Category: திவிக

நாடாளுமன்ற தேர்தல் 2019 – திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிலைப்பாடு

நாடாளுமன்ற தேர்தல் 2019 – திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிலைப்பாடு

  “திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு தீர்மானம்” திருப்பூர் 20.03.2019 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களம் – தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கடந்த அய்ந்து ஆண்டுகால பாஜக நடுவண் ஆட்சியில் தமிழகம் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் தனித்துவத்தோடு நாம் கட்டி எழுப்பிய உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து தமிழ் நாட்டின் மீது போர் தொடுத்தது பாஜக ஆட்சி கல்வி உரிமைகள் பறிப்பு, நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, காவிரி நீர் உரிமையில் வஞ்சகம், மத்திய அரசு பணிகளில் வடநாட்டவர் திணிப்பு, மதவெறி திணிப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு மறுப்பு என்று தமிழகத்தை வஞ்சித்து வந்த பாஜக ஆட்சியை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகமும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கங்களும், அமைப்புகளும் தொடர்ந்து போராடி வந்தோம், அரசின் அடக்குமுறைகளை சந்தித்தோம் நடுவண் ஆட்சி தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று சூளுரைத்து...

“கருஞ்சட்டைக் கலைஞர்” புத்தகம் அண்ணா அறிவாலயத்தில் …

“கருஞ்சட்டைக் கலைஞர்” புத்தகம் அண்ணா அறிவாலயத்தில் …

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் திருச்செங்கோடு கருத்தரங்கில் உரையாற்றிய தொகுப்பு “கருஞ்சட்டைக் கலைஞர்” புத்தகத்தை….. இன்று(19.03.2019)காலை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழகப் பேச்சாளர், நாடாளுமன்ற வேட்பாளர் தோழர்.ஆ.ராசா அவர்களை சந்தித்து…. கழக தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.இரா.உமாபதி மற்றும் ஒ.சுந்தரம் ஆகியோர் புத்தகத்தை வழங்கினர்.ஆ.ராசா அவர்களும் திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்காக 400 புத்தங்களை பெற்றுக் கொண்டார்.

திருப்பூரில் ”பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை” குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்க எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் 18032019

திருப்பூரில் ”பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை” குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்க எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் 18032019

திருப்பூரில் ”பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை” குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்க எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் 18.03.2019 திங்கட்க்கிழமை, மாலை 4.00 மணியளவில், திருப்பூர், மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகம்,திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சுசீலா அவர்கள் தலைமை தாங்கினார். தோழர்கள் தோழர் பார்வதி ,தோழர் முத்துலட்சுமி,தோழர் தேன்மொழி,தோழர் சூலூர் தமிழ்செல்விஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் விடுதலைக் கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, மாவட்டத்தலைவர் தோழர் முகில்ராசு,தலைமைக்குழு உறுப்பினர் தோழர் மடத்துக்குளம் மோகன்,பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, தோழர் சபரி-தமிழ்நாடு மாணவர் கழகம்,விஜயகுமார் – இணையதள பொறுப்பாளர், முகில் இராசு – மாவட்ட தலைவர்,தோழர் பிரசாந்த் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். தோழமை அமைப்புகளின் சார்பில் கண்டன உரையாற்றியவர்கள் : தோழர் முகமது அஸ்லாம்,மாவட்ட செயலாளர்,தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி,தோழர் அருண், திருவள்ளுவர்...

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் !

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் !

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் ! “ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு ” சார்பாக 14.03.2019 வியாழன் காலை 10.30 மணியளவில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஐ.நா. வை ஏமாற்றி நீதியின் பிடியில் இருந்து தப்ப முயலும் இனக்கொலை இலங்கையே தமிழகத்தில் இருந்து வெளியேறு! கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்தி பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வா! என்கிற முழக்கங்களுடன் தி,வி,க,த.பெ.தி.க., விசிக,மநேமக,எஸ்.டி.பி.ஐ,இளந் தமிழகம், தவாக,த.தே.ம.மு.,த.தே.வி.இ.,த.வி.க.,மற்றும் பல்வேறு தோழமை அமைப்பினர் இம்முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தலைகள் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன்,இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், த.பெ.தி.கவின் தோழர் குமரன், த.தே.வி.இ. தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு மற்றும் பல்வேறு அமைப்பை சேர்நத தோழர்கள் கலந்து கொண்டனர். “அபிநந்தனுக்குக்கொரு நீதி? பாலசந்திரனுக்கு ஒரு நீதியா? “இந்திய அரசே! இனக்கொலை இலங்கையைப் பாதுகாக்காதே! கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்து!...

வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்: சென்னையில் கழகம் நடத்திய கருத்தரங்கு

வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்: சென்னையில் கழகம் நடத்திய கருத்தரங்கு

காந்தியார் நினைவுநாளையொட்டி வரலாற்றில் ‘பார்ப்பனிய வன்முறைகள்’ எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை நிருபர்கள் சங்க அரங்கத்தில் 24.2.2019 அன்று மாலை 5 மணியளவில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமை தாங்கினார். கார்த்தி இராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். ‘இந்து இராஷ்டிரத்தின் இரத்த சாட்சிகள்: தபோல்கரி லிருந்து கவுரி லங்கேஷ்வர் வரை என்ற தலைப்பில் தோழர் துரை உரையாற்றினார். கோல்வாக்கர் கூறிய ‘இந்து இராஷ்டிரம்’ குறித்தும் பஜ்ரங்க்தள் ஆர்.எஸ்.எஸ். போன்ற ‘சங்பரிவார்’ அமைப்புகள் இரகசிய செயல் திட்டங்கள், தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் படுகொலைக்குப் பின்னால் உள்ள மதவெறி அமைப்புகள் குறித்தும் விளக்கிப் பேசினார். ‘இராமன் அயோத்தியில் பிறந்தானா? வரலாறும் கற்பிதங்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய மா.கி.எ. பிரபாகரன், இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியே இப்போதுள்ள அயோத்தி இலலை என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்கினார். வால்மீகி இராமாயணம் மட்டுமல்லாது, பல்வேறு இராமாயணங்கள் இருப்பதையும் ஒவ்வொன்றிலும்...

ஈரோடு சித்தோட்டில் தடையைத் தகர்த்து கழகம் நடத்திய மகளிர் நாள் கூட்டம்

ஈரோடு சித்தோட்டில் தடையைத் தகர்த்து கழகம் நடத்திய மகளிர் நாள் கூட்டம்

திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக 08.03.2019 வெள்ளியன்று, சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நடக்கவிருப்பதாக இருந்த  உலக மகளிர் தின விழா நிகழ்விற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. மறுப்பதற்கு அவர்கள் தரப்பு சொல்லியக் காரணங்கள் தர்க்கமற்றவை. உள்நோக்கம் கொண்டவை. இனியும் அவர்களிடம் சுமூகப் போக்குடன் பயணிப்பதென்பது சுயமரியாதையை அடகு வைப்பதற்குச் சமமென உணர்ந்து, தோழர்கள் களமிறங்கினர். மாநிலப் பொறுப்பாளர்களான ப. இரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னிர்செல்வம், மடத்துக்குளம் மோகன் ஆகியோரும் மாவட்டப் பொறுப்பாளர்களான எழிலன், வேணுகோபால், சண்முகப்பிரியன், கிருஷ்ணமூர்த்தி, மரவபாளையம் குமார் ஆகியோரும் மணிமேகலை, ராசிபுரம் சுமதி, ஜோதி, மலர், கவிப்பிரியா, சித்ரா, மகேஷ்வரி, கமலா, சத்யராஜ், சௌந்தர், இந்தியப்பிரியன், ரமேஷ், ரவி, செந்தில் எனப் பெருந்திரளோடு சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கூடினார்கள். அதன்பின் அங்கே வந்த காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டக் கூட்டத்தை எதற்காக நடத்துகிறீர்கள்? சட்டத்தை மீறுகிற செயல் என மிரட்டுகிறத் தொனியில் கூற தோழர்...

தலைநகரில் தொடங்கி வைத்தது திராவிடர் விடுதலைக் கழகம் மணியம்மையார் நூற்றாண்டு விழா; மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

தலைநகரில் தொடங்கி வைத்தது திராவிடர் விடுதலைக் கழகம் மணியம்மையார் நூற்றாண்டு விழா; மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு 2019 மார்ச் 10இல் தொடங்குகிறது. மார்ச் 9ஆம் தேதியன்றே சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டில் அன்னையின் நூற்றாண்டு விழாவை முதன்முதலாக தொடங்கி வைத்துள்ளது. வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு மற்றும் மகளிர் தின விழா, பெரம்பூர் பாரதி சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இராஜி தலைமை தாங்கினார். இரண்யா வரவேற்புரையாற்றினார். தோழர்கள் தேவி, ஜெயஸ்ரீ, வெண்ணிலா, சங்கவி முன்னிலை வகித்தனர். ‘விரட்டு’ கலைக் குழுவினரின் பறை இசை, நாடகம், கலை நிகழ்வுகளோடு நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழ்நாடு அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, மணிமேகலை, புதிய குரல் நிறுவனர் ஓவியா, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். அன்னை மணியம்மையாரின் தியாக வாழ்வு,  எளிமை, பெரியாரை 95 ஆண்டுகள் வரை அவர் உடல்நலன் பேணிக் காத்த அர்ப்பணிப்பு, இராவண லீலா...

புரட்சிப் பெரியார் முழக்கம் வாசகர்களுக்கு…

புரட்சிப் பெரியார் முழக்கம் வாசகர்களுக்கு…

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா அனுப்பிய தோழர்களுக்கு – இதழ் ஒரு வார இடைவெளிக்குப் பிறகே கிடைக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். சந்தா அனுப்பியவுடன் அடுத்த இதழ் உடனே கிடைக்கும் என்று தோழர்கள் எதிர்பார்ப்பு இயல்பானதே. ஆனால் சந்தா கிடைக்கப் பெற்று முகவரிப் பட்டியலில் இணைத்து சந்தாதாரருக்கு சென்றடைவதற்கு இடையில் ஒரு இதழுக்கான கால அவகாசம் தேவையாகிறது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். சந்தா செலுத்திய பிறகு ஒரு இதழ்கூட கிடைக்கவில்லை என்றால் அது நிர்வாகத்தின் கோளாறு. உடனே அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம். இதழ் விட்டு விட்டு கிடைக்கவில்லை என்றால் அது உள்ளூர் அஞ்சலகத்தின் கோளாறு. அஞ்சலகத்திற்கு நேரில் சென்று ஒரு முறை புகார் அளித்தால் இந்த கோளாறை சரி செய்து விடலாம். இதழ் குறித்து தொடர்புக்கு: 9841 489896 (பொறுப்பாளர்) 9444 115133 (ஆசிரியர்) பெரியார் முழக்கம் 07032019 இதழ்

கவிஞர் கலி. பூங்குன்றனுக்கு கழக சார்பில் கொளத்தூர் மணி வாழ்த்து

கவிஞர் கலி. பூங்குன்றனுக்கு கழக சார்பில் கொளத்தூர் மணி வாழ்த்து

23.02.19 அன்று செஞ்சி யில் ‘பெரியார் அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு பெரியார் சாக்ரட்டீஸ் (மாவட்ட செயலாளர்) தலைமையில்  நடைபெற்றது.  மாவட்டக் கழகத் தலைவர் பூஆ.இளைய ராசன் வரவேற்புரையாற்றி னார். நிகழ்ச்சியில்   பழங்குடி மக்கள் முன்னணி சுடரொளி சுந்தரம்,  த.மு.மு.க. சையத் உசேன்,  அம்பேத்கர் மக்கள் கட்சி மழைமேனிப் பாண்டியன் ,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வெற்றிச்செல்வன்,  சி.பி.அய் வட்டச் செயலாளர் செல்வராசு, வர்த்தக சங்க விழுப்புரம் மாவட்டச் செயலாளர் கண்ணன்,   மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே மணி மற்றும்  தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். நிறைவுரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்ச்சி தொடங்கும்போது ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்துள்ளது திராவிடர் கழகத்தின் அடுத்தத் தலைவராக கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் தஞ்சையில் நடக்கும் மாநாட்டில் அறிவித்துள்ளார். எனவே கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களுக்கு நம்...

முகிலன் எங்கே?  சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

முகிலன் எங்கே? சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் படுகொலை குறித்த ஆவணங்களை கடந்த பிப்ரவரி 15 அன்று வெளியிட்ட சூழலியல் போராளி முகிலன் அன்றிரவே காணமல் போனார். அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, “தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்!” என்ற முழக்கத்தோடு 27.2.2019 அன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் முகிலன் காணாமல் போனதற்கு எடப்பாடி அரசும், காவல்துறையுமே பொறுப்பு என்ற கண்டன முழக்கங்களோடு துவங்கிய ஆர்பாட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் துவக்க உரையாற்றினார். தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், தமிழர் விடுதலைக் கழகம் சௌ.சுந்தரமூர்த்தி, டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீபக், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை. திருவள்ளுவன், எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆ.சா.உமர் பாருக், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித்...

பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து ஈரோடு மாவட்டக் கழகம் தீவிரப் பிரச்சாரம்

பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து ஈரோடு மாவட்டக் கழகம் தீவிரப் பிரச்சாரம்

சமூகநீதிக்கும் , ஒடுக்கப்பட்டோருக்கும் எதிராக கூட்டாட்சி நடத்திவரும் பாசிச பாஜகவின் கொடூரத் திட்டங்களை மக்களிடையே எடுத்துரைக்கும் விதமாக திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக பவானி சாலையிலுள்ள மாயவரம் பகுதியில் 24.2.2019 ஞாயிறு மாலை தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. சி.எம்.  நகர் பிரபு தலைமையேற்க, சீ.ரா .சௌந்தர், பி. கிருஷ்ணமூர்த்தி உரைக்குப் பிறகு வீரா கார்த்தி சிறப்புரையாற்றினார். கு. சண்முகப்பிரியன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கு இடம் தெரிவு செய்தும், மின்சாரம் வழங்கியும்,  நிகழ்ச்சி முடிந்தபின் தோழர்களுக்கு தேநீர் வழங்கியும் பெரிதும் தோழமை பாராட்டி நின்றார் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இராமகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவரும். நிகழ்வில் கலந்து கொண்டத் தோழர்கள் : ஜெய பாண்டி, விஜயகுமார், பிடல் சேகுவேரா, சத்யராஜ், குமார், கமலக்கண்ணன், கிருஷ்ணன், பிரபு, விஜயரத்தினம், எழிலன். கூட்டத்தின் முடிவில் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மத்திய பி.ஜே.பி. அரசின் மக்கள் விரோதப் போக்கை மக்களிடையே கொண்டு செல்லும் விதத்தில் தொடர்...

தூத்துக்குடியில்  ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

தூத்துக்குடியில் ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

17.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “திராவிடம் அறிவோம்” என்ற பெயரில் புதிய தோழர்களுக்கான கேள்வி- பதில் நிகழ்வு நடைபெற்றது. இயக்கத்தில் இணைய விரும்பும் தோழர்கள், தோழமை இயக்க தோழர்கள் பெரியார், அம்பேத்கர், திராவிடம், சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்த அய்ய வினாக்களுக்கு விடைதேடும் நிகழ்வாக நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தோழர்களின் அய்ய வினாக்களுக்கு விடையளித்தார். புதிய தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மிகச்சிறப்பான, ஆக்கப்பூர்வமான நிகழ்வாக இது அமைந்தது. பெரியார் முழக்கம் 28022019 இதழ்

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மேட்டூரில் கழக மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராஜன்-மு.கீதா இணையரின் மகள் தேன்மொழி-மணிகண்டன், ஜாதி மறுப்பு மண விழா, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மேட்டூரில் நடந்தது. மணவிழா மகிழ்வாக தோழர் சி.கோவிந்தராஜன், ரூ.10,000 கழக வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளார். கடந்த வார இதழில் வெளி வந்த மணவிழா செய்தியில் பிப்.3 என்பதற்கு பதிலாக ஜனவரி 3 என்று தவறாக வெளி வந்துவிட்டது. மணமகளின் தந்தை சி. கோவிந்தராஜன் பெயரில் கி. கோவிந்தராஜன் என்றும் தவறாக வெளி வந்துள்ளது. தவறுக்கு வருந்துகிறோம். (ஆர்) பெரியார் முழக்கம் 28022019 இதழ்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

16.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆழ்வை ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் உயர்சாதி ஏழைகளுக்கு 10ரூ இட ஒதுக்கீடு என்ற பெயரில் சமூகநீதியை சீர்குலைக்கும் உயர்ஜாதி இடஒதுக்கீட்டைக் கண்டித்து ஆழ்வார் திருநகரியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய திவிக தலைவர் நாத்திகம் முருகேசனார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட திவிக தலைவர் கோ.அ.குமார் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ச.இரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், பால்ராசு,  பிரபாகரன், ஆதித் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரா.வே.மனோகர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

20.02.2019 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில், திராவிடர் விடுதலைக் கழக சார்பில் உயர் ஜாதியினருக்கு 10ரூ இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கள்ளக்குறிச்சி நகர அமைப்பாளர் மு.சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிதாசன், கார்மேகம், ஆசைத்தம்பி, நாகராஜ் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ச.கு. பெரியார் வெங்கட், மாவட்ட செயலாளர க, இராமர், மாவட்ட அமைபாளர் சி,சாமிதுரை, மாவட்ட தலைவர் க. மதியழகன் சங்கை ஒன்றிய அமைப்பாளர் செ.வே. ராஜேஷ்,  பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன் நிறைவுரையாற்றினார். காரனுர் மணி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10032019

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10032019

தமிழக அரசே ..! பொள்ளாச்சி பெண்கள் மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்து, கைது செய்துள்ள குற்றவாளிகளின் மீது பெண்கள் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடை, எஞ்சிய உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து எந்தவித பாரபட்சமும் இன்றி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய், பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கு இந்த வழக்கில் அரசியல் தலையீடுகளை தடுத்து நிறுத்து என வலியுறுத்தி #கண்டன_ஆர்ப்பாட்டம் #தோழர்_வினோதினி தலைமையில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில்… நேற்று (மார்ச் 10) மாலை 5 மணிக்கு நடைபெற்றது … இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை: #பேராசிரியர்_சரசுவதி PUCL _துணைதலைவர் #ஆசிரியர்_சிவகாமி தமிழ்நாடு அறிவியல் மன்றம் கண்டன உரை : #திமுக_நகர_துணைசெயலாளர் நா. கார்த்திகேயன் வெள்ளிங்கிரி யாழ் திவிக மாவட்டச் செயலாளர் #மடத்துக்குளம்_மோகன் திவிக செயற்குழு உறுப்பினர் #திருப்பூர்_துரைசாமி திவிக மாநில பொருலாளர் #காசு_நாகராசன் ஒருகினைப்பாளர், தமிழ்நாடு திக #தேன்மொழி தமிழ்நாடு மாணவர் கழகம் நன்றியுரை...

”பெரியார் சிலைகளை மூடக்கூடாது”  – சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு

”பெரியார் சிலைகளை மூடக்கூடாது” – சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு

”பெரியார் சிலைகளை மூடக்கூடாது”  – சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு (2011 ஆம் ஆண்டு திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு) வரும் 2019 ஏப்ரல் 18 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு அதிகாரிகள் பெரியார் சிலைகளை எங்காவது மறைத்தால் அவர்களிடம் இந்த நீதி மன்ற உத்தரவை காண்பித்து பெரியார் சிலைகளை மறைப்பதை தடுப்பதற்கு இந்த உத்தரவை பயன்படுத்திக்கொள்ளும்படி தோழர்களை கேட்டுக்கொள்கிறோம். (2016 ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி அவர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு) வரும் 2019 ஏப்ரல் 18 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு அதிகாரிகள் பெரியார் சிலைகளை எங்காவது மறைத்தால் அவர்களிடம் இந்த நீதி மன்ற உத்தரவை காண்பித்து பெரியார் சிலைகளை மறைப்பதை தடுப்பதற்கு இந்த உத்தரவை பயன்படுத்திக்கொள்ளும்படி தோழர்களை கேட்டுக்கொள்கிறோம்.

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! திருப்பூர் 15032019

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! திருப்பூர் 15032019

திருப்பூரில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! நாள் : 15.03.2019 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 4.00 மணி இடம் : மாநகராட்சி அலுவலகம் அருகில்,திருப்பூர். தமிழக அரசே ..! பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட எஞ்சியுள்ள உண்மை குற்றவாளிகளையும் உடனடியாக கண்டுபிடித்து எந்தவித பாரபட்சமும் இன்றி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்! பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கு ! இந்த வழக்கில் அரசியல் தலையீடுகளை தடுத்து நிறுத்து என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ! தலைமை : #தோழர்_சுசீலா_அவர்கள். முன்னிலை : #தோழர்கள்_பார்வதி_சங்கீதா_முத்துலட்சுமி_கோமதி. கண்டன உரை : #தோழர்_கொளத்தூர்_மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். #தோழர்_திருப்பூர்_துரைசாமி, பொருளாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். #தோழர்_ஈரோடு_ரத்தினசாமி, அமைப்புச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். #தோழர்_முகில்ராசு, மாவட்டத்தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். #தோழர்_ஆறுமுகம், மாட்டத்தலைவர்,திராவிடர் கழகம், #தோழர்_சண்_முத்துக்குமார், மாநகரத்தலைவர்,த.பெ.தி.க. #தோழர்_துரைவளவன், மாநில துணைச்செயலாளர்,வி.சி.க. #தோழர்_துரை,திருவள்ளுவர் பேரவை. #தோழர்_அபுதாஹீர்,எஸ்டிபிஐ. #தோழர்_அஸ்லம்,த.ம.ஜ.க....

பொள்ளாச்சி கயவர்களை தப்பவிடாதே.! சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 15032019

பொள்ளாச்சி கயவர்களை தப்பவிடாதே.! சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 15032019

*பொள்ளாச்சி கயவர்களை தப்பவிடாதே.!* *சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம்* *சென்னை வள்ளுவர்கோட்டத்தில் வரும் 15.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு* கண்டன உரை : *பேராசிரியர்.சரசுவதி* PUCL *முனைவர்.சுந்தரவள்ளி* த.மு.எ.க.சங்கம் *வழக்கறிஞர். அஜிதா* சென்னை உயர்நீதிமன்றம் *தோழர்.பா.மணியம்மை* திராவிடர் கழகம் *தோழர்.மார்ட்டினா* மனிதி *தோழர்.சுதா காந்தி* த.தே.வி.இயக்கம் *விடுதலை இராசேந்திரன்* திவிக *தோழர்.செந்தில்* சேவ் தமிழ் *தோழர்.பிரவீன்* மே 17 இயக்கம் தோழர்களே அனைவரும் வாரீர்.! *தொடர்புக்கு : 7299230363*

பொள்ளாச்சி மாணவிகள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் 10032019

பொள்ளாச்சி மாணவிகள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் 10032019

பொள்ளாச்சி மாணவிகள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம். நாள் : 10.03.2019 ஞாயிறு நேரம் : மாலை 4 மணி இடம்: திருவள்ளுவர் திடல், பொள்ளாச்சி. கண்டன உரை : “பேராசிரியர் சரசுவதி”, துணைத் தலைவர் (PUCL) திராவிடர் விடுதலைக்கழகம் – பொள்ளாச்சி.

அன்னை மணியம்மையார்  நூற்றாண்டு விழா மற்றும் மகளிர் தின பொதுக்கூட்டம் பெரம்பூர், சென்னை 09032019

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா மற்றும் மகளிர் தின பொதுக்கூட்டம் பெரம்பூர், சென்னை 09032019

“அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா” மற்றும் “மகளிர் தின பொதுக்கூட்டம்.” வட சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்…. நாள் : 09.03.019. சனிக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : பாரதி சாலை, பெரம்பூர், சென்னை. சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் ஓவியா, புதிய குரல். தோழர் சிவகாமி, தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். தோழர் மணிமேகலை. “விரட்டு” கலைக்குழுவினரின் பறையாட்டம், வீதி நாடகம் கலை நிகழ்ச்சி நடைபெறும்

உலக மகளிர் நாள் விழா ! சித்தோடு, ஈரோடு 08032019

உலக மகளிர் நாள் விழா ! சித்தோடு, ஈரோடு 08032019

இன்று (மார்ச். 8 ) மாலை ஈரோட்டில் உலக மகளிர் நாள் விழா ! ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், நாள் : 08.03.2019,வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : பெரியார் நினைவு சமத்துவபுரம்,சித்தோடு, ஈரோடு தோழர் ‘மடத்துக்குளம் மோகன்’ அவர்களின் “அறிவியல் விளக்க நிகழ்ச்சி” நடைபெறும்.

ஈரோடு தெற்கு மாவட்டத்தின் தெருமுனைக்கூட்டம் 24022019

ஈரோடு தெற்கு மாவட்டத்தின் தெருமுனைக்கூட்டம் 24022019

தெருமுனைக்கூட்டம். —————————————- சமூகநீதிக்கும் , ஒடுக்கப்பட்டோருக்கும் எதிராக காட்டாட்சி நடத்திவரும் பாசிச பாஜகவின் கொடூரத் திட்டங்களை..மக்களிடையே எடுத்துரைக்கும் வகையாக திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக பவானி சாலையிலுள்ள..மாயவரம் பகுதியில் 24 / 2 /19 ஞாயிறு மாலை தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. CM நகர் பிரபு தலைமையேற்க..சீ.ரா .சௌந்தர் , P.கிருஷ்ணமூர்த்தி உரைக்குப் பிறகு தோழர் .வீரா கார்த்தி யின் சிறப்புரையாற்றினார். கு. சண்முகப்பிரியன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கு இடம் தெரிவு செய்தும் ,மின்சாரம் வழங்கியும்,  நிகழ்ச்சி முடிந்தபின் தோழர்களுக்கு தேநீர் வழங்கியும் பெரிதும் தோழமை பாராட்டி நின்றார் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தத் தோழர் .ராமகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவரும். நிகழ்வில் கலந்து கொண்டத் தோழர்கள் : ஜெயபாண்டி விஜயகுமார் பிடல்சேகுவேரா சத்யராஜ் குமார் கமலக்கண்ணன் கிருஷ்ணன் பிரபு விஜயரத்தினம் எழிலன்… கூட்டத்தின் முடிவில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது…. மத்திய பி.ஜே.பி. அரசின் மக்கள் விரோதப் போக்கை மக்களிடையே கொண்டுசெல்லும்...

செஞ்சியில் பெரியார் அன்றும் இன்றும் கருத்தரங்கு 23022019

செஞ்சியில் பெரியார் அன்றும் இன்றும் கருத்தரங்கு 23022019

விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 23 -02-19 அன்று செஞ்சியில் பெரியார் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் கருத்தரங்கு பெரியார் சாக்ரட்டீஸ் தலைமையில்  நடைபெற்றது.  மாவட்ட கழக தலைவர் பூஆ.இளையரசன் வரவேற்பு உரையாற்றினார். நிகழ்சியில்   பழங்குடி மக்கள் முன்னனி தோழர் சுடரொளி சுந்தரம்,  த.மு.மு.க சையத் உசேன்,  அம்பேத்கர் மக்கள் கட்சி மழைமேனிப்பாண்டியன் ,  விடுதலைசிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தோழர் வெற்றிச்செல்வன்,  சி.பி.அய் வட்டச் செயலாளர் தோழர் செல்வராசு, வர்த்தக சங்க விழுப்புரம் மாவட்ட செயலாளர் தோழர் கண்ணன்,   மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே மணி, மற்றும்  தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். நிறைவுரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நிகழ்சி தொடங்கும்போது ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்துள்ளது திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை திராவிடர் கழக தலைவர் தஞ்சையில் நடக்கும் மாநாட்டில் அறிவித்துள்ளார். எனவே...

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மேட்டூரில் கழக மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராஜன்-மு.கீதா இணையரின் மகள் தேன்மொழி-மணிகண்டன், ஜாதி மறுப்பு மண விழா, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மேட்டூரில் நடந்தது. மணவிழா மகிழ்வாக தோழர் சி.கோவிந்தராஜன், ரூ.10,000 கழக வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளார். கடந்த வார இதழில் வெளி வந்த மணவிழா செய்தியில் பிப்.3 என்பதற்கு பதிலாக ஜனவரி 3 என்று தவறாக வெளி வந்துவிட்டது. மணமகளின் தந்தை சி. கோவிந்தராஜன் பெயரில் கி. கோவிந்தராஜன் என்றும் தவறாக வெளி வந்துள்ளது. தவறுக்கு வருந்துகிறோம். (ஆர்) பெரியார் முழக்கம் 28022019 இதழ்

தூத்துக்குடியில்  ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

தூத்துக்குடியில் ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

17.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “திராவிடம் அறிவோம்” என்ற பெயரில் புதிய தோழர்களுக்கான கேள்வி- பதில் நிகழ்வு நடைபெற்றது. இயக்கத்தில் இணைய விரும்பும் தோழர்கள், தோழமை இயக்க தோழர்கள் பெரியார், அம்பேத்கர், திராவிடம், சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்த அய்ய வினாக்களுக்கு விடைதேடும் நிகழ்வாக நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தோழர்களின் அய்ய வினாக்களுக்கு விடையளித்தார். புதிய தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மிகச்சிறப்பான, ஆக்கப்பூர்வமான நிகழ்வாக இது அமைந்தது. பெரியார் முழக்கம் 28022019 இதழ்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

16.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆழ்வை ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் உயர்சாதி ஏழைகளுக்கு 10ரூ இட ஒதுக்கீடு என்ற பெயரில் சமூகநீதியை சீர்குலைக்கும் உயர்ஜாதி இடஒதுக்கீட்டைக் கண்டித்து ஆழ்வார் திருநகரியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய திவிக தலைவர் நாத்திகம் முருகேசனார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட திவிக தலைவர் கோ.அ.குமார் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ச.இரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், பால்ராசு,  பிரபாகரன், ஆதித் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரா.வே.மனோகர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

20.02.2019 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில், திராவிடர் விடுதலைக் கழக சார்பில் உயர் ஜாதியினருக்கு 10ரூ இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கள்ளக்குறிச்சி நகர அமைப்பாளர் மு.சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிதாசன், கார்மேகம், ஆசைத்தம்பி, நாகராஜ் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ச.கு. பெரியார் வெங்கட், மாவட்ட செயலாளர க, இராமர், மாவட்ட அமைபாளர் சி,சாமிதுரை, மாவட்ட தலைவர் க. மதியழகன் சங்கை ஒன்றிய அமைப்பாளர் செ.வே. ராஜேஷ்,  பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன் நிறைவுரையாற்றினார். காரனுர் மணி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

பொழிலனின்  “தமிழ் தேசம்” நூல் வெளியீடு

பொழிலனின் “தமிழ் தேசம்” நூல் வெளியீடு

சென்னை புத்தகக் கண்காட்சி 300 அரங்கில் பொழிலன் முன்னிலை யில் (அருவி புத்தக உலகம்) கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘தமிழ் தேசம்” என்ற நூலை ஜனவரி 11ஆம் தேதி மாலை வெளியிட்டார். இந் நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி டைசன் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பை சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பிறகு அரங்கு 222 (பொதுமை பதிப்பகத்தில்) வேல் முருகன் நூலை வெளியிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெற்று கொண்டு உரையாற்றினார்கள். பெரியார் முழக்கம் 07022019 இதழ்

தேன்மொழி – மணிகண்டன் ஜாதி-சடங்கு மறுப்பு மணவிழா

தேன்மொழி – மணிகண்டன் ஜாதி-சடங்கு மறுப்பு மணவிழா

கழகத்தின் மாவட்ட செயலாளர் மேட்டூர் கி.கோவிந்தராஜ்-மு.கீதா இணையரின் மகள் கீ.கோ. தேன்மொழி – திருப்பூர் நா. பரமசிவம்-ப. மாலதி ஆகியோரின் மகன் கழகத் தோழர் ப. மணிகண்டன் ஆகியோர் ஜாதி-சடங்கு மறுப்பு மண விழா ஜன. 3, 2019 பகல் 11 மணியளவில் மேட்டூர் அணை அரசப்பா திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணவிழாவை நடத்தி வைத்தார். மாவட்ட கழகத் தலைவர் ப.கு. சூரிய குமார் வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அ. தமிழரசு, காவல் உதவி ஆய்வாளர் (ஓய்வு) நா. முனியன் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினர் இசை நிகழ்ச்சியும் பறை இசையும் நடைபெற்றது. தமிழ்நாடு முழுதுமிருந்தும் கழகத் தோழர்கள் மணவிழாவுக்கு வந்திருந்தனர். அனைவரும் ‘தமிழின உரிமைக்கு எதிரி யார்?’ நூல் பரிசாக வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 07022019 இதழ்

திருப்பூர் மாஸ்கோ நகரில்  தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழா

திருப்பூர் மாஸ்கோ நகரில் தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழா

திருப்பூரில் நடந்த பொங்கல் விழாவில் கழகப் பொருளாளர் துரைசாமி மற்றும் கழக பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினர். 27.01.2019 ஞாயிறு அன்று  காலை 8.00 மணி முதல் மாலை வரை சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டி பெரியார் திடல், மாஸ்கோ நகரில் நடைபெற்றது காலையில் முதல் நிகழ்வாக பொங்கல்  வழங்கி மாவட்ட தலைவர் முகில்ராசு தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் அகிலன் மற்றும் மாநகர செயலாளர் மாதவன்   விளையாட்டுப் போட்டிகளை திறம்பட நடத்தினர் மாலை ‘விரட்டு” கலைக் குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் 3 மணி நேரம் நடை பெற்றது. பகுத்தறிவு கருத்துகளை எளிய முறையில் நாடக வடிவில் மக்களிடம் பரப்பினர். நிகழ்வில் பறையாட்டம், ஒயிலாட்டம், மயில் காளை ஆட்டம், மான்கொம்பு ஆட்டம், பாடல்கள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்தனர் பெரியார் முழக்கம் 07022019 இதழ்

பாரி சிவா-ஜெயந்தி ஜாதி மறுப்பு மணவிழா

பாரி சிவா-ஜெயந்தி ஜாதி மறுப்பு மணவிழா

தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவா எனும் சிவக்குமார் – ஜெயந்தி (கழகத் தோழர் முழக்கம் உமாபதியின் சகோதரி) ஜாதி மறுப்பு மணவிழா ஜனவரி 27ஆம் தேதி பெண்ணாடம் வள்ளலார் மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடந்தது. இயக்குனர் கவுதமன் வாழ்த்துரை வழங்கினார்.  கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், பரப்புரைச் செயலாளர் பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் உமாபதி, இளையராஜா, சூலூர் பன்னீர் செல்வம் மற்றும் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும், தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனிப் பேருந்தில் மணவிழாவுக்கு வந்திருந்தனர். மணமக்கள் வரவேற்பு சென்னை இராஜா அண்ணாமலைபுரம் சமூக நலக் கூடத்தில் பிப்ரவரி 3ஆம் தேதி மாலை சிறப்புடன் நிகழ்ந்தது. கழகத் தோழர்கள் உறவினர்கள் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சி நிதிக்கு மணமக்கள்...

திருப்பூர் தொழில் துறையை சீரழித்த மோடிக்கு கறுப்புக் கொடி

திருப்பூர் தொழில் துறையை சீரழித்த மோடிக்கு கறுப்புக் கொடி

திருப்பூரில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் ஜனவரி 10, 2019 அன்று திருப்பூர் இரயில் நிலையம் பெரியார்-அண்ணா சிலை அருகே மோடிக்கு கருப்புக் கொடி காட்ட வந்த தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். ‘ஜி.எஸ்.டி. வரி விதிப்புக் கொள்கையால் திருப்பூரில் சிறு, குறு தொழில்களுக்கு மூடு விழா நடத்திய மோடியே திரும்பிப் போ’ என்று முழக்கமிட்டனர். த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பூர், மேட்டூர், ஈரோடு, நாமக்கல்பகுதிகளிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். கூட்டமைப்பு சார்பில் 330 தோழர்கள் கைது செய்யப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம் 07022019 இதழ்

மதவெறியர்களால் மிரட்டப்பட்ட ஓவியர் முகிலனுக்கு பாராட்டு விழா

மதவெறியர்களால் மிரட்டப்பட்ட ஓவியர் முகிலனுக்கு பாராட்டு விழா

இலயோலா கல்லூரி வீதி திருவிழவில் இந்துத்துவப் பாசிசத்தைப் படம் பிடிக்கும் முகிலனின் ஓவியக் கண்காட்சி  இடம் பெற்றிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த சில படங்கள் இந்துக்களைப் புண்படுத்துவதாக பா.ஜ.க. தலைவர் தமிழிசை உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஓவியர் முகிலனை மிரட்டினர்.  இதைத் தொடர்ந்து ஓவியர் முகிலனுக்கு திராவிடர் விடுதலைக் கழக சார்பில்  01.02.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஓவியர் முகிலனுக்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன் தலைமையில் கழகத் தலைமை அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. ஓவியர் முகிலனுக்கு கழகப்  பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சால்வை அணிவித்து பெரியார் சிலை மற்றும் புத்தகம் வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் மனிதி அமைப்பைச் சார்ந்த செல்வி ஆகியோர் முகிலன் அவர்களின் ஓவியங்கள் குறித்தும் இந்துப் பார்ப்பனியப் புரட்டு வாதங்களையும் அம்பலப்படுத்தி  உரையாற்றினர். நிகழ்வை பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்தார். பெரியார்...

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறையில் 09.01.2019 அன்று காலை 11.00 மணியளவில் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் ஈரோடு ரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் குழு உறுப்பினர் நா. இளையராஜா வரவேற்றார். கழக வார பத்திரிகை புரட்சிப் பெரியார் முழக்கம் மற்றும் மாத இதழ் நிமிர்வோம் சந்தா தலைவரிடம் கொடுக்கப்பட்டது. கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகளை கழகத் தலைவர் அறிவித்தார். மாவட்டத் தலைவர்  ம.மகாலிங்கம்; மாவட்ட செயலாளர் தெ.மகேசு; மாவட்ட பொருளாளர் ந.விஜயராகவன்; மாவட்ட அமைப்பாளர் கு.செந்தில் குமார்; மாவட்ட துணைத் தலைவர் தெ. ரமேஷ்; மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் நன்மாறன் மயிலாடுதுறை நகரம்: நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர்; நகர செயலாளர் நி.நடராசன்; நகர அமைப்பாளர் தில்லை நாதன்; நகர துணை தலைவர் ராஜராஜன்; நகர துணை செயலாளர் ஜாகிர் உசேன்....

விழுப்புரம் மாவட்டம் பிரிப்பு: வரவேற்று கழக சார்பில் சுவரொட்டிகள்

விழுப்புரம் மாவட்டம் பிரிப்பு: வரவேற்று கழக சார்பில் சுவரொட்டிகள்

தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்து வந்தது விழுப்புரம் மாவட்டம். பொதுமக்கள் தங்களது பல்வேறு துறை சார்ந்த வேலைகளுக்காகவும்  மாவட்ட ஆட்சியர் சந்திப்பதற்கும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதியதாக கல்லக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கும்படி தமிழக அரசுக்கு பொதுமக்களும் கட்சிகளும் இயக்கங்களும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தன. இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கல்லக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவித்த தமிழக அரசை  வாழ்த்தி நன்றி தெரிவிக்கும் விதமாக கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கல்லக்குறிச்சி மாவட்டத்தில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டன. பெரியார் முழக்கம் 07022019 இதழ்

நாகர் கோயிலில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நாகர் கோயிலில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

சாலை மற்றும் வீதிகளிலும் அரசுஅலுவலகங்களிலும் சாதிப் பெயர்களை அகற்றக் கோரி தெற்கு எழுத்தாளர் இயக்கம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 28.01.2019 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தியது. திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மேற்கு மாவட்டம். சார்பாக தோழர்கள் தமிழ்மதி, நீதிஅரசர் ஆகியோர் கலந்து கொண்டு பெரியாரியல் கருத்துகளை எடுத்துரைத்தனர். பெரியார் முழக்கம் 07022019 இதழ்

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘கருஞ்சட்டைக் கலைஞர்’ நூல் வெளியீடு

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘கருஞ்சட்டைக் கலைஞர்’ நூல் வெளியீடு

திருப்பூர் புத்தக திருவிழா நிமிர்வோம் 35 அரங்கில் கருஞ்சட்டை கலைஞர் புத்தக வெளியீடு புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் வெளி யிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் தோழர் ஈஸ்வரன் முதல் படியை பெற்றுக்கொண்டார் உடன் கவிநிலா பதிப்பகம் தோழர் பாரதி வாசன், கவிஞர் து சோ பிரபாகர், தாய் தமிழ் பள்ளி தாளாளர் எழில், சூலூர் பன்னீர்செல்வம், தமிழ் பண்பாட்டு மய்யம் தோழர் யோகி செந்தில், சேரன் வரைகலை தோழர் ஆனந் ஆகியோர் நிகழ்வை சிறப்பித்தனர் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாவட்ட தலைவர் முகில்ராசு வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் சங்கீதா மற்றும் மாவட்ட அமைப்பாளர் தோழர் மாதவன் மற்றும் தோழர் தனபால் உடனிருந்தனர்                                     செய்தி :  விஜய்குமார் பெரியார் முழக்கம் 07022019 இதழ்

பெங்களூர் வந்த இராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி

பெங்களூர் வந்த இராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி

9-02-2019 காலை 10 மணி அளவில் ‘இந்திய இலங்கை வெளியுறவு கொள்கையின் எதிர்காலம்’  என்ற தலைப்பிலான  இந்துக் குழும நிகழ்வில்  கலந்து கொள்ள பெங்களூருக்கு வந்த இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சேவை கண்டித்து ஆர்ப்பாட்டம் பெங்களுர் ப்ரீடம் பார்க் அருகில் நடந்தது. கருநாடக தமிழர் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் பேரில் பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் உள்பட சுமார் 300 பேர் இந்திய சிங்கள இனக்கொலை கூட்டணியை  அம்பலப்படுத்தியும் இனக்கொலையாளி இராஜபக்சேவே திரும்பிப் போ என்றும் இனக்கொலைக்கு துணை போகிற இந்துக் குழுமம் ராமை கண்டித்தும் எழுச்சியுடன் முழக்கமிட்டனர். திராவிடர் விடுதலைக் கழகம், கருநாடக தமிழர் கட்சி, நாம் தமிழர் கட்சி, கருநாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம், பாசிச எதிர்ப்பு  கூட்டமைப்பு, கருநாடக தமிழர் பேரவை, கன்னட தமிழர் பெடரேசன், கருநாடக தமிழ் மக்கள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தங்க வயல் நாம் தமிழர் கலை இலக்கிய பாசறை, இளந்தமிழகம்,  மே 17...

நிமிர்வோம் தடைகளைத் தகர்த்து… பிப்ரவரி 2019 மாத இதழ்

நிமிர்வோம் தடைகளைத் தகர்த்து… பிப்ரவரி 2019 மாத இதழ்

*”நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….* திராவிடர் விடுதலைக் கழகத்தின் *”பிப்ரவரி 2019″* மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 📚 *தலையங்கம் – அண்ணா தந்த அறிவாயுதங்கள்* 🗞🖋 *வைதீகத்தைத் துளைத்தெடுத்த அண்ணாவின் எழுத்துகள்* 💯 *கீழ்வெண்மணி மறைக்கப்பட்ட வரலாறு* 📜 *10 சதவீத ஒதுக்கீடு : ஒரு ஆய்வு* 📢 *பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல்* 🌍 *மோடி பூமியின் காவலரா?* 💸 *பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000/- கோடி* 👶 *மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது…சமீபத்திய ஆய்வு முடிவுகள்* இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰 *அஞ்சல் வழியாக பெற – ₹ 300/-* 💰 *தனி இதழ் விலை – ₹ 20/-* *தொடர்புக்கு : 7299230363*

வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள் கருத்தரங்கம் சென்னை 24022019

வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள் கருத்தரங்கம் சென்னை 24022019

பிப்ரவரி 24 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை நிருபர்கள் சங்கத்தில் #காந்தியார் நினைவு நாள் #வரலாற்றில்_பார்ப்பனிய_வன்முறைகள்கருத்தரங்கத்தை திராவிடர் விடுதலை கழகம் நடத்துகிறது. சிறப்புரையாற்றுவோர்: தோழர் : #கொளத்தூர்_மணி தலைவர், திராவிடர் விடுதலை கழகம் ( காந்தியார் கொலையின் பிண்ணணி) தோழர் : #விடுதலை_ராசேந்திரன் பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலை கழகம். (புத்தம் – சமணத்தை வீழ்த்திய பார்ப்பனிய வன்முறை) தோழர் : ம.கி.எ. #பிரபாகரன் (இராமன் அயோத்தியில் பிறந்தானா? வரலாறும் கற்பிதங்களும்) தோழர் : #துரை (இந்து ராஷ்டிரத்து ரத்த சாட்சிகள் தபோல்கரிலிருந்து கவுரி லங்கேஷ் வரை) அனைத்து தோழர்களும் அவசியம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு : 9962190066 / 7299230363.

நியாயம்தானா? நீதி கேட்கும் மக்கள் சந்திப்பு இயக்கம் விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை 07022019

நியாயம்தானா? நீதி கேட்கும் மக்கள் சந்திப்பு இயக்கம் விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை 07022019

தமிழ்நாடு திராவிடர் கழகம் நடத்திய 28 ஆண்டுகளாக சிறைவாசம் இன்னமும் தொடர்வது நியாயம்தானா? நீதி கேட்கும் மக்கள் சந்திப்பு இயக்கம் விளக்கப் பொதுக்கூட்டம் பிப்ரவரி 07, 2019 அன்று மாலை 6 மணிக்கு இராயப்பேட்டை , வி.எம்.தெருவில் நடந்தது #தொடக்கவுரை : தோழர்.க.சு.நாகராஜ் ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு திராவிடர் கழகம் #சிறப்புரை : தோழர்.தனியரசு.,எம்.எல்.ஏ தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக தோழர்.திருமுருகன் காந்தி ஒருங்கிணைப்பாளர், மே17 தோழர்.பொழிலன் தமிழக மக்கள் முன்னணி நிகழ்வின் முடிவில் அனைவருக்கும் சென்னை திவிக சார்பில் உணவு வழங்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

திருப்பூர் புத்தக திருவிழா நிமிர்வோம் 35 அரங்கில் கருஞ்சட்டை கலைஞர் புத்தக வெளியீடு

திருப்பூர் புத்தக திருவிழா நிமிர்வோம் 35 அரங்கில் கருஞ்சட்டை கலைஞர் புத்தக வெளியீடு

திருப்பூர் புத்தக திருவிழா நிமிர்வோம் 35 அரங்கில் கருஞ்சட்டை கலைஞர் புத்தக வெளியீடு புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் வெளியிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் தோழர் ஈஸ்வரன் முதல் படியை பெற்றுக்கொண்டார் உடன் கவிநிலா பதிப்பகம் தோழர் பாரதி வாசன், கவிஞர் து சோ பிரபாகர், தாய் தமிழ் பள்ளி தாளாளர் எழில், சூலூர் பன்னீர்செல்வம், தமிழ் பண்பாட்டு மய்யம் தோழர் யோகி செந்தில், சேரன் வரைகலை தோழர் ஆனந் ஆகியோர் நிகழ்வை சிறப்பித்தனர் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாவட்ட தலைவர் முகில்ராசு வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் சங்கீதா மற்றும் மாவட்ட அமைப்பாளர் தோழர் மாதவன் மற்றும் தோழர் தனபால் உடனிருந்தனர் செய்தி – விஜய்குமார்

பிப்.10 திருப்பூரில் “மோடிக்கு கருப்புக்கொடி”

பிப்.10 திருப்பூரில் “மோடிக்கு கருப்புக்கொடி”

நாளை பிப்.10 திருப்பூரில் “மோடிக்கு கருப்புக்கொடி” கழகத் தலைவர் அறிவிப்பு : GST வரியால்  திருப்பூர் பனியன் தொழில் துறை கடும் வீழ்ச்சியடையவும், கோவை சிறுதொழிற்கூடங்கள் ஆயிரக்கணக்கில் மூடவும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கவும் காரணமானவர் பாஜக பிரதமர் மோடி எந்த பயனும் அளிக்காத பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எனும் பெயரில் ஏழை எளிய மக்களை இரவிலும் பகலிலும் தெருவில் நிறுத்தி பல பேர் உயிரிழக்க காரணமானவர் பாஜக பிரதமர் மோடி ஸ்டைர்லைட், மீத்தேன், சாகர் மாலா, கூடங்குளம் என தமிழ்நாட்டை நாசமாக்கும் திட்டங்களை ஆதரிப்பவர் பாஜக பிரதமர் மோடி. 10% பொருளாதார இடஒதுக்கீடு எனும் பெயரில் அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிராக சமூக நீதியை குழி தோண்டி புதைக்க முயல்பவர் பாஜக பிரதமர் மோடி. புயலில் சிக்கிய தமிழக மீனவர்களை, புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடக் கூட வராமல் இப்போது தேர்தலுக்காக தமிழ்நாடு வருபவர் பாஜக பிரதமர் மோடி. தனது...

“கருஞ்சட்டைக் கலைஞர்” – தோழர் கொளத்தூர் மணி

“கருஞ்சட்டைக் கலைஞர்” – தோழர் கொளத்தூர் மணி

“கருஞ்சட்டைக் கலைஞர்” – தோழர் கொளத்தூர் மணி. திருச்செங்கோடு கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய முழு உரை நூல் வடிவில் திராவிடர் விடுதலைக் கழக வெளியீடு…. விற்பனையில்…. *நன்கொடை ₹ 30/-* தொடர்புக்கு : 9841489896/ 044-24980745

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் மோடிக்கு கருப்புக்கொடி !

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் மோடிக்கு கருப்புக்கொடி !

திருப்பூரில் மோடிக்கு கருப்புக்கொடி ! பிப்.10 ஞாயிறு அன்று ! ”மோடியே திருப்பிப்போ!” எனும் முழக்கத்தோடு ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்கிறார் ! நாள் : 10.02.2019 ஞாயிறு நேரம் : பிற்பகல் 1.00 மணி இடம் : புதிய பேருந்து நிலையம், திருப்பூர் தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை அறிவிக்கும் மோடியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு ! பன்னாட்டு முதலாளிகளின் எடுபிடி மோடியே திரும்பிப் போ ! ஒருங்கிணைப்பு : பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு. தொடர்பு எண் : முகில் இராசு – 98422 48174

சங்கராபுரம் ஆணவப் படுகொலை கண்டனக் கூட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணம்

சங்கராபுரம் ஆணவப் படுகொலை கண்டனக் கூட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணம்

பெரியார் அம்பேத்கர் நினைவு நாட்களை முன்னிட்டு  “தமிழக அரசே ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்று” என்கிற தலைப்பில் விழுப்புரம் மாவட்டம் பாக்கம் (சங்கராபுரம்)  கிராமத் தில் 19.12.2018 (தி.பி. 2049 புதன்) அன்று மாலை 5 மணி அளவில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. “அன்னை மணியம்மை”  இசைக் குழுவினரின் பறை இசை மற்றும் பகுத்தறிவு சாதி ஒழிப்பு பாடல்களுடன் கூட்டம் தொடங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் நாகராசன், மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை பகுத்தறிவுப் பாடல்களை பாடினர். கூட்டத்திற்கு இரா.துளசிராசா தலைமை வகித்தார். பெரியார் பிரபு வரவேற்புரை ஆற்றினார். தனிமொழி, சோபனா, முத்துலட்சுமி, செந்தாமரை, சத்யா  மற்றும் இராமச்சந்திரன், நீதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரத்தினசாமி, துரைசாமி, அய்யனார், இராமர்,பெரியார் பாரதிதாசன் ஆகியோர்  ஆணவக் கொலைகளின் பாதிப்புகள் குறித்து உரையாற்றினார்கள். கூட்டத்தில் சாதி மறுப்பு திருமணமும் நடைபெற்றது. பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் நூரோலையைச் சேர்ந்த ரஷ்யா ஆகிய...

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’ அரங்கு

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’ அரங்கு

கழகத்தின் “நிமிர்வோம்” இதழ் அரங்கு கடந்த ஆண்டைப் போலவே திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக அரங்கு (எண்.35) தனியே எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 10 வரை கண்காட்சி நடைபெறுகிறது. அரங்கில் கழக வெளியீடுகள்,  பெரியாரிய, அம்பேத்கரிய மார்க்சிய நூல்களும் கிடைக்கும். தொடர்புக்கு  : முகில் ராசு 9842248174, விஜய்குமார் 9841653200, கவிஞர் தம்பி 9789381010 பெரியார் முழக்கம் 07022019 இதழ்

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் உயர்சாதியினருக்கான 10ரூ இடஒதுக்கீடு திட்டத்தை கண்டித்துக்  கல்லக்குறிச்சி  மாவட்டம் சங்கராபுரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மொழிப் போர் தியாகிகளின் தினமான 25-01-2019 (வெள்ளி) அன்று  அவர்களின் நினைவாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலியோடு ஆர்பாட்டம் தொடங்கியது. மாவட்ட துணைச் செயலாளர். மு.நாகராசு தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் செ.வே.இராசேசு, க.மதியழகன், க.இராமர்,பூ.ஆ.இளையரசன் ஆகியோர்  இட ஒதுக்கீடு வரலாறு குறித்தும் உயர்சாதியினருக்கான 10ரூ இட ஒதுக்கீட்டின் பாதிப்புகள் குறித்தும் உரையாற்றினார்கள்.தலைமை செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் பல்வேறு கருத்துகளை தொகுத்து இறுதி உரையாற்றினார்.செ.க.வேலாயுதம் நன்றி உரையாற்றினார். பெரியார் முழக்கம் 07022019 இதழ்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை மத அடையாளமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை மத அடையாளமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் முகப்பை ஒரு குறிப்பிட்ட மத அடையாளமான கோபுர வடிவில் அமைப்பது இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பற்ற தன்மைக்கு எதிரானது என்பதால் அந்த வடிவமைப்பை கைவிட வேண்டும் என்றும் மேம்படுத்தப்படும் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட வேண்டும் என்றும் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்துத்துவ அமைப்புகள் சார்பில் பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என மாற்றவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்த திராவிடர் விடுதலைக் கழத்தின் மதுரை மாவட்ட செயலாளர்  மா.பா.மணியமுதன் பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றினாலோ, மத அடையாள வடிவமைப்பை வைத்தாலோ தோழமை அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் அறிவிக்கப்படும் என அறிவித்தார். தற்போது “தந்தை பெரியார் பேருந்து நிலையம் எனும் பெயர் மாற்றப்படாது” என மதுரை மாநகராட்சி...