விழுப்புரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 19-12-2018 (தி.பி-2049- புதன்) அன்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர் செல்வம், அய்யனார், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். 2019ஆம் ஆண்டிற்கான நிகழ்வுகள் குறித்தும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மற்றும் ‘நிமிர்வோம்’ மாத இதழ் உறுப்பினர் சேர்க்கைக் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. ‘புரட்சிப் பெரியார் முழக்கத்’திற்கான 97 உறுப்பினர்களுக்கான தொகை 9400 ரூபாயை கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கப்பட்டது. கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை கழகத் தலைவர் அறிவித்தார். விழுப்புரம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்களாக தலைவர் – க.மதியழகன், செயலாளர் – க.இராமர், துணைச் செயலாளர்-மு.நாகராசன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட ஒருங்கிணைப் பாளர்- அ.பெரியார் தாசன், அறிவியல் மன்ற அமைப்பாளர்- வீ.முருகன், மாவட்ட அமைப்பாளர்- சி- சாமிதுரை, ரிசிவந்திய ஒன்றிய அமைப்பாளர்- இரா.கார்மேகம், சங்கராபுரம் ஒன்றிய அமைப்பாளராக – வே.இராசேசு, கல்லக்குறிச்சி நகர அமைப்பாளர்- மு.சங்கர் ஆகியோர் நியமிக்கப் பட்டனர்.
பெரியார் முழக்கம் 24012019 இதழ்