சைதை அன்பரசு இல்ல மணவிழா

தி.மு.க. பொதுக் குழு உறுப்பினரும் பெரியாரியலாளருமான சைதை மா. அன்பரசன்-காந்திமதி மகள் வின்னி எனும் அறிவு மதி-தமிழன்பன் இணை யேற்பு விழா ஜன.10, 2021 மாலை 6 மணி யளவில் சைதை புனித தோமையர் மண்ட பத்தில் தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர் மா. சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. திராவிடர் கழகப் பரப்புரைச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, மண விழாவை நடத்தி வைக்க, கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வுக்கு ஏராளமான தி.மு.க., தி.வி.க., பெ.தி.க. தோழர்கள் வந்திருந்தனர். புத்தர் கலைக் குழுவினர் பறையிசை, ஆலிவர் வயலின் இசை நிகழ்வுகள் இடம் பெற்றன.

பெரியார் முழக்கம் 21012021 இதழ்

You may also like...