினி, முத்தமிழ் ஆகியோரின் பிறந்த நாள் அவ்விடத்திலேயே கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு,மாநில அறிவியல் மன்ற தலைவர் தோழர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா,மாநகர பொறுப்பாளர் மாதவன், மாணவர்...

காரைக்காலில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! 17042018

காரைக்காலில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! 17042018

காரைக்காலில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி சார்பில்…… கழகத்தலைவர் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகிறார். தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். நாள் : 17.04.2018 செவ்வாய்க்கிழமை. நேரம் : மாலை 4.00 மணி இடம் : இரயிலடி,புதிய பேருந்து நிலையம் அருகில், காரைக்கால்.

திருப்பூரில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! 22042018

திருப்பூரில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! 22042018

திருப்பூரில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். நாள் : 22.04.2018 ஞாயிறு நேரம் : மாலை 5.00 மணி இடம் : ரங்கநாதபுரம்,ஜீவா நகர்,திருப்பூர். தலைமைக்கழக பேச்சாளர் ‘கோபி வேலுச்சாமி’ அவர்களும் சிறப்புரையாற்றுகிறார். ”காவை இளவரசன்”அவர்களின் ‘மந்திரமா?தந்திரமா?’அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.

கழகக் கொடி தேவைப்படுவோருக்கு

கழகக் கொடி தேவைப்படுவோருக்கு

திராவிடர் விடுதலைக் கழகக் கொடி தேவைப்படும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 7299230363 – கொடி அளவு : 3 ஒ 2    விலை: ரூ.80/= (ரூபாய் எண்பது மட்டும்) பெரியார் முழக்கம் 19042018 இதழ்

கடலூரில் கழகக் கலந்துரையாடல்

கடலூரில் கழகக் கலந்துரையாடல்

15.04.2018 அன்று கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பாக  கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகில் பேரளையூர் கிராமத்தில் ஆசிரியர் அறிவழகனின் மிகச் சிறப்பான ஒருங்கிணைப்பில் கடலூர் மாவட்ட செயலாளர் நட.பாரதிதாசன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர்  பூ.ஆ.இளையராசன் சிதம்பரம் நகர செயலாளர், மதன்குமார்  ஆகியோர் கலந்து கொண்டு அமைப்பு குறித்தும், பெரியார் அம்பேத்கர் குறித்தும் சிறப்பான கருத்துக்களை முன் வைத்தனர். நேமம், வண்ணான்குடிகாடு, கருவேப்பிலங்குறிச்சி, பேரளையூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 20 புதிய தோழர்கள் அமைப்பில் இணைந்தனர். மாவட்ட, ஒன்றிய கிளைக் கழக, மாணவர் கழகப் பொறுப்புகள் நியமனம் பற்றியும், கழகத் தலைவரை அழைத்து பொதுக் கூட்டம் நடத்துவது பற்றியும், புரட்சிப் பெரியார் முழக்கம் மற்றும் நிமிர்வோம் சந்தா சேர்ப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.  முத்து நன்றியுரை கூறிய பின் கூட்டம் முடிவு பெற்றது. பெரியார் முழக்கம் 19042018 இதழ்

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

திருப்பூர் : மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் விழா 14.04.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே நடைபெற்றது. கழக பொருளாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில் புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவிஞர் கனல் மதி வாசிப்பில் கழகத் தின் ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ ஏற்பு கழகத் தோழர்களால் ஏற்கப்பட்டது. நிகழ்வின் இடையே பெரியார் பிஞ்சுகள் யாழினி, முத்தமிழ் ஆகி யோரின் பிறந்த நாள் அவ்விடத் திலேயே கேக் வெட்டி கொண்டாடப் பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாநில அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர பொறுப்பாளர் மாதவன், மாணவர் கழக தேன்மொழி, இணைய தள...

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தளர்த்தாதே! கோவையில் சாலை மறியல்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தளர்த்தாதே! கோவையில் சாலை மறியல்

எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கோவை சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்றது. 10.04.2018 அன்று  நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச்செயலாளர் சிவஞானம் தலைமை வகித்தார். திராவிடர் விடுதலைக் கழக மாநகரத் தலைவர் நேருதாஸ், தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஆறுச்சாமி, ஆதித்தமிழர் கட்சி மாநிலத் தலைவர் வெண்மணி, ஆதித் தமிழர் பேரவை மாநில பொதுச் செயலாளர் நாகராஜ், தமிழ்ப் புலிகள் கட்சிப் பொதுச் செயலாளர் இளவேனில், சமூக நீதிக்கட்சி மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை குண்டு கட்டாகத் தூக்கி கைது செய்தனர். பெரியார்...

அய்.பி.எல். போட்டிக்கு எதிராகக் கழகம் மறியல்

அய்.பி.எல். போட்டிக்கு எதிராகக் கழகம் மறியல்

சென்னை சேப்பாக்கம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என வலியுறுத்தி 10.04.2018 அன்று மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் சாலை மறியலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டத் தோழர்கள் ஈடுபட்டனர். பெரியார் முழக்கம் 19042018 இதழ்

நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டம்

நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டம்

தமிழர்  வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பாக   10.4.2018  அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத  மத்திய அரசைக் கண்டித்து  நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மே-17 இயக்கம், காஞ்சி மக்கள் மன்றம், மக்கள் அதிகாரம், த.மு.மு.க, தமிழ்தேசியப் பேரியக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, விவசாய சங்கங்கள் உள்ளிட்ட  கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சார்பாக 50ஆயிரத்திற்கும் மேலான வர்கள் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழகம்  சார்பாக புதுச் சேரியில் இருந்து லோகு. அய்யப்பன் தலைமையில் 100-க்கும் மேலான தோழர்களும், பெரியார் சிந்தனை மய்யம் சார்பில் தீனாவும் தோழர்களும் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தோழர்கள் ந.வெற்றிவேல், க.இராமர், க.மதியழகன் உட்பட 30-க்கும் மேலான தோழர்களும் ஆத்தூரி லிருந்து  மகேந்திரன், இராமு  உட்பட பல்வேறு பகுதிகளில்  இருந்தும் 300-க்கும்...

இராசிபுரத்தில் தெருமுனைக் கூட்டம்; கருத்தரங்கம்

இராசிபுரத்தில் தெருமுனைக் கூட்டம்; கருத்தரங்கம்

8.4.2018 காலை 10 மணிக்கு இராசிபுரம் பழைய பேருந்து நிலையம், லயன்ஸ் கிளப் ஹாலில் ‘ஆரியம்-திராவிடம்-தமிழ் தேசியம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சுமதி மதிவதனி தலைமை வகித்தார். பிடல் சேகுவேரா முன்னிலையில் திருப்பூர் முத்துலட்சுமி வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் வி. பாலு, கலைமதி (திரைப்பட துணை இயக்குனர்), வீரா. கார்த்திக் (தமிழ்நாடு அறிவியல் மன்றம், மாவட்டச் செயலாளர், ஈரோடு வடக்கு), கோபி. வேலுச்சாமி (தலைமைக் கழகப் பேச்சாளர்) ஆகியோர் கருத்துரையாற்றினர். இறுதியாக மணிமேகலை நன்றி கூறினார். மாலை 6:30 மணியளவில் இராசிபுரம் பழைய கதர்க் கடை அருகே கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் இரா.பிடல் சேகுவேரா, வி. பாலு  (தி.மு.க) ஆகியோர் உரைக்குப் பின் கோபி.வேலுச்சாமி,  கலைமதி (துணைஇயக்குனர், திரைப்படத்துறை) சிறப்புரையாற்றினர். திருப்பூர் சாரதி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 12042018 இதழ்

தருமபுரியில் கழகப் பரப்புரைப் பயணம்

தருமபுரியில் கழகப் பரப்புரைப் பயணம்

20.03.2018 காலை 10.30 மணிக்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பரப்புரைப் பயணம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் ஜிரிஸி இசைக் குழுவின் பறை முழக்கத்துடன் துவங்கியது. நிகழ்வின் நோக்கத்தைத் தொடக்க வுரையாக மாவட்ட அமைப்பாளர் சந்தோசுக்குமார் விளக்கினார். அடுத்து மடத்துக்குளம் மோகன் மந்திரமல்ல. தந்திரமே என்று அறிவியல் விளக்க  நிகழ்ச்சியுடன் பல்வேறு கருத்துகளை தொகுத்து வழங்கினார். கல்வி வேலை வாய்ப்பில் பறி போகும் உரிமைகள் பற்றி ஆரூர் பெருமாள் உரையாற்றினார். அடுத்து பொருளாளர் திருப்பூர் துரைசாமி – விவசாயிகளின் பறிபோகும் உரிமைகள் பற்றிய உரைக்குப் பின் தருமபுரி மாவட்ட செயலாளர் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது. மதிய உணவு சந்தோசு குமாரின் தொழிலகத்தில் வழங்கப் பட்டது. பி.அக்ரகாரம் பகுதியில்  சந்தோஸ் குமார் (மாவட்ட அமைப்பாளர்) தொடக்கவுரையாற்றினார். கொளத் தூர் பகுதி மாணவர் அமைப்பாளர் சந்தோஸ் கல்வி வேலை வாய்ப்புகள் பற்றி உரையாற்றினார், ஆருர் பெருமாள் உரையைத் தொடர்ந்து, இறுதியாக காரைக்குடி முத்து விரிவாக...

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

அய்.பி.எல். சுவர் விளம்பரம் : கழகத் தோழர்கள் அழித்தனர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்கள் இணைந்து 05.04.2018 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “ஐபிஎல் வேண்டாம்” – “காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பைத் தெரிவித்தனர். மந்தவெளி இரயில் நிலையம் முற்றுகை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சார்ந்த மக்கள் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகை யிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். விழுப்புரத்தில் அஞ்சலகம்...

எச். ராஜாவின் திமிர்ப் பேச்சைக் கண்டித்து மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

எச். ராஜாவின் திமிர்ப் பேச்சைக் கண்டித்து மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலையை உடைக்கச் சொன்ன பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி 8.3.2018 அன்று மாலை 5 மணிக்கு மேட்டூர் பெரியார்  பேருந்து நிலையத் தில் மேட்டூர் நகர கழக ஒருங் கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவை இளவரசன் வரவேற்புரை யாற்ற மாவட்டத் தலைவர் சூரியக் குமார் தலைமை தாங்கினார். சு.கிருட் டிணசாமி (தி.மு.க.), எஸ்.பி.ராஜா (நகர அவைத் தலைவர் தி.மு.க.), வைகோ முருகன் (நகர செயலாளர் ம.தி.மு.க.), பாலு, தினேசு (நகர பொறுப்பாளர் நாம் தமிழர் கட்சி), ராசு குமார் (மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை), சிவக்குமார் (மேட்டூர் சட்டமன்ற தொகுதிச் செயலாளர் வி.சி.க.), மெய்யழகன் (மாவட்டச் செயலாளர் வி.சி.க), கருப்பண்ணன் (மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி), அ. சக்திவேல் (கழக மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர்), இ. கோவிந்தராசு (கழக மாவட்டச் செயலாளர்) ஆகியோர்...

மேட்டூரில் மகளிர் நாள் விழா – கலை நிகழ்வுகளுடன் கருத்தரங்கு

மேட்டூரில் மகளிர் நாள் விழா – கலை நிகழ்வுகளுடன் கருத்தரங்கு

மேட்டூர் நகர கழகத்தின் சார்பில் 13.3.2018 மாலை 5.30 மணிக்கு மேட்டூர் சதுரங்காடியில் மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஓ. சுதா வரவேற்புரையாற்றினார். காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் பறை முழக்கத்தோடு பெரியார், அம்பேத்கர் பாடல்களும், சமூக இழிவு, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாடல்களும் பாடினர். மு. கீதா தலைமையுரையாற்றினார். ‘சொத்து உரிமையில் பெண்கள்’ என்ற தலைப் பில் அனிதா, ‘விளம்பரத் துறையில் பெண்கள்’ என்ற தலைப்பில் ப. இனியா, ‘பெரியார் காண விரும்பிய விடுதலைப் பெண்’ என்ற தலைப்பில் கெ. ரூபா, ‘அலுவலகம் செல்லும் பெண்களின் நிலை’ என்ற தலைப்பில் இரண்யா உரையாற்றினர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சுந்தரவள்ளி சிறப்புரையாற்றினர். இந்திராணி நன்றி கூறினார். நிகழ்ச்சியை காயத்திரி, சரசுவதி தொகுத்து வழங்கினர்.  கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளி லிருந்தும் பொது மக்களும் தோழர் களும் பெருமளவில் வந்திருந்து அறிவு விளக்கம் பெற்றனர். இந்நிகழ்வு...

கோவையில் பெரியாரிய பெண்கள் சந்திப்பு

கோவையில் பெரியாரிய பெண்கள் சந்திப்பு

மாவட்ட வாரியாக நடந்து வந்த பெரியாரிய பெண்கள் சந்திப்பு 1.4.2018 அன்று கோவையில் நடந்தது. தோழர்களை உருவாக்குவதற்கும், உருவான தோழர்களை களப்பணியாளர்களாக தயாராவதற்காக வும் இந்த சந்திப்புகள் நடந்து வருகின்றன. கோவையில் இரத்தினசபாபதிபுரத்தில் (ஆர்.எஸ்.புரம்) பெரியார் பெருந்தொண்டர் கஸ்தூரியார் படிப்பகத்தில் அவருடைய மகன் தேவேந்திரன் சந்திப்பு நிகழ்வை நடத்த மகிழ்வுடன் அனுமதி அளித்தார். பெரியார் பிஞ்சு தமிழினி கடவுள் மறுப்பு சொல்லி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். சந்திப்பில் பல்வேறு தலைப்புகளில் தோழர்கள் பேசினர். ‘மதங்கள் பெண்களுக்கு எதிரானவை ஏன்?’ என்ற தலைப்பில் ஆனைமலை வினோதினி, ‘பெரியாரியக்கத்தின் பெண் தளபதிகள் பற்றிய நினைவுகள்’ என்ற தலைப்பில் கோபி மணிமொழி, ‘திராவிடர் இயக்கத்திற்கு முன்னும் பின்னும் பெண்கள் நிலை’ என்ற தலைப்பில் பவானிசாகர் கோமதி ஆகியோர் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். ஒவ்வொருவர் கருத்திற்குமிடையேயும் விவாதங்கள் நடந்தன. இறுதியாக தோழர்களின் சந்தேகங்களுக்கும் மக்களிடையே உறவினர்களிடையே சந்திக்கும் சவால்கள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் சிவகாமி...

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு: ஈரோட்டில் தெருமுனைக் கூட்டம்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு: ஈரோட்டில் தெருமுனைக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக ஈரோடு சி.எம்.  நகரில் 1 .4. 2018 ஞாயிறன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் ஸ்டெர்லைட் ஆலை , நியூட்ரினோத் திட்டம் வழியாக மோடி பயங்கரவாத அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதையும் மக்களிடையே தெளிவுபடுத்தும் தெருமுனைக் கூட்டம்  நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு சி.எம். நகர் பிரபு தலைமையேற்க யாழ் எழிலன் வரவேற்புரை நிகழ்த்தினார். மணிமேகலை, வீரா கார்த்தியைத் தொடர்ந்து தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அரங்கம்பாளையம் கிருஷ்ணன், சித்தோடு கமலக்கண்ணன், சென்னிமலை செல்வராஜ், சௌந்தர், சத்தியராஜ், கோபி தங்கம் போன்றோர் பங்கேற்க மாவட்டப் பொருளாளர் பெ.கிருஷ்ணமூர்த்தியின் நன்றியுரையோடு கூட்டம் சிறப்புடன் முடிந்தது. பெரியார் முழக்கம் 05042018 இதழ்

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்து மூடச் சென்ற கழகத் தோழர்கள் கைது; வழக்குப் பதிவு

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்து மூடச் சென்ற கழகத் தோழர்கள் கைது; வழக்குப் பதிவு

காவிரிப் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகத்தைக் கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னை நுங்கம்பாக் கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்தைக் கழகம் அறிவித்தது. வருமான வரித் துறை அலுவலகம் எதிரே கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் தோழர்கள் தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிட மாட்டோம் என்ற முழக்கத்தோடு வருமான வரித் துறை அலுவலகம் நோக்கி சென்றனர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கழகத் தோழர்களைக் கைது செய்தனர். பூட்டு – பூட்டுச் சங்கிலியை பறி முதல் செய்தனர். மாலை வரை ஆயிரம் விளக்கு சமூகநலக் கூடத் தில் வைக்கப்பட்டு, சொந்தப் பிணையில் காவல்துறை விடுதலை செய்தது. அனைவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை மாவட்டக் கழகப் பொறுப் பாளர்கள் வேழவேந்தன், உமாபதி, ஏசு, செந்தில் (எப்டி.எல்.), மயிலை சுகுமார், தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், ஜாதி...

இந்து – இஸ்லாம் – கிறித்துவ மதங்களின் வன்முறைகள் விளக்கப்பட்டன கோவையில் பாரூக் நினைவேந்தல்

இந்து – இஸ்லாம் – கிறித்துவ மதங்களின் வன்முறைகள் விளக்கப்பட்டன கோவையில் பாரூக் நினைவேந்தல்

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் முதலாமாண்டு நினைவு நாள் – குருதிக் கொடை முகாம் – மத எதிர்ப்புக் கருத்தரங்கம் – நினைவேந்தல் உரைகளுடன் கோவையில் மார்ச் 18 அன்று அண்ணாமலை அரங்கில் நிகழ்ந்தது. கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், உணர்வாளர்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்று, தோழர் பாரூக்கிற்கு வீரவணக்கம் செலுத்தினர். பகல் 11 மணியளவில் அண்ணாமலை அரங்கில் குருதிக் கொடை முகாமை பாரூக்கின் மனித நேயப் பயணத்தில் துணை நின்ற அவரது துணைவியார் ரசிதா பாரூக் தொடங்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் குருதிக் கொடை வழங்கினர். மதத்திற்கு குருதி பேதம் இல்லை என்பதை உணர்த்தும் நோக்கத்துடன் இந்த முகாமை தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பிற்பகல் 4 மணியளவில் ‘வரலாற்றில் மதங்களின்...

சென்னையில் மோடிக்கு கறுப்புக் கொடி 12042018

சென்னையில் மோடிக்கு கறுப்புக் கொடி 12042018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் இந்திய நாட்டின் பிரதமர் மோடியை கண்டித்து இன்று சென்னைக்கு வருகை தந்த மோடிக்கு… கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் தமிழக கூட்டமைப்பு இயக்கங்களுடன் இணைந்து… இன்று (12.04.2018) காலை 8 மணிக்கு கிண்டியில் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். கறுப்புக் கொடி ஏந்தி கண்டன முழக்கத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363 Like

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம் சென்னை 12042018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம் சென்னை 12042018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ததை உடனடியாக திரும்ப பெறக் கோரியும்… கடந்த 4 நாட்களாக சென்னை பல்கலைக் கழகத்தை சார்ந்த மாணவர்கள் கார்த்திக், அன்பழகன், கார்த்திகேயன் ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (12.04.2018) மாலை 7 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன், இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்), அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்)மற்றும் கழகத் தோழர்கள் மாணவர்களை நேரில் சந்தித்து பேசினர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தோழர் பத்ரி நாராயணன் நினைவு நாள் 30042018 சென்னை

தோழர் பத்ரி நாராயணன் நினைவு நாள் 30042018 சென்னை

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்… தோழர்.பத்ரி நாராயணன் நினைவு நாள்… #நிலம்_பாழ்..#நீர்_மறுப்பு..#நீட்_திணிப்பு “தன்மான தன்னுரிமை மீட்பு” மண்டல மாநாடு…. நாள் : ஏப்ரல் 30, 2018 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு… இடம் : வி.எம்.தெரு, இராயப்பேட்டை, சென்னை -14 வாருங்கள் தோழர்களே.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு 14042018 சென்னை

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு 14042018 சென்னை

டாக்டர் அண்ணல்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான நாளை (14.04.2018) கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் காலை 8 மணிக்கு சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக் கொள்கிறோம். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது ! 02.04.2018 – புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி. திராவிடர் விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்காத மத்திய பா.ஜ.க மோடி அரசைக் கண்டித்து . Pause -5:25 Additional visual settings Enter Watch and ScrollClick to enlarge Unmute

திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் ! கைது ! திராவிடர் விடுதலைக்கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி,தமிழ்நாடு மக்கள் கட்சி (வி) ஆகிய அமைப்புத் தோழர்கள் மாவட்டத் தலைவர் தோழர் முகில்ராசு தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்யும் இந்திய நடுவண் பாஜக மோடி ஆட்சியை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் 05.04.2018 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் இரயில் நிலையத்தில் நடைபெற்றது. ரயில் மறியலில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக்கழகம்,தமிழக வாழ்வுரிமைக்கட்சி,தமிழ்நாடு மக்கள் கட்சி (வி) தோழர்கள் கைது செய்யப்பட்டு தற்போது கல்லூரி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சியில் ரயில் மறியல் !

பொள்ளாச்சியில் ரயில் மறியல் !

பொள்ளாச்சியில் ரயில் மறியல் ! திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் 180 பேர் கைது ! 05.04.2018 காலை 09.00 மணிக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி திருவள்ளுர் திடலில் இருந்து பேரணியாக சென்று பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட 180 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர். போராட்டத்தில்,, திராவிடர் விடுதலை கழகம் திமுக தமிழ்நாடு திராவிடர் கழகம் வெல்ஃபேர் பார்ட்டி சிஅய்டியு காங்கிரஸ் தமிழ்ப் புலிகள் தமிழ்நாடு மாணவர் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.

கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை !

கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை !

கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை ! திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் 10 பேர் கைது ! 05.04.2018 காலை 10.30.00 மணிக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திவிக, தமிழ்ப்புலிகள்,பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்ட தோழர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

நாமக்கல் பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் !

நாமக்கல் பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் !

நாமக்கல் பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் நாமக்கல் மாவட்டம் சார்பில்04.04.2018 புதன்கிழமை மாலை 5 மணியளவில் நாசகார ஸ்டெர்லை ஆலையை மூட வலியுறுத்தியும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமலர் நாளிதழ் எரிப்பு !

தினமலர் நாளிதழ் எரிப்பு !

தினமலர் நாளிதழ் எரிப்பு ! தமிழை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை 05.04.2018 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நங்க வள்ளியில் கழகத்தோழர் எரித்து தினமலரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

IPL கிரிக்கெட் சுவர் விளம்பரங்கள் அழிப்பு ! சென்னை

IPL கிரிக்கெட் சுவர் விளம்பரங்கள் அழிப்பு ! சென்னை

IPL கிரிக்கெட் சுவர் விளம்பரங்கள் அழிப்பு ! ”ஐபிஎல்_வேண்டாம் ! காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் !” என்று எழுதி எதிர்ப்பை தெரிவித்தனர் ! 05.04.2018 அன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதியை சார்ந்த தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்களும் இணைந்து…. சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “#ஐபிஎல்_வேண்டாம்” “#காவிரி_மேலாண்மை_வாரியம்_வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பை தெரிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

திராவிடர் விடுதலைக் கழக ‘கொடி”

திராவிடர் விடுதலைக் கழக ‘கொடி”

திராவிடர் விடுதலைக் கழக ‘கொடி” தேவைப்படும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 7299230363 கொடி அளவு : 3×2 விலை : ₹ 80/= (ரூபாய் எண்பது மட்டும்)

சென்னையில் இரயில் நிலையம் முற்றுகை ! கைது !

சென்னையில் இரயில் நிலையம் முற்றுகை ! கைது !

சென்னையில் இரயில் நிலையம் முற்றுகை ! கைது ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியை சார்ந்த மக்கள் இணைந்து… காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகையிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363