‘ஊபா’ சட்டத்தை இரத்து செய்: சென்னையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன், தோழர்கள் சீனிவாசன், செல்வராஜ் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள ஊபா (ருஹஞஹ) சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 13.02.2021 அன்று காலை 10:30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு, ஊபா சட்டத்தின் அடக்குமுறைகள் பற்றியும், “அரசியல் சக்திகளை முற்றும் முழுமையாக புறக்கணிக்காமல், அந்த அரசியல் சக்திகள் மக்களின் உணர்வுகளை பேசக்கூடியவர்களாக மாற்றி அந்த அரசியல் சக்திகளை கேடயங் களாக பயன்படுத்தி போராட வேண்டும். மேலும், இது போன்ற கூட்டியக்கத்தில்

கலந்து கொண்டிருக்கும் அமைப்புகள் கூட்டியக்கத்தின் நோக்கங்களை பேச வேண்டுமே தவிர அந்த அமைப்புகளின் தத்துவங்களை பேசி இந்த ஒன்றிணைவின் நோக்கத்தை திசை திருப்பாமலும் செயல்பட வேண்டும். ஏனென்றால் தத்துவங்கள் வேறு வேறாக இருப்பதால் தான் நாம் தனித்தனியாக இருக்கிறோம்” என்று உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், சென்னை மாவட்டக் கழக செயலாளர் உமாபதி உட்பட சென்னை கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

 

பெரியார் முழக்கம் 18022021 இதழ்

You may also like...