பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் உயர்சாதியினருக்கான 10ரூ இடஒதுக்கீடு திட்டத்தை கண்டித்துக்  கல்லக்குறிச்சி  மாவட்டம் சங்கராபுரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மொழிப் போர் தியாகிகளின் தினமான 25-01-2019 (வெள்ளி) அன்று  அவர்களின் நினைவாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலியோடு ஆர்பாட்டம் தொடங்கியது. மாவட்ட துணைச் செயலாளர். மு.நாகராசு தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் செ.வே.இராசேசு, க.மதியழகன், க.இராமர்,பூ.ஆ.இளையரசன் ஆகியோர்  இட ஒதுக்கீடு வரலாறு குறித்தும் உயர்சாதியினருக்கான 10ரூ இட ஒதுக்கீட்டின் பாதிப்புகள் குறித்தும் உரையாற்றினார்கள்.தலைமை செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் பல்வேறு கருத்துகளை தொகுத்து இறுதி உரையாற்றினார்.செ.க.வேலாயுதம் நன்றி உரையாற்றினார்.

பெரியார் முழக்கம் 07022019 இதழ்

You may also like...